. நீங்.கள் கடைப்பிடிக்கும் உணவு முறையில் உடல் - மன வளர்ச்சிக்கு வழிவகுப்பது சமச்சீர் உணவு. இதில் முக்கியப் பங்குவகிக்கும் உயிர்ச் சத்துகளையே வைட்டமின்கள் (Vitamins) என்கிறோம். வைட்டமின்களைச் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். 10 முதல் 15 வயது வரையிலான சுட்டிகளுக்கான வைட்டமின் வழிகாட்டல் இது..
நம் உடலுக்குத் தேவையான ஊட்டத்தைத் தரக்கூடியது என்ற பொருள்தரும் Vital, Amines ஆகிய சொற்களில் இருந்து உருவானதுதான் வைட்டமின்கள். இவற்றில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் மற்றும் நீரில் கரையும் வைட்டமின்கள் என இரண்டு வகைகள் உள்ளன. வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை கொழுப்பில் கரையக்கூடியவை. வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை நீரில் கரையக்கூடியன. சிறுவர், சிறுமிகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் வைட்டமின்கள் முக்கியத்துவம் வாய்ந்தன.

வைட்டமின் ஏ

நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுதல்.

கண்களின் ஆரோக்கியத்தைப் பேணுதல்.

தோல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.

'வைட்டமின் ஏ’ பற்றாக்குறையால் மாலைக்கண் நோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடுகள் ஏற்படும்.

பப்பாளி, கேரட், பூசணி போன்ற மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறக் காய்கறிகள் மற்றும் பழங்கள், கீரை வகைகள், இறைச்சி ஆகியவற்றில் 'வைட்டமின் ஏ’ நிறைந்து உள்ளது.

வைட்டமின் பி

நரம்பு மண்டலத்தைப் பாதுகாத்தல்

ரத்தச் சோகையில் இருந்து காத்தல்.

'வைட்டமின் பி’ பற்றாக்குறையால் நரம்புக் கோளாறு, வாய்ப்புண், சோர்வு, நரம்புக் குழாய் பாதிப்புகள் ஏற்படும்.

கீரைகள், கடலை வகைகள், பருப்பு வகைகள் மற்றும் இறைச்சி ஆகியவற்றில் 'வைட்டமின் பி’ மிகுந்து உள்ளது.

வைட்டமின் சி

இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்குத் துணைபுரிதல்.

ஜலதோஷம், இருமலைத் தடுத்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுதல்.

ரத்தக் குழாய்களை வலுவாக்குதல்.

காயங்களை விரைவாக ஆற்றுதல்.

நெல்லி, கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி போன்ற பழங்கள் 'வைட்டமின் சி’ நிறைந்தவை.

வைட்டமின் டி

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகளை உறிஞ்சுவதற்குத் துணைபுரிதல்.

எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதிக்கு உதவுதல்.

நோய் எதிர்ப்பு சக்தியை நிலைநிறுத்துதல்.

வைட்டமின் டி பற்றாக்குறையால் இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் எலும்பு சம்பந்தமான பாதிப்புகளும் ஏற்படும்.

சூரிய ஒளிக்கதிர், மீன்கள், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவை மூலம் 'வைட்டமின் டி’ மிகுதியாகக் கிடைக்கிறது.

முக்கிய வைட்டமின்கள் பற்றி தெரிந்துகொண்டீர்கள் அல்லவா? இனி 10 முதல் 15 வயது வரையிலானோர் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகளைப் பார்ப்போம்.

காலை உணவு

அதிகாலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும். மூளை செல்கள் புத்துணர்வுபெற்று சுறுசுறுப்பாக இயங்குவதற்குக் காலை உணவு மிகவும் அவசியம். இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காலையில் உணவு சாப்பிடுவதால் நாள் முழுவதும் உத்வேகத்துடன் இருக்கலாம். வகுப்பில் கவனம் செலுத்த உதவுவதுடன், உடல் நலனைப் பேணுவதற்கும் வழிவகுக்கும். எனவே, காலை உணவைத் தவிர்க்கவே கூடாது.

பள்ளி நேரம் காலை 9 மணிக்குத் துவங்குகிறது என்றால், சுமார் 7.30 மணி அளவில் காலை உணவைச் சாப்பிடலாம். காலையிலும் மாலையிலும் நொறுக்குத்தீனி சாப்பிட விரும்புவோர், பாதாம், பிஸ்தா, பேரீச்சை, பப்பாளி, பைனாப்பிள், திராட்சை, சுண்டல் முதலானவற்றை அளவோடு சாப்பிடலாம்.

மதியம் / இரவு உணவு

மதிய உணவும் இரவு உணவும் பல்வேறு விதமானதாக இருக்கவேண்டியது கட்டாயம். குறிப்பாக, மதிய உணவில் கார்போஹைட்ரேட்கள், புரதம் மிகுந்து இருக்க வேண்டும். காய்கறிகளும் பழங்களும் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

காய்கறிகளுடன் சாம்பார் சாதம், சப்பாத்தி உடன் பருப்பு மற்றும் காய்கறிகள், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம் போன்ற சாத வகைகளுடன் காய்கறிகள், கீரை ஆகியவற்றை மதிய உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

எந்தக் காரணத்தைக்கொண்டும் இந்த மூன்று வேளை உணவையும் தவிர்க்கக் கூடாது. அளவில் குறைவாக இருந்தாலும் ஊட்டம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறைவாகச் சாப்பிடும் சுட்டிகள், நாள் ஒன்றுக்கு நான்கு வேளை சாப்பிடுவதன் மூலம் உணவின் அளவைச் சமன் செய்யலாம்.