##~##

சீரூர்... மலைப் பகுதியை ஒட்டிய ஓர் அழகிய கிராமம். அங்கே வசிக்கும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். திடீரென அந்த ஊரில் காக்கைகளின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேபோகிறது. திரும்பிய திசை எங்கும் காக்கைகள், அவற்றின் கூடுகள், ஓயாத இரைச்சல், தெருவில் வரும் ஆட்களை எல்லாம் கொத்துகின்றன. என்ன செய்வது எனப் புரியாமல் திகைக்கிறார்கள் மக்கள். இந்த நிலையில் மலைச் சரிவுக்குச் சென்ற சில சிறுவர்களைப் பெரும்காற்று விரட்டுகிறது. அவர்கள் காணாமல் போகிறார்கள். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? இதற்கு எல்லாம் காரணம் என்ன? பிறகு என்ன நடந்தது?

புக் கிளப் - மந்திரக்கோல் மாயாவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவற்றுக்கு எல்லாம் விடை சொல்கிறது, 'மந்திரக்கோல் மாயாவி’ சிறுவர் நாவல். இன்றைய சுட்டிகளிடம் சிறுகதைகள் படிப்பதே குறைந்துவரும் சூழ்நிலையில், ஒரு நாவலைக் கொடுத்துப் படிக்கச் சொல்வது சவாலான விஷயம். அந்தச் சவாலில் ஜெயித்து இருக்கிறது இந்த நாவல். முதல் பக்கத்தில் தொடங்கும் பரபரப்பு, அடுத்து என்ன... அடுத்து என்ன? என்ற ஆவலை உண்டாக்கி, ஒரு திகில் திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த நாவலை எழுதி இருக்கும் பூவை அமுதன், சிறுவர்களுக்காகப் பல ஆண்டுகளாக நிறையச் சிறுகதைகள், தொடர்கதைகளை எழுதியவர். அந்த அனுபவம் எழுத்தில் நன்கு தெரிகிறது.

'ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது அந்தக் காட்சிகள் மட்டுமே மனதில் பதியும். அதையே புத்தகமாகப் படிக்கும்போது நம்மையும் கற்பனை செய்யவைத்து, சிந்தனையைத் தூண்டும்' என்பார்கள்.

'மந்திரக்கோல் மாயாவி’ நாவலைப் படிக்கும்போது உங்களுக்கு அந்த உணர்வு ஏற்படுவது நிச்சயம்!சீரூர்... மலைப் பகுதியை ஒட்டிய ஓர் அழகிய கிராமம். அங்கே வசிக்கும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். திடீரென அந்த ஊரில் காக்கைகளின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேபோகிறது. திரும்பிய திசை எங்கும் காக்கைகள், அவற்றின் கூடுகள், ஓயாத இரைச்சல், தெருவில் வரும் ஆட்களை எல்லாம் கொத்துகின்றன. என்ன செய்வது எனப் புரியாமல் திகைக்கிறார்கள் மக்கள். இந்த நிலையில் மலைச் சரிவுக்குச் சென்ற சில சிறுவர்களைப் பெரும்காற்று விரட்டுகிறது. அவர்கள் காணாமல் போகிறார்கள். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? இதற்கு எல்லாம் காரணம் என்ன? பிறகு என்ன நடந்தது?

புக் கிளப் - மந்திரக்கோல் மாயாவி

இவற்றுக்கு எல்லாம் விடை சொல்கிறது, 'மந்திரக்கோல் மாயாவி’ சிறுவர் நாவல். இன்றைய சுட்டிகளிடம் சிறுகதைகள் படிப்பதே குறைந்துவரும் சூழ்நிலையில், ஒரு நாவலைக் கொடுத்துப் படிக்கச் சொல்வது சவாலான விஷயம். அந்தச் சவாலில் ஜெயித்து இருக்கிறது இந்த நாவல். முதல் பக்கத்தில் தொடங்கும் பரபரப்பு, அடுத்து என்ன... அடுத்து என்ன? என்ற ஆவலை உண்டாக்கி, ஒரு திகில் திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த நாவலை எழுதி இருக்கும் பூவை அமுதன், சிறுவர்களுக்காகப் பல ஆண்டுகளாக நிறையச் சிறுகதைகள், தொடர்கதைகளை எழுதியவர். அந்த அனுபவம் எழுத்தில் நன்கு தெரிகிறது.

'ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது அந்தக் காட்சிகள் மட்டுமே மனதில் பதியும். அதையே புத்தகமாகப் படிக்கும்போது நம்மையும் கற்பனை செய்யவைத்து, சிந்தனையைத் தூண்டும்' என்பார்கள்.

'மந்திரக்கோல் மாயாவி’ நாவலைப் படிக்கும்போது உங்களுக்கு அந்த உணர்வு ஏற்படுவது நிச்சயம்!

மந்திரக்கோல் மாயாவி
ஆசிரியர்: பூவை அமுதன்
வெளியீடு: சபரீஷ் பாரதி
s17, அரவிந்த் நரேன் என்கிளேவ், 

8, மாசிலாமணி தெரு, தி.நகர்
சென்னை- 600 017. விலை:

புக் கிளப் - மந்திரக்கோல் மாயாவி

50

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism