முதல் முறையாக வீட்டைவிட்டு வெளியே சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வரும் ஒரு சுண்டெலி, ''இந்தப் பிரதேசத்திலேயே நான்தான் பலசாலி. நான் செல்லும் வழியில் ஒரு கடல் இருந்தது. உயரமான அலைகளுக்கு அஞ்சாமல் அதை நீந்திக் கடந்தேன். பெரிய மலை ஒன்று குறுக்கிட்டது. தாவிக்குதித்து அதைக் கடந்தேன். பயங்கரமாக சண்டைபோட்டுக்கொண்டு இருந்த இரண்டு கரடிகளுக்கு இடையே புகுந்து வெளியே வந்தேன்'' என்று தனது வீர தீர சாகசங்களைப் பற்றிப் பாட்டியிடம் சொல்கிறது.

சுண்டெலியின் பாட்டியான எலி, புன்னகையுடன் இப்படிச் சொல்கிறது : ''நீ கடல் என்று சொன்னது மானின் பாதம் அழுந்திய இடத்தில் தேங்கிய நீர். பெரிய மலை என்று சொன்னது புல் அடர்ந்த சிறு மேடு. கரடிகள் என்று சொன்னது பறக்கும் வண்டுகளை. உன் சிறிய உருவத்துக்கு அவை கடலாகவும், மலையாகவும், கரடிகளாகவும் தெரிந்து இருக்கின்றன. ஆனாலும் அவற்றைக் கண்டு அஞ்சாமல் கடந்து வந்திருக்கிறாய். அதனால், நீயும் உண்மையில் தைரியசாலிதான்''

இதுபோன்று அழகான வரிகளில் அற்புதமான விஷயங்களைச் சின்னச் சின்னக் கதைகள் மூலம் சொல்கிறது இந்தப் புத்தகம். இயற்கையின் அழகைச் சொல்லும் 'ஓநாயின் புத்தாண்டுக் கொண்டாட்டம்’, புத்திசாலித்தனம் மற்றும் உயிர்களை நேசிக்கும் பண்பைச் சொல்லும் 'சிறுவனும் கரடியும்’, நட்புக்காக ஏங்கும் ’மூடுபனி’ என ஒவ்வொரு கதையும் மனதில் ஆழமாகப் பதிகிறது. பக்கத்துக்குப் பக்கம் இருக்கும் ஓவியங்கள் கொள்ளை அழகு. ரஷ்யச் சிறார் கதைகளான இவற்றைத் தமிழில் தொகுத்து இருப்பவர், யூமா.வாசுகி.

எல்லாக் கதைகளையும் படித்து முடிக்கும்போது பல்வேறு புதிய அனுபவங்களைப் பெற்ற உணர்வு ஏற்படுகிறது. அத்துடன் சிறுகதை வடிவில் ஒரு புதிய நடையைத் தெரிந்துகொண்ட திருப்தியும் உண்டாகிறது.

ஓநாயின் புத்தாண்டுக் கொண்டாட்டம்

(ரஷ்ய சிறார் கதைகள்)
தொகுப்பு: யூமா.வாசுகி
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்
421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை
சென்னை-18.
விலை:

80