Published:Updated:

களைகட்டுகிறது உலகக் கோப்பை !

களைகட்டுகிறது உலகக் கோப்பை !

பிரீமியம் ஸ்டோரி
களைகட்டுகிறது உலகக் கோப்பை !

கே.கணேசன்

சுட்டிகள் வரும் மாதங்களில் ரெண்டு ரிசல்ட்டுக்காக ஆவலுடன் காத்திருப்பார்கள். ஒன்று, அவர்களின் தேர்வு ரிசல்ட். மற்றது உற்சாகம் களை  கட்டும் உலகக் கோப்பை கிரிக்கெ

களைகட்டுகிறது உலகக் கோப்பை !

ட் போட்டிகளின் ரிசல்ட்!

போட்டியில் ஆடும் இந்திய அணிக்கு நம்ம ஊர் சுட்டிகளின் சப்போர்ட் ஒரு உற்சாக டானிக்! இந்தியாதான் ஜெயிக்க வேண்டும் என்று நாம் நினைத்தாலும் வீரர்களின் தனித் திறமை, அணித் தலைவரின் சரியான வழிநடத்துதல், அணியின் கூட்டு முயற்சி ஆகியவைதான் கோப்பையை வெற்றிகொள்ள வைக்கும் காரணிகள்.  

போட்டியில் பங்குபெறும் அணிகளைப் பற்றியும் அவற்றின் சிறந்த வீரர்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

முதல்ல நம்ம அணி: டோனியின் தலைமையில் முதல் முதலாக உலகக் கோப்பையில் ஆடுகிறது.    கேப்டன் டோனி அணியினரை உற்சாகப்படுத்தி வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வார். அதற்கு உறுதுணையாக உலகமே

##~##

வியந்து பார்க்கும் சச்சினின் ஆட்டத்திறனும் அனுபவமும் கை கொடுக்கும். தவிர சேவாக், யுவராஜ், கம்பீர், ரெய்னா, யூசுப் பதான், டோனி என பலமான பேட்ஸ்மேன் களின் அணிவகுப்பு. வேறு எந்த அணிக்கும் இத்தனை பேட்ஸ்மேன்கள் இல்லை. வேகப் பந்துக்கு

களைகட்டுகிறது உலகக் கோப்பை !

ஜகீர்கான், ஆஷிஷ் நெஹ்ரா, முனாஃப் படேல்,  சுழல் பந்துக்கு ஹர்பஜன், ப்யூஷ் சாவ்லா என அணிக்கு பலம் சேர்க்கிறார்கள்.

இந்தப் போட்டியை வெல்லும் அணிகளாக கணிக்கப்படும் அணிகள் ஆஸ்திரேலியா,  தென் ஆப்பிரிக்கா,  இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இலங்கை ஆகியவை ஆகும்.

நான்கு முறை கோப்பை வென்றஅணி ஆஸ்திரேலியா. இந்தியாவுக்கு அடுத்து இந்த அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகம். சம அளவில் பேட்ஸ் மேன், போலர், ஆல்ரவுண்டர்கள் இருக்கும் அணி இது. அனுபவம் மிக்க ரிக்கி பான்டிங்கின் வழி நடத்துதலும், டேவிட் ஹஸ்ஸியின் பேட்டிங்கும், பிரட் லீ, ஷான் டைட் ஆகியோரது போலிங் வியூகமும் வெற்றிக்கு உத்தரவாதம்.

தென் ஆப்பிரிக்க  அணி: மூன்று முறை அரை இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தாலும்,  வெற்றிக் கோப்பையை வெல்ல வில்லை. ஸ்மித் தலைமையிலான இந்த அணி, இந்த முறை எப்படி யும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற சபதத்துடன் போட்டியை சந்திக்கிறது. பேட்டிங்கில் கலக்கும் ஹஸிம் அம்லா, ஆல் ரவுண்ட ரான ஜாக் காலிஸ் ஆகியோரை நம்பி களத்தில் உள்ளது. இளம் பந்து வீச்சாளர் இம்ரான் தஹிர். இவருடைய பந்து வீச்சு தங்களை வெற்றி பெற வைக்கும் என நம்பு கிறார்கள்.

களைகட்டுகிறது உலகக் கோப்பை !

சாஹித் அப்ரிடியின் தலைமையில் களம் இறங்குகிறது பாகிஸ்தான் அணி. பேட்டிங்கில் ஷெஷாட், யூனுஸ்கான், மற்றும் அப்ரிடியும் போலிங்கில் ஜுனைத் கான், ஷோயிப் அக்தர் ஆகியோர் அணிக்கு கை கொடுப்பார்கள்.  

முதல் இரண்டு உலகக் கோப்பைகளை வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. டோரோன் சாம்மி தலைமையில் மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்லப் போராடும். நின்று ஆடும் சந்தர்பால், அடித்து ஆடும் கிறிஸ் கெயில், அதிரடி ஆட்டக்காரர் ட்வேயன் ப்ராவோ மற்றும் போலார்ட் இந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

இங்கிலாந்திலிருந்துதான் கிரிக்கெட் வெளி நாடுகளுக்குப் பரவியது. ஆனால், ஒரு முறை கூட இவ்வணி உலகக் கோப்பையை வென்றது இல்லை. இந்த முறையாவது கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்று முடிவுடன் ஆன்ட்ரூஸ் ஸ்டாரஸ் தலைமையில், பேட்டிங்குக்கு போப்ரா, கெவின் பீட்டர்சனையும், பந்துவீச்சுக்கு ஸ்டார்ட் ப்ராட், ஜேம்ஸ் ட்ரட்வெல் ஆகியோரையும் நம்பி களம் இறங்குகிறது. ஆல்ரவுண்டரான பால் காலிங்வுட் மேலும் பக்க பலமாக இருப்பார்.

எந்த அணி வெற்றி பெற்றாலும் த்ரிலிங்கான அனுபவத்துக்கு தயாராக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

உலகக் கோப்பை... சில சாதனைகள்!

 அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் - மெக்ராத், 17 விக்கெட்டுகள்.

அதிக கேட்ச்கள் பிடித்தவர் - ரிக்கி பான்டிங், 25 கேட்சுகள்.

அதிகப் போட்டிகளில் ஆடியவர் - ரிக்கி பான்டிங், 39 போட்டிகள்.

அதிக முறை சதம் அடித்தவர்கள் - சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பான்டிங், 4 சதங்கள்.

அதிக முறை அரை சதம் அடித்தவர் - சச்சின் டெண்டுல்கர், 13

ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணி - இந்தியா. பெர்முடா அணிக்கு எதிராக 413 ரன்கள்.

மிகவும் குறைந்த ரன்கள் எடுத்த அணி - கனடா. இலங்கைக்கு எதிராக 36 ரன்கள்.

அதிக போட்டிகளில் அணித் தலைவராய் இருந்தவர் _ ஸ்டீபன் ஃபிளமிங், 26 போட்டிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு