முத்தான கையெழுத்து !
##~##

'எளிமையான விஷயம்கூட சில நேரங்களில் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகிவிடும்'' என்கிறார் அறிஞர் பவுலோ கோலிஹோ.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பது நம் ஊர் முதுமொழி. கையெழுத்துப் பயிற்சியில் குறிப்பிடப்படும் சின்னச் சின்ன விஷயங்களும் அப்படித்தான். 'நமக்குதான் எல்லாம் தெரியுமே’ என்கிற மனநிலை இல்லாமல், பொறுமையுடன் இங்கே கொடுக்கப்படும் பயிற்சியைத் தினமும் செய்வது அவசியம்.

15 நாட்களுக்கு ஒரு முறை அமர்ந்து மொத்தமாக 30 பக்கங்களை எழுதாதீர்கள். அன்றாடம் 20 நிமிடங்களாவது ஒதுக்கிப் பயிற்சி செய்யுங்கள்.

தமிழில் வல்லின எழுத்துகளான க , ச, ட,  த , ப , ற என்பவனற்றை நாம் திரும்பத் திரும்ப பயன்படுத்துவோம். இதில் 'ட’, மற்றும் 'ப’ ஆகிய எழுத்துகள் எழுதுவதைப் பற்றியும் அவற்றின் சதுர வடிவத்துடன் கூடிய உருவ ஒற்றுமை பற்றியும் நாம் பார்த்தோம். இப்போது ச, க, த ஆகியவல்லின எழுத்துகளைக் கொண்டு, எளிமையாகத் தொடங்கி, சற்றே கடினமானதை இங்கே பயிற்சியாகக் கொடுத்து உள்ளோம்.

முத்தான கையெழுத்து !

அதோடு, கொக்கி, கொம்புகளைப் பயன்படுத்தி சி, கி, தி ஆகிய இகர வரிசை எழுத்துகளையும் பயன்படுத்தி வார்த்தைகளை உருவாக்கி உள்ளோ.அந்த வார்த்தைகளையும் எளிமையான இரண்டு, மூன்று எழுத்துகளாக ஆரம்பித்து, கடினமான பெரிய வார்த்தைகளில் முடித்து உள்ளோம்.

கி, தி, போன்ற எழுத்துகளின் கொக்கி, கொம்புகள் நான்கு வரியில் மேல் கோட்டைத் தொட்டு வர வேண்டும். த, ந, போன்ற எழுத்துகளின் வால்போன்ற பகுதிகள், கீழ்க் கோட்டைத் தொட்டு முடிய வேண்டும். பொதுவாகத் தமிழ் எழுத்துகள் எழுத்துப் பலகை இரட்டை வரி நோட்டுக்களையே இதுவரை பயன்படுத்தி இருப்பீர்கள். இங்கே  கொடுத்து உள்ள நான்கு வரிப் பயிற்சியானது, உங்கள் எழுத்துகளை மேலும் செம்மைப்படுத்த உதவும்.

முத்தான கையெழுத்து !

சதுரமும் அரை வட்டமும் இணைந்த எழுத்துகளான ம, ழ, மு, மூ ஆகிய எழுத்துகளும் உருவத்தில் ஒன்றுபோல் தோற்றம் அளிக்கும். இவற்றையும் நன்கு கவனித்து, உருவ வேறுபாட்டுடன் எழுதிப் பழக வேண்டும். இல்லையேல் எழுத்துப் பிழை மற்றும் வார்த்தைப் பிழை ஏற்பட வாய்ப்பு உண்டு.

இந்த விஷயங்களை நன்கு கவனித்துப் பொறுமையாக எழுதிக் கற்றுக்கொள்ளுங்கள். ஆரம்பத்தில் நிதானம் கடைப்பிடித்து அக்கறையுடன் எழுதினால், அழகிய கையெழுத்து அமையும். பின்னர் வேகம் கூட்டிக்கொள்ளத் தனியாகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

முத்தான கையெழுத்து !

'சித்திரமும் கைப் பழக்கம்...’ என்பார்கள். எழுத எழுத உங்கள் எழுத்தும் அழகாக மாறும்.

(எழுதுவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism