##~##

'உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளத் துணிந்துவிட்ட இந்த நிமிடமே, உங்கள் வெற்றிக்கான பயணமும் தொடங்கிவிட்டது’ என்கிறார் அரிஸ்டாட்டில்.

அடுத்தவர்கள் வந்து நம்மைப் பாராட்ட வேண்டும் என்று காத்திருக்காமல், நம்மை நாமே பாராட்டப் பழகிவிட்டால்... நாம் செய்யும் எந்த வேலையும் சீராக நடக்கும். நமக்காகச் சிந்திக்கும் நமது மூளை, பார்க்க உதவும் கண்கள், எழுத உதவும் விரல்கள் இவற்றுக்கு நாம் நன்றி எனச் சொல்லி, நம்மை நாமே பாராட்டிக்கொள்ளலாம். எழுத்துப் பயிற்சியில் ஏராளமான நன்றிகளை உங்கள் கரங்களுக்கும் விரல்களுக்கும் சொல்லிக்கொண்டே இருந்தால், அவை இன்னும் அழகாய் எழுத உதவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போது வட்ட வடிவ எழுத்துகளை எப்படி எழுதுவது என்பதைப் பார்ப்போம்... வட்ட வடிவ எழுத்துகளை எழுதுவதற்கு முன், அதற்கான அடிப்படைப் பயிற்சிகளைச் செய்வது நல்லது. பிறகு, படிப்படியாக எளிதில் இருந்து கடினம் என்கிற அடிப்படையில் பயிற்சிகளை அமைத்து உள்ளேன். அதிகக் கவனமும் நிதானமும் இந்தப் பயிற்சிக்கு மிக மிக அவசியம். காரணம், எழுத்துகளின் வடிவம் மற்றும் உருவம் சிதையாமல் எழுதவேண்டும். எழுதுகிறோம் என்கிற எண்ணம் தோன்றாமல், வரைகிறோம் என்கிற சிந்தனையிலேயே பயிற்சிசெய்வது நல்லது.

முத்தான கையெழுத்து !

தமிழ் எழுத்துகளைச் சதுர வடிவ எழுத்துகள், வட்ட வடிவ எழுத்துகள், மற்றும் சதுரமும் வட்டமும் இணைந்த எழுத்துகள் என வகைப்படுத்திப் பிரித்து எழுதக் கற்றுக்கொண்டால், எளிதில் அழகாய் எழுத இயலும். சதுர வடிவ எழுத்துகள், நான்கு கோடுகளின் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் இரண்டு கோடுகளுக்குள் கச்சிதமாக அடங்கிவிடும். ஆனால், குண்டு வடிவ 'ல’ போன்ற எழுத்துகள் கோடுகளை விட்டுச் சற்றே மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் வரலாம். அவைகளை இரண்டு கோட்டில் மட்டுமே அமையுமாறு எழுதினால், நம் கண்களுக்கு சற்று உயரம் குறைந்த எழுத்துகளாகத் தோற்றம்

முத்தான கையெழுத்து !

அளிக்கும்.

'ஆப்டிகல் இல்யூஷன்’ என்கிற மாயத் தோற்றத்தை நம் கண்கள் உருவாக்குவதே இதற்குக் காரணம். இந்த மாதிரியான சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் கையெழுத்துப் பயிற்சியில் கற்க வேண்டுமா என்று உங்களுக்குத் தோன்றலாம். நாம் அழகாய் எழுதப் பயிற்சிசெய்யும்போது, இதைக் கவனத்தில்கொண்டால் போதும். நன்கு பயின்ற பின் நம் கைகளும் கண்களும் நம்மைக் கேட்காமலேயே இந்த வேலைகளைத் தாங்களாகவே பார்த்துக்கொள்ளும்.

எளிதில் தொடங்கி, கடினமான எழுத்துகள் வரை இப்படி எழுதி, பயிற்சி செய்யுங்கள். எழுதி முடித்த பின், நீங்களே பயிற்சியின் முதல் வரிசையில் அமைந்து உள்ள எழுத்து மற்றும் வார்த்தைகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து, சரியான வடிவில் உருவச்சிதைவு இன்றி எழுதி இருக்கிறீர்களா எனப் பார்த்து, வேறு ஒரு வண்ணப் பேனாவால் திருத்திக்கொள்ளுங்கள். முடிந்தால் உங்களை நீங்களே, 'வெரிகுட்’ என்று பாராட்டியும் பழகுங்கள்.

இது உங்கள் கையெழுத்தை அழகாக்குவது மட்டும் அல்லாமல், உங்களையும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் வெற்றிநடை போடவைக்க உதவும் என்பதை உறுதியாக நம்புங்கள்.

(எழுதுவோம்)

முத்தான கையெழுத்து !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism