Published:Updated:

முத்தான கையெழுத்து !

தூரிகை சின்னராஜ் ,தி.விஷய்

முத்தான கையெழுத்து !
##~##

'உங்களால் கற்பனை செய்ய முடியும் என்றால், அதை உங்களால் உருவாக்கவும் முடியும்’ என்கிறார் விந்தை   ஓவியர் வால்ட் டிஸ்னி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி சுட்டிகள், கோவை.

என் கையெழுத்து மோசமாக இருக்கிறதே எனக் கவலைப்படாமல் என்னால் முடியும் எனும் நம்பிக்கையை நம் மனதில் விதைத்துப் பயிற்சி செய்தால், வெற்றி நமக்கு விழா எடுக்கும். எனவே, இங்கு நான் குறிப்பிடும் செய்திகளைக் கவனமாகப் படித்து பயிற்சி செய்து வாருங்கள். கனவு உலகில் மட்டும் இன்றி நிஜ உலகிலும் உங்களை நிறையப் பேர் பாராட்டக் காத்துக்கொண்டு இருக் கிறார்கள்.

நாம் எழுதும் எழுத்துகளை ஐந்து நிலைகளாகப் பிரிக்கலாம். 1. நேரான நிலை (செங்குத்து நிலை) 2. முன் நோக்கி சாய்ந்த நிலை (வலதுபுறம் சாய்ந்த நிலை) 3. பின் நோக்கி சாய்ந்த நிலை (இடதுபுறம் சாய்ந்த நிலை) 4. பல கோண சாய்ந்த நிலை (முன், பின் சரிந்த, நேரான மற்றும் கலப்பட நிலை) 5. பல கோணம், பிம்பம் தெளிவற்ற நிலை (கண்ணாடிப் பிம்பம் மற்றும் குழப்ப நிலை). இந்த ஐந்து நிலைகளில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிலையில்தான் நீங்கள் எழுதிக்கொண்டு இருப்பீர்கள். இங்கு உள்ள ஐந்து வித எழுத்து நிலைகளில் எந்த வகை எழுத்துகளுடன் உங்கள் கையெழுத்து ஒத்துப்போகிறது என்பதை ஒப்பிட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இப்போது, ஒவ்வொரு நிலை பற்றியும் அலசி ஆராய்ந்து அதன் நிறைகுறைகளைப் பார்ப்போம்.

முத்தான கையெழுத்து !

நேரான நிலை (செங்குத்து நிலை)

முத்தான கையெழுத்து !

நீங்கள் நேராகச் சாய்ந்த நிலையில் எழுதுபவராக இருந்தால், அதே நிலையில் தொடர்ந்து எழுதலாம். அச்சு எழுத்துகள் பெரும்பாலும் நேராகவே இருக்கும். இந்த நிலை எழுத்துகள், அழகாகவும் படிக்கத் தூண்டும் வகையிலும் அமைந்து இருக்கும். மனிதன் சாதாரணமாக நடக்கும்போது உடல் நேரான நிலையில் இருக்கும். வேகமும் நிதானமாக இருக்கும். அதே போலத்தான் இந்த எழுத்தின் அமைப்பும் தன்மையும். நிதானமாக எழுதுபவர்களால் மட்டுமே இந்த வகை எழுத்துகளை எழுத முடியும். சற்று வேகமாக எழுத விரும்புபவர்கள்... இந்த நிலையில் இருந்து மாறி, இரண்டாம் நிலையான முன் நோக்கிச் சாய்ந்த நிலையில் எழுத முயற்சிக்கலாம். குறிப்பாக, மாணவர்கள் தேர்வில் வேகம் கூட்ட இந்த மாற்றம் உதவியாக இருக்கும்.

முன் நோக்கிச் சாய்ந்த நிலை (வலதுபுறம் சாய்ந்த நிலை)

முத்தான கையெழுத்து !
முத்தான கையெழுத்து !

உங்கள் கையெழுத்து முன் நோக்கிச் சரிந்த நிலையில் இருந்தால், உங்களால் விரைவாகவும் தெளிவாகவும் எழுத முடியும். கணினிப் பயன்பாட்டில் நாம் பயன்படுத்தும் ஃபான்ட் என அழைக்கும் எழுத்துரு, இட்டாலிக்ஸ் என்கிற விசையை க்ளிக் செய்தவுடன் சற்றே முன்புறம் சரிந்து தோற்றம் அளிக்கும். நாம் வேகமாக எழுதவும் படிக்கவும் ஏற்ற முறை இது. பெரும்பாலானோர் பின்பற்றும் இந்த முறை, வேகமாகப் படிக்க நம் கண்களை முன் நோக்கி இயக்குகிறது. அதனால்தான் நாவல்கள் பெரும்பாலும் இந்த வகை எழுத்துருக்களைப் பயன்படுத்தி அச்சடிக்கப்படுகின்றன. நாம் ஓடும்போது நம் உடல் முன் நோக்கிச் சரிவதைப் போல், வேகமாக எழுதப் பலராலும் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த முறை, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏற்ற முறை ஆகும். ஆனால், முன் நோக்கி அதிக அளவில் சாய்த்து எழுதுதல் கூடாது. அப்படி எழுதினால், படுத்த நிலையில் உங்கள் எழுத்துகள் தோற்றமளிக்கும். சற்றே சாய்த்து எழுதினால் போதுமானது. இப்படி எழுதுபவர்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

பின் நோக்கிச் சாய்ந்த நிலை (இடது புறம் சாய்ந்த நிலை)

முத்தான கையெழுத்து !

பின்புறம் நோக்கி உடலைச் சாய்த்து மனிதனால் எப்படி ஓடவோ, நடக்கவோ முடியாதோ... அதேபோல் வேகமாக எழுதவோ, படிக்கவோ முடியாத நிலை இது. படிப்பவர்களின் வேகத்தைக் குறைப்பதுடன் ஒரு விதமான எரிச்சலையும் உண்டாக்கும். எனவே, நீங்கள் நேராக உள்ள நிலையில் எழுதிப் பயிற்சி செய்தால், எதிர்காலத்தில் உங்களால் முன் நோக்கி எழுதி முன்னேறவும் முடியும்.

பல கோண சாய்ந்த நிலை (முன், பின் சரிந்த, நேரான மற்றும்   கலப்பட நிலை)

முத்தான கையெழுத்து !

ஓர் எழுத்து நேராகவும் சில எழுத்துகள் சாய்வாகவும் ஒரு வாக்கியத்தில் அமைத்து எழுதுபவர்கள், சற்றே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்படி எழுதுவதால் படிப்பவர்களுக்குச் சற்று குழப்பம் ஏற்படும். ஆனால், இதை எழுதுபவர்கள் எளிதில் படித்துவிட முடியும். என்றாலும் நாம் எழுதும் பெரும்பாலான நோக்கம் அடுத்தவர் படிப்பதற்குத்தானே. எனவே, இவர்கள் முதலில் நேராக எழுதிப் பழக வேண்டும். அதைத் தொடர்ந்து முன் நோக்கிச் சாய்த்து எழுதிப் பயிற்சி செய்யலாம். நீங்கள் உடனடியாக நேராகவும், சீராகவும் எழுத முயற்சி செய்யுங்கள்.

பல கோணம், பிம்பம் தெளிவற்ற நிலை (கண்ணாடி பிம்பம் மற்றும் குழப்ப நிலை)

முத்தான கையெழுத்து !

ஒரு வாக்கியத்தில் ஓர் எழுத்துக்கும் அடுத்த எழுத்துக்கும் தொடர்பு இல்லாமலும், சில எழுத்துகள் தலைகீழாகவும் சில சமயங்களில் கண்ணாடியில் பார்ப்பது போன்ற மிரர் இமேஜ் பிம்பமாகவும் எழுதுபவர் நீங்களாக இருந்தால் உங்களுக்குள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோ, லியானாடோ டாவின்சியோ வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று அர்த்தம். டிஸ்லெக்சியா எனும் குறைபாடு உங்களுக்கு இருக்கலாம். ஒருபக்கம் இது குறைபாடு என்றாலும் இதன் மூலம் உங்களுக்குள் வேறு அற்புதமான திறமைகளை இது கொடுக்கலாம். மிகப்பெரும் புகழ் பெற்ற பலரும் இந்த வகையில் எழுதியவர்கள் என்று வரலாறு நமக்கு அறிவித்தாலும் வாழ்க்கையில் நாம் எழுதுவது அடுத்தவர்கள் படிப்பதற்கே என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். கீழே உள்ள வாக்கியங்களை ஒரு நிமிடம் படியுங்கள்.

முத்தான கையெழுத்து !

உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளைப் பாட்ராடியே கஆ வேடுண்ம். 100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டிப் பக்டிக முயுடிம். எனான்ல் நபம் முயடில்விலை. எபப்டி தைஇப் பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக் கொடண்து  மதனினின் ளைமூ. ர்ஓ ஆய்ராயிச்சில், கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யைக் கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும் சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். துஇ எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், டைகசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும். பாக்கி உள்ள எத்ழுதுகக்ளைத் தாகனாவே உவாள்ங்கிக் கொளுள்ம்.

வாழ்கையில் நிறைய விஷயங்கள் புதிராகவும், ஆச்சர்யமாகவும் இருப்பதால்தான் அதைச் சுவாரசியமாக அனுபவிக்க முடிகிறது. எனவே, இந்தக் கடைசி வகைக் கையெழுத்தை எழுதுபவர்கள் நீங்களாக இருப்பின், சற்றே கடுமையாக உழைத்துப் பயிற்சிசெய்தல் அவசியம். இத்தகைய பிரிவினர், நிறையப் பயிற்சிக்குப் பின்னரே நேராக எழுத முடியும். எனவே, பயிற்சிகளை பாரம் என்று நினைக்காமல் விளையாட்டில் வாம்-அப் செய்வார்களே அதைப் போல் நினைத்துக்கொள்ளுங்கள். நேசித்துச் செய்யும் எந்த வேலையும் நம்மை வெற்றியை நோக்கியே நகர்த்தும்.

(எழுதுவோம்...)