Published:Updated:

சுட்டி தியேட்டர் - CZ12

பி.விவேக் ஆனந்த் படங்கள் : என்.ஜி.மணிகண்டன்

சுட்டி தியேட்டர் - CZ12

பி.விவேக் ஆனந்த் படங்கள் : என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:
##~##

'''இதுதான் எனது கடைசி ஆக்ஷன் படம்’ என்று சொல்லிவிட்டார் ஜாக்கி சான். விடுவோமா நாங்க? ரிலீஸ் ஆன முதல் நாளே தியேட்டரில் இருந்தோம்'' என்றார்கள் சில திருச்சி சுட்டிகள். படம் குறித்து அவர்களின் விமர்சனம்...

கஸ்தூரி: ''1860-களில் நடந்த பிரிட்டிஷ் சீனா  போரில் பீஜிங் நகரத்தில் இருக்கும் ஓர் அரண்மனையின் பொக்கிஷங்களைக் கொள்ளை அடிக்கிறாங்க. 150 வருடங்கள் கழிச்சு அந்தப் பொக்கிஷங்கள் என்ன ஆச்சுங்கிறதுதான்  கதை.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஜிரா: '' 'ஆர்மர் ஆஃப் காட்’ படங்களின் வரிசையில் இது மூன்றாம் பாகம். ஒரிஜினல் சிலைகளைக் கடத்தி, அதன் மூலம் போலி சிலைகளை உருவாக்கும் ஒரு நிறுவனத்துக்காக, கொள்ளைபோன பொருள்களைக் கண்டுபிடிக்கும் வேலையில் நண்பர்களுடன் இறங்குறார் நம்ம ஜாக்கி. அவர் வருகிற முதல் காட்சியில் ஆரம்பிக்கிற ஆக்ஷன் படம் முடிகிற வரைக்கும் தொடருது.''

சுட்டி தியேட்டர் -  CZ12

திவ்யா: ''உண்மைதான். சேஸிங் சீன்ல உடல் முழுக்க ஸ்கேட்டிங் மாதிரி கட்டிக்கிட்டு சாலையில் மின்னலாகப் போறார். இப்படித் தரையில் ஆரம்பிக்குது ஆக்ஷன். தண்ணீரில், காட்டில் மரங்களுக்கு நடுவில், ஆய்வுக்கூடத்தில் மெத்தை மேல் சண்டைனு தொடர்ந்து க்ளைமேக்ஸில் வானில் பறந்தும் சண்டை போட்டு பிரமிக்கவைக்கிறார். இதைப் பார்க்கிறப்ப இனி ஆக்ஷன் படங்களில் நடிக்க மாட்டேன்னு அவர் சொன்னதை நினைச்சு ஏக்கமா இருக்கு''

கேசவ யாஷினி : ''ஜாக்கி படம்னா காமெடிக்குப் பஞ்சமே இருக்காது. காட்டுக்குள்ளே ரெண்டு வில்லன் கோஷ்டிகள் செய்ற அலப்பறை வயிறைப் புண்ணாக்குது. அதே மாதிரி ஒரு மரம் முழுக்க இருக்கிற தங்கக் கட்டிகளைக் கடலில் எடுத்துட்டுப் போகும்போது உதவிக்கு வந்த பெண்ணிடம் அதை மறைக்க ஜாக்கியும் நண்பர்களும் படும் அவஸ்தையும் நல்ல காமெடி.''

சுட்டி தியேட்டர் -  CZ12

காவ்யஸ்ரீ: ''காமெடி, ஆக்ஷன் மட்டும் இல்லாமல் அருமையான கருத்தையும் படத்தில் சொல்லி இருக்காங்க. அதுதான் நாட்டுப்பற்று. ஆரம்பத்தில் பணத்துக்காக இந்த மாதிரி வேலைகளைச் செய்றார் ஜாக்கி சான். ஒரு நாட்டின் கலைப் படைப்புகளை இன்னொரு நாடு எப்படி எடுத்துட்டுப்போய் ஏலம்விட்டு சம்பாதிக்கலாம். இதை உலக நாடுகளும் பார்த்துகிட்டு சும்மா இருக்கிறது சரியானு சிந்திக்கவைக்கும் கேள்வியை எழுப்பி இருக்காங்க.''

பிரேம் குமார்: ''பல பேர் போராட்டம் நடத்தியும் ஏலம்விடும் கம்பெனிக்காரங்க அசைஞ்சுகொடுக்காமல் ஏலத்தை நடத்துறாங்க. அப்போ யாருமே எந்தப் பொருளையும் வாங்காமல் புறக்கணிக்கும் காட்சி நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் வகையில் இருக்கு. இதனால், கோபமான அந்த நிறுவனம், டிராகன் சிலையை எரிமலையில் வீசுறதா அறிவிக்கிறதும் அதைக் காப்பாற்ற ஜாக்கி செய்யும் சாகசமும் சல்யூட் போடவைக்குது''

பிரசன்னா: ''ஜாக்கி சானே எழுதி, இயக்கி, தயாரிச்சு இருக்கிற படம். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்தப் படம் மூலம் ஜாக்கி இரண்டு கின்னஸ் சாதனைகளைச் செய்து இருக்கார். ஒண்ணு, ஒரே படத்தில் அதிகப் பணிகளை மேற்கொண்டது. (producer, actor, director, writer, cinimatographer, composer, stunt co-ordinator etc...)

அடுத்து, தனது வாழ்நாளில் அதிக சண்டைகளை  உடல் மூலம் செய்தவர் (Most stunts performed by a living actor for his body work).

''ஜாக்கி, இனி நீங்க ஆக்ஷனை நிறுத்திக்கிட்டாலும், எங்க மனசை விட்டுப் போக மாட்டீங்க. எப்பவும் நீங்கதான் எங்களோட ஃபேவரிட் ஆக்ஷன் ஹீரோ'' என்று கோரஸாகச் சொன்னார்கள் சுட்டிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism