Published:Updated:

நெட்டிஸம்

உங்களுக்காகவே ஓர் இணைய அகராதி !சைபர்சிம்மன்

பிரீமியம் ஸ்டோரி
நெட்டிஸம்
##~##

ப்போது எல்லாம் புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டறிய தலையணை அளவு அகராதியைப் புரட்டுவது இல்லை. அதைவிட, இணையத்தில் உள்ள அகராதியில் புரியாத வார்த்தையை டைப் செய்து அர்த்தத்தைத் தேடுவது சுலபமாக இருக்கிறது.

பிரபலமான ஆக்ஸ்ஃபோர்டு அகராதி (http://oxforddictionaries.com) முதல் மரியம் வெப்ஸ்டர் அகராதி (http://www.merriam-webster.com)வரை அனைத்து புகழ்பெற்ற அகராதிகளுக்கும் இணையப் பதிப்பு இருக்கிறது. இத்துடன், தி ஃப்ரீ டிக்ஷ்னரி (http://www.thefreedictionary.com)ஒன்லுக் டாட் காம் (http://www.onelook.com) போன்ற இணைய அகராதிகளும் இருக்கின்றன.

எனவே, இணையத்தில் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிப்பது ரொம்பவே சுலபமானது. நீங்களும் இந்த இணைய அகராதிகளைப் பயன்படுத்தி, ஆங்கிலக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் அர்த்தம் தெரிந்து படித்து மகிழலாம்.

இப்படி அகராதியைப் பயன்படுத்துவதில் ஆர்வம் இருந்தால், உங்களுக்கு என்றே உருவாக்கப்பட்டு உள்ள இணைய அகராதியை யும் பயன்படுத்திப் பார்க்கலாம்.

லிட்டில் எக்ஸ்ப்ளோரர்ஸ் (Little explorers) எனும் அந்த இணைய அகராதி, நீங்கள் அர்த்தங்களை எளிதில் தெரிந்துகொள்ள உதவும். ஆம். இந்த அகராதி சிறுவர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டு உள்ளது என்பதால், இதில் வார்த்தைகளுக்கான அர்த்தங்களை அழகான புகைப்படங்களின் துணையோடு பார்க்கலாம்.

நெட்டிஸம்

என்சேன்டட் லேர்னிங் டாட் காம் (www.enchantedlearning.com) எனும் கல்வித் தளத்தின் ஓர் அங்கம்தான் இந்த இணைய அகராதி. இதில் ஆங்கில எழுத்துகள் அகர வரிசைப்படி இடம்பெற்றுள்ளன. உங்களுக்கு எந்தச் சொல் தேவையோ, அந்தச் சொல்லுக் கான எழுத்தைக் க்ளிக் செய்தால், அந்த எழுத்தில் துவங்கும் வார்த்தைகளின் பட்டியல் தோன்றுகிறது.

எல்லா வார்த்தைகளும் அவற்றுக்கான புகைப்பட விளக்கத்தோடு இருப்பதால், அந்தச் சொல் உணர்த்தும் பொருளைக் காட்சிரீதியாகவும் புரிந்துகொள்ளலாம். அவற்றுக்கான எளிய விளக்கங்களும் உள்ளன. அது மட்டும் அல்ல, பெரும்பாலான வார்த்தைகளுக்குத் தனிப் பக்கமும் இணைப்பாகக் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்தப் பக்கத்தில் க்ளிக் செய்தால், கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்வதோடு, தொடர்புடைய வார்த்தைகளின் இணைப்புகளையும் பார்க்கலாம்.

அகர வரிசை எழுத்துகளின் கீழ் பார்த்தால், வரிசையாகப் பல்வேறு வகையான சொற்களின் பட்டியலும் இருக்கிறது. வினைச்சொல், பறவைகள், ஆடைகள், கணிதம், உணவு, இசை என வித விதமான பிரிவுகளில் பட்டியல் இடப்பட்டு உள்ளன. இந்தச் சொற்களை க்ளிக் செய்தாலும், அந்தப் பிரிவுக்கான தனிப் பக்கம் வந்து நிற்கிறது. அந்தப் பக்கத்தில் மீண்டும் அழகான புகைப்படங்களோடு தொடர்புடைய சொற்களுக்கான விளக்கங்கள் இடம்பெறுகின்றன. அந்தச் சொற்களைக் க்ளிக் செய்தால், அவை ஒவ்வொன்றுக்கான தனிப் பக்கங்கள் தோன்றுகின்றன.

நெட்டிஸம்

ஆங்கில மொழிச் சொற்களுக்கான அகராதி என்றாலும், ஆங்கிலத்தில் இருந்து டச்சு, ஃப்ரெஞ்ச், இத்தாலி, ஜெர்மன், ஜப்பான், போர்ச்சுகீசியம் ஆகிய மொழிகளுக்கான அர்த்தங்களைப் பார்க்கும் வசதியும் இருக்கிறது.

அப்படியே ஸ்க்ரோல் செய்து கீழே வந்தால், சிறுவர்களுக்கான பாதுகாப்பான இணையப் பயன்பாடு பற்றிய குறிப்புகளும் கொடுக்கப்பட்டு உள்ளன. அதற்கும் கீழே வந்தால், அகராதியை வகுப்பில் பயன்படுத்து வதற்கான பயிற்சிக் குறிப்புகளும் உள்ளன. வார்த்தைகளைப் படிப்பதற்கு வசதியாக வரைபடமாக அச்சிட்டுக்கொள்ளும் அம்சமும் உள்ளது. அப்புறம் என்ன? புரட்டுங்கள் அகராதியை.

வலைத்தள முகவரி: http://www.enchantedlearning.com/Dictionary.html

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு