Published:Updated:

நெட்டிஸம்

சுட்டிகளுக்கான யூ டியூப் !சைபர்சிம்மன்

நெட்டிஸம்

சுட்டிகளுக்கான யூ டியூப் !சைபர்சிம்மன்

Published:Updated:
##~##

சுட்டிகளுக்காகத் தனித் தேடு இயந்திரங்கள் இருப்பதுபோலவே, சிறப்பு வீடியோ சேவையும் இருப்பது தெரியுமா?

இன்டர்நெட்டில் வீடியோ காட்சிகளைப் பார்ப்பது என்றால், எல்லோரும் 'யூடியூப்’ தளத்துக்குப் போவார்கள். சினிமா தொடங்கி  எல்லாத் துறைகளின் வீடியோ காட்சிகளைப் பார்த்து ரசிக்கலாம். ஆனால், அதில் உள்ள வீடியோக்கள் பெரும்பாலும் பெரியவர்களுக்கானவை. சில விரும்பதகாத காட்சிகளும் இருக்கும். அதனால், உங்கள் பெற்றோர்கள் 'யூடியூப் பக்கம் போகாதே’ என்று எச்சரித்து இருப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி, கவலை வேண்டாம். உங்களுக்காக என்றே கிடியோஸ் வீடியோ தளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

கிடியோஸ்... பெயரே அழகாக இருக்கிறதுதானே? தளமும் அழகுதான். சிறுவர்களைக் கவரும் வகையில் வண்ணமயமாக இருக்கும் இந்தத் தளத்தில், நீங்கள் பார்த்து ரசிப்பதற்காகவே தேர்வு செய்யப்பட்ட வீடியோக்கள் இடம்பெற்று உள்ளன.

நெட்டிஸம்

கலகலப்பான வீடியோவில் தொடங்கி அழகான அனிமேஷன், அனிமல் வீடியோ வரை விதவிதமான வீடியோக்களை இங்கே பார்த்து ரசிக்கலாம். வீடியோ காட்சிகள் தனித் தனித் தலைப்புகளாகவும் கொடுக்கப்பட்டு உள்ளன. பேட்மேன், டொனால்டு டக் போன்ற தலைப்புகளைத் தேர்வுசெய்து பார்த்தும் ரசிக்கலாம்.

இவற்றைத் தவிர, உங்கள் வயதுக்கு ஏற்ற வீடியோக்களையும் தேர்வு செய்து பார்க்கலாம். 1 முதல் 2 வயது வரை, 3 முதல் 4 வயது வரை, 4 முதல் 6 வயது வரை என  வீடியோக்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. மேலும், இன்றைய வீடியோ என்ற தலைப்பிலும் நாள்தோறும் ஒரு சிறப்பு வீடியோவைக் காணலாம். அதிகமானவர்களைக் கவர்ந்த வீடியோக் களையும் 'பிரபலமான வீடியோ’ எனும் தலைப்பில் பார்த்து ரசிக்கலாம்.

பாசமான ஓர் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து  சுட்டீஸுக்கு விருந்து அளிக்கும் வீடியோ தளத்தை உருவாக்கி உள்ளனர். ஒரு முறை அவர்களின் செல்ல மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது, அவள் பார்த்து ரசிக்கப் போதுமான அளவில் பாதுகாப்பான வீடியோக்கள் இல்லை எனும் குறையை அவர்கள் உணர்ந்தனர். அப்போது உதயம் ஆனதுதான் இந்த கிடியோஸ் தளம்.

நெட்டிஸம்

வீடியோக்களைப் பரிசீலிப்பதற்காகவே ஒரு குழுவை நியமித்து, அந்தக் குழு பார்த்துத் தேர்வுசெய்யும் வீடியோக்கள் மட்டுமே இந்தத் தளத்தில் இடம் பெறுகின்றன.

கிடியோஸில் வீடியோக்களைக் கண்டு ரசிக்க http://www.kideos.com தளத்தை நாடுங்கள்.

இதைப் போலவே சிறுவர்கள் தயக்கம் இல்லாமல் பார்த்து ரசிப்பதற்கான வீடியோ காட்சிகளை டைனிடியூப் தளம் (http://www.tinytube.com) தொகுத்து அளிக்கிறது.

இதில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. வண்ணங்களை அறிந்துகொள்வது, உடல் உறுப்புகளைப் பற்றி அறிந்துகொள்வது எனப் பல்வேறு தலைப்புகளில் வீடியோக்களைப் பார்க்கலாம். இந்தத் தளத்திலேயே சிறுவர்கள் திரைப்படத்துக்கான டிரைலர்களையும்  பார்த்து மகிழலாம்.

நெட்டிஸம்

இணையத்தில் சிறுவர்களுக்கான யூடியூப் பிளேயரும் இருக்கிறது. கிடியோ பிளேயர் தளம்தான் அது. இதில் சிறுவர்களுக்காகத் தேர்வுசெய்யப்பட்ட வீடியோக்களை, அதற்குரிய அழகான பிளேயரில் பார்த்து ரசிக்கலாம். வலைத்தள முகவரி www.kideoplayer.com

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, சுட்டிகள் பார்த்தே ஆக வேண்டும் என வலியுறுத்தும் பெயரிலேயே சூப்பரான வீடியோ தளம் ஒன்றும் இருக்கிறது. சுவாரசியமும் பயன் உள்ள தகவல்களும் நிறைந்த அந்தத் தளத்தில், வீடியோக்களுடன் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றிய விரிவான விளக்கக் குறிப்புகளும் இடம்பெற்று உள்ளன. இந்தத் தளத்துக்குச் செல்ல http://thekidshouldseethis.com என்ற முகவரியை நாடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism