##~##
''மை டியர் ஜீபா... நாங்கள் வகுப்பில் பயன்படுத்தும் கரும்பலகையைக் கண்டுபிடித்தது யார்?''

  -ம.நவின்குமார், மேச்சேரி.

''ஸ்காட்லாண்டின் எடின்பர்க் நகரில் 1128-ம் ஆண்டில் நிறுவப்பட்ட பள்ளி, 'ராயல் ஹை ஸ்கூல்.’ இங்கே, தலைமை ஆசிரியராக இருந்த ஜேம்ஸ் பில்லன்ஸ் (யிணீனீமீs றிவீறீறீணீஸீs) என்பவர்தான் முதல் முதலாக கரும்பலகையை அறிமுகம் செய்தார். அதே 11-ம் நூற்றாண்டில் இந்தியர்களும் கரும்பலகையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதன் பிறகே உலகம் முழுவதும் இது பரவியது. 1800-ம் ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கப் பள்ளிகளில் கரும்பலகைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அவர்கள் அதற்கு சாக்போர்டு (நீலீணீறீளீதீஷீணீக்ஷீபீ) என்று பெயரிட்டார்கள். தொடக்க காலத்தில் 'சிலேட்’ எனப்படும் கற்களில் இந்தக் கரும்பலகைகளைச் செய்தார்கள். இப்போது, கரும்பலகைகள் வேறு வண்ணங்களில் ஆடைகள் அணிய ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக, பச்சை நிறத்தில் பட்டையைக் கிளப்புகின்றன.''     

மை டியர் ஜீபா !

''ஹலோ ஜீபா... கொசுக்களில் எத்தனை வகைகள் இருக்கு?''

     -சி.விஜயாம்பாள், கட்டிகானப்பள்ளி.

  ''உலகம் முழுக்க 3,500 வகையான கொசுக்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டு இருக்கிறது. இவற்றின் மூலம் டெங்கு போன்ற உயிருக்கு ஆபத்தான நோய் முதல், சாதாரணக் காய்ச்சல் வரை ஆண்டுதோறும் மில்லியன்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இன்னொரு விஷயம் தெரியுமா விஜயா? பாக்டீரியாவில் நன்மை செய்வது, தீமை செய்வது என்று பல வகைகள் உள்ளன. பாம்பு வகைகளில்கூட விஷம் உள்ளவை, விஷம் அற்றவை என்று உள்ளன. ஆனால், கொசு வகைகள் அத்தனையுமே டேஞ்சர் பார்ட்டிகளே.''

மை டியர் ஜீபா !

''ஜீபா... எனக்கு ஒரு பெருத்த சந்தேகம். 'கா...கா’ என்று கத்துவதால் காகம் பெயர் வந்ததா, அல்லது காகம் என்று பெயர் வைத்ததால் 'கா...கா’ என்று கத்துகிறதா?''

  -எஸ்.ஆர்.சுந்தர் தீபக், கோவை.

''காகம் எனப்படும் காக்கைகள், முதன் முதலில் மத்திய ஆசியாவில் தோன்றின. பிறகு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா என உலகம் முழுவதும் பரவின. தென் அமெரிக்கா மற்றும் சில சிறு தீவுகளைத் தவிர, உலகம் முழுக்கவே காகங்கள் உள்ளன. அங்கே எல்லாம் அந்தந்த மொழிகளில் வேறு வேறு பெயர்களில் அவை அழைக்கப்படுகின்றன. சிந்திக்கும் ஆற்றல்கொண்ட மனிதன் தனக்குப் பெயரை வைத்துக்கொண்டதுடன், மற்ற உயிரினங்களுக்கும் பெயர்களை வைத்தான். ஆனால், அதற்கு முன்பே 'கா...கா’ என்றுதான் காக்கைகள் கத்திக்கொண்டு இருந்தன. ஸோ, நாம் பெயரை வைத்ததால் அது தன் குரலை மாற்றிக்கொள்ளவில்லை.''

மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... கந்தல் துணி, வைக்கோல் இவற்றை எல்லாம் சேர்த்துக் காகிதம் தயாரிப்பார்கள் என்று என் நண்பன் சொல்கிறான் நிஜமா?''

  -பா.கோகுலவாசன், ஆத்தூர்.

''உண்மைதான் கோகுல். காகிதங்களில் பல வகைகள் உண்டு. உபயோகிக்கும் தன்மைக்கு ஏற்ப மரக் கூழுடன் பிற பொருட்களைச் சேர்க்கிறார்கள். உதாரணமாக, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கை மற்றும் வாய் துடைக்கப் பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர் மிக மெல்லியனவாக இருக்கும். இதற்குக் காகிதக் கூழுடன் பருத்தியைச் சேர்ப்பார்கள். அட்டைப் பெட்டி போன்ற கனமான விஷயங்களுக்கு மரக்கூழுடன் வைக்கோல், சணல் துண்டுகளைச் சேர்க்கிறார்கள். உன் வீட்டில் உபயோகம் இல்லாத அட்டைப் பெட்டி இருந்தால், அதை எடுத்துப் பிரித்துப் பார். ஒட்டப்பட்ட இரண்டு தாள்களுக்கு இடையே வைக்கோல் துணுக்குகளைக் காணலாம். இதேபோல் வால்பேப்பர்கள் தயாரிப்பில் கம்பளி, கந்தல் துணி ஆகிவற்றைக் காகிதக் கூழுடன் சேர்ப்பது உண்டு.''

''ஹாய் ஜீபா... உலகம் முழுக்க எத்தனை நகரங்கள் இருக்கின்றன?''

   -ஆர்.நிதிஷ்குமார், சந்தவாசல்

''நகரம் என்பது, நாட்டிற்கு நாடு மக்கள்தொகை மற்றும் பரப்பளவில் வித்தியாசம்கொண்டது. 10 லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்களும் உண்டு. ஒரு லட்சம் பேர்கொண்ட நகரங்களும் உண்டு. பெரு நகரங்கள், சிறு நகரங்கள் என உலகம் முழுக்க சுமார் 24 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரங்கள் இருப்பதாகக் கணக்கிட்டு இருக்கிறார்கள்''  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு