திகிரேட் சத்தியமூர்த்தி சார்!

##~##
தஞ்சாவூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாவட்டம், மெலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் சத்தியமூர்த்தி. மாணவர்களின் நண்பனாகத் திகழும் இவரின் சிறப்பு அம்சங்களைச் சொல்கிறார்கள் மாணவர்கள்.

மணிகண்டன்: ''இந்தப் பள்ளியிலேயே படிச்சு, இங்கேயே டீச்சர் ஆனவர். அதனால், எங்கள் மேல் அளவுகடந்த பிரியம். எங்கள் எல்லாரையும் பெரிய ஆளாக்குவது அவரின் லட்சியம். வாழ்க்கையில் வெற்றி அடைய ஏழ்மை ஒரு தடையே இல்லைனு நிரூபிச்சுக் காட்டின எங்களின் ரோல் மாடல்.''

ராஜராஜன்: ''சத்தியமூர்த்தி சார்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட விஷயம், அவரது இரக்க குணம். ஸ்கூலில் யாருக்காவது உடம்பு முடியலைனா, உடனே மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப்போவார். நாங்க ஒவ்வொருவரும் எங்களால் முடிஞ்ச உதவிகளை மத்தவங்களுக்குச் செய்றோம். அதுக்கு அவரோட அறிவுரையே காரணம்.''

விக்னேஷ்: ''அவர்கிட்ட இதுதான் பிடிச்சதுன்னு ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சொல்ல முடியாது.  பாடம் நடத்தும் விதத்தில் இருந்து எங்களிடம் பழகுவது வரை, எல்லாமே பிடிக்கும். எங்க ஸ்கூல் சுகாதாரப் படைக்கு சார்தான் இன்சார்ஜ். ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ஐந்து பேரை நியமிச்சு, பள்ளியின் சுகாதாரத்தைப் பாதுகாக்கிறார். எங்ககிட்ட இருந்து திறமைகளை வெளியே கொண்டுவர்றதில் சாருக்கு மிகப் பெரிய பங்கு இருக்கு.''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர் !

மங்களேஸ்வரி: ''பாடத்தைத் தாண்டி நிறைய விஷயங்களைக் கற்றுத்தருவார். நம் நாட்டில் பெண்களுக்கு எதிராகப் பெருகி இருக்கும் வன்முறைகள் பத்தி நிறையச் சொல்வார். அதோடு, நாங்கள் எப்படிப்பட்ட பழக்கவழக்கங்களைக் கொண்டிருக்கணும், பாதுகாப்பாக எப்படி இருக்கணும்னு வழிகாட்டுவார். எந்தச் சூழ்நிலையையும் தைரியமாகச் சந்திக்கும் பக்குவத்தை எங்களுக்குக் கொடுத்திருக்கார்.''

நூருல் நஜீரா: ''கிராமப்புற மாணவர்கள் பலர் கல்லூரிக்குப் போகும்போது ஆங்கிலம் தெரியாமல் கஷ்டப்படுறாங்க. அந்த நிலைமை எங்களுக்கு வரக்கூடாதுனு, பள்ளி முடிஞ்சதும் தினமும் ஒரு மணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் எடுக்கிறார். அவரோட அர்ப்பணிப்புக்கு இந்த ஒரு விஷயமே போதும். சத்தியமூர்த்தி சார் இஸ் கிரேட்!''

- எம்.புண்ணியமூர்த்தி
படம்: கே.குணசீலன்

நிவேதாவுக்கு நிகர் நிவேதா !

தேனி மாவட்டம், குன்னூரில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறார் நிவேதா. பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரிடமும் இவர் நற்பெயர் பெற்றது எப்படி?

அழகர்சாமி (தமிழ் ஆசிரியர்): ''படிப்பிலும் பண்பிலும் சிறந்த மாணவி நிவேதா. ரொம்ப அமைதியான பொண்ணு. தேர்வுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே தயாராகி, சக மாணவிகளையும் தயார்படுத்தி வருகிறாள். நிவேதாவின் தமிழ் எழுத்துகளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.''

அமுதா (ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆசிரியை): ''தலைமைப் பண்புகள்கொண்டவள். வகுப்பை கட்டுப்பாட்டோடு வைத்துக்கொள்வதில் கெட்டிக்காரி. எந்தத் தலைப்பு கொடுத்தாலும், ஆங்கிலத்தில் கடகடவெனப் பேசுவாள். அறிவியல் பாடம் நடத்தும்போது, அவள் கேட்கிற கேள்விகளுக்காகவே நான் ஹோம்வொர்க் செய்து வர வேண்டும். அந்த அளவுக்கு கேள்விக் கணைகளை வீசுவாள்.''

தர்மலிங்கம் (கணக்கு ஆசிரியர்): 'ஒழுங்கு, பணிவு, துணிவு ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் நிவேதா. இதுவரைக்கும் வகுப்புக்கு விடுப்பு எடுத்ததே இல்லை. எல்லா மாணவர்களிடமும் சகஜமாகப் பழகுவாள். எந்த விஷயத்திலும் நிவேதாவுக்கு நிகர் நிவேதாதான். இவளைப் போன்ற மாணவர்களுக்கு ஆசிரியராக இருப்பது பெருமை.''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர் !

சமயணன் (சமூக அறிவியல்): 'நிவேதாகிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சது அவளோட துணிச்சலான அணுகுமுறை. பசங்க, பொண்ணுங்க எல்லாம் பார்க்க மாட்டாள். யாராக இருந்தாலும் நினைச்சதை சட்டெனப் பேசுவாள். பள்ளியைச் சுகாதாரமாக வைத்திருக்கணும் என்கிற எண்ணம், இப்போ எல்லா மாணவர்களுக்கும் இருக்கு. அதற்குத் தூண்டுகோலே நிவேதாதான்.''

முத்துராமலிங்கம் (தலைமை ஆசிரியர்): 'நிவேதா எங்க பள்ளிக்கு ஒன்பதாம் வகுப்பில்தான் வந்து சேர்ந்தாள். ஆனா, அவளோட திறமைகளும் பண்பும் எல்லாரிடமும் ரொம்ப நெருக்கத்தை ஏற்படுத்திச்சு. எங்க எல்லாருக்குமே அவள்தான் செல்லம். அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில், நிவேதா முதல்இடத்தில் வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.'

- ச.பா.முத்துக்குமார்
படம்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism