குட் ஸ்டூடன்ட்...டியர் டீச்சர்...
##~##

தூத்துக்குடி, சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் கு.தடிக்கார ராஜகோபால்,  ஆசிரியர்கள் மத்தியில் மாண்புமிகு மாணவனாக வலம்வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேச்சியம்மாள் (தமிழ் ஆசிரியை): ''ராஜகோபால்தான் க்ளாஸ் லீடர். வகுப்பு அறையில் மாணவர்களை அன்பினால் கட்டுப்படுத்தி வகுப்பை அமைதியாக வைத்திருப்பான். ஒரு நாள் செய்யுளில் மனப்பாடப் பாடல்களை நடத்திவிட்டு, 'நாளை வகுப்புத் தேர்வு வைப்பேன்’ என்றேன். அடுத்த நாள் எல்லா மாணவர்களுமே 10 நிமிடங்களில் சரியா எழுதி முடிச்சுட்டாங்க. அப்புறம்தான் தெரிஞ்சது... அவங்க எல்லாருக்கும் சினிமாப் பாடலின் மெட்டில் அந்தச் செய்யுளை ராஜகோபால் சொல்லிக்கொடுத்த விஷயம். ரொம்ப க்ரியேட்டிவ்வான மாணவன்.''

வெள்ளைச்சாமி (அறிவியல் ஆசிரியர்): ''பள்ளிக்கு காலையில் சீக்கிரமே வந்து, அமைதியாப் படிச்சுட்டு இருப்பான். தினமும் வீட்டுக்குப் போகும்போது வகுப்பு அறையில் இருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்திட்டுதான் கிளம்புவான். ஆசிரியர்களுக்குத் தேவையான உதவிகளை உடனே செய்வான். ஒவ்வோர் அறிவியல் கண்காட்சியிலும்  புதுப் புது கண்டுபிடிப்பைக் காட்சிக்கு வைப்பான்.''

குட் ஸ்டூடன்ட்...டியர் டீச்சர்...

ஆவுடையம்மாள் (கணித ஆசிரியை):  ''ராஜகோபால் கணக்கில் புலி. கணக்கு சரியா வராத மாணவர்களைத் தனி குரூப்பாப் பிரித்து, அவனைச் சொல்லிக்கொடுக்கச் சொன்னேன். அடுத்த தேர்வில் அவர்கள் எல்லாருமே நல்ல மார்க் எடுத்தாங்க. அதுக்குக் காரணம், ராஜகோபாலோட அர்ப்பணிப்புதான்.''

அருள்சகாயம் (உடற்கல்வி ஆசிரியர்): ''ஸ்கூல் கபடி டீமில் முக்கியமான பிளேயர். தடகளப் போட்டிகளிலும் கலந்துக்குவான். மைதானத்தில் போட்டிகள் நடக்கும்போது, சக மாணவர்களுக்குக் காயம் ஏற்படாமல் கண்காணிக்கிறதுல அக்கறையா இருப்பான்.''

ஜாய்பெல் (உதவித் தலைமை ஆசிரியை): ''உமரிக்கோட்டை கிராமத்தில் இருந்து வந்து ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறான். நல்ல ஒழுக்கமான மாணவன். ஒரு தடவை மைதானத்தில் கிடைத்த ஒரு மாணவனின் வாட்சைப் பத்திரமாக எடுத்துவந்து என்னிடம் கொடுத்தான். அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைப்பட மாட்டான். பரிசு கிடைக்குதோ இல்லையோ ஓவியம், கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொள்வான். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றாலும், தன்னால் முடிந்த உதவிகளைச் செய்யணும் என்ற உயர்ந்த எண்ணம் உள்ளவன் ராஜகோபால்.''

- இ.கார்த்திகேயன் படம்: ஏ.சிதம்பரம்

குட் ஸ்டூடன்ட்...டியர் டீச்சர்...

 ''எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய கிஃப்ட், மணிரத்னம் சார்!'' என்று கோரஸாகச் சொல்கின்றனர், கடலூர் புதுப்பாளையம், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள். ஆங்கிலமும் கணிதமும் நடத்தும் இவர், தன் மாணவர்களைக் கவர்ந்தது எப்படி?

சரத்குமார்: ''பாடங்களைக் கதையைப் போல் சொல்லிக்கொடுப்பார். சூப்பர் ஸ்டார் மாதிரி டான்ஸ் ஆடிக்கிட்டே நடிச்சும்காட்டுவார். எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும் ஃப்ரெண்டு மாதிரி பொறுமையாச் சொல்லித் தருவார்.''

மாதவன்: ''ஒரு நாள் எனக்கும், என் க்ளாஸ்மேட்டுக்கும் நடந்த சண்டையில், அவனோட காலில் அடிபட்டுருச்சு. சார்தான் அவனை பைக்கிள் அழைச்சுட்டுபோய் தன் செலவிலேயே ட்ரீட்மென்ட் கொடுத்தார். எனக்கும் பொறுமையா அறிவுரை சொன்னார். இப்ப அந்தப் பையனும் நானும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்.''

குட் ஸ்டூடன்ட்...டியர் டீச்சர்...

இமயவேந்தன்: ''என்கிட்ட இருக்கிற ஓவியத் திறமையைக் கண்டுபிடிச்சது அவர்தான். எனக்குத் தேவையான பென்சில், டிராயிங் புக் எல்லாம் வாங்கித் தந்து, போட்டிகளில் பங்கேற்கவைப்பார். நான் ஜெயிச்சாலும் தோற்றாலும் கண்டிப்பா ஒரு கிஃப்ட் வாங்கித்தந்துடுவார். இப்படிப் பல மாணவர்களின் தனித் திறமைகளைக் கண்டுபிடிச்சு ஊக்கம் அளிப்பார்.''

பிரதீப், ரமணன்: ''கசப்பாக நினைக்கும் கணக்குப் பாடத்தை இனிப்பாக நடத்துவது சாரோட ஸ்பெஷல். எந்த அளவு சுலபமாகப் போட முடியுமோ, அந்த அளவுக்கு எளிமையாக நடத்துவார். வீட்டுப்பாடத்தை முடிக்கலைனா, காரணத்தை  விசாரிப்பாரே தவிர திட்ட மாட்டார்.''

ரத்தீஷ், சூர்யா: ''ஏழை மாணவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கித் தருவார். அவரது வீட்டு விசேஷங்களுக்கு எங்களையும் அழைத்து சூப்பராக் கவனிப்பார். நாட்டு நடப்புகளைப் பாடத்தோடு தொடர்புபடுத்தி நடத்துவார். எங்களை ஜாலியாக இங்லீஷ்ல பேசவைப்பார்.''  

 - க.பிரபாகரன் படம்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism