Published:Updated:

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

Published:Updated:

கே.கணேசன்

காப்பி அடிக்கலாம் வாங்க !

ஹாய் சுட்டீஸ்..! சென்ற இதழில் தன் இனத்துக்காக வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறையில் இருந்தபடியே  போராடிய, நெல்சன் மண்டேலா வின் வாழ்க்கையில் இருந்து அமைதியான முறையில் போராடி, ஓர் இனத்துக்கே விடு தலை வாங்கிக் கொடுக்க முடியும் என்பதைக் காப்பி அடித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த முறை பிறரால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள், தொழு நோயாளிகள், ஆதரவற்றோர் ஆகியோர் மீது அன்பு செலுத்தி, மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த அன்னை தெரசாவின் வாழ்க்கையைக் காப்பி அடிக்கலாம் வாங்க!

அது ஓர் ஆதரவற்றவர்களுக்கான விடுதி. அதன் நிர்வாகி ஓர் அம்மையார். அவரைப் பார்க்க அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமான செல்வந்தர் ஒருவர் வந்திருந்தார். அடுத்த வாரம் நடக்க இருக்கும் விழா ஒன்றில் கலந்துகொள்ள அம்மையாரை அழைக்க வந்திருந்தார். விழாவில் கலந்துகொள்ள ஒப்புக் கொண்ட அம்மையார் 'விழாவுக்கு தாம் வருவதாகவும், ஆனால், அவ்விழாவில் மீதமாகும் உணவுப் பண்டங்களை  எடுத்துக் கொண்டு திரும்ப நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்’ என்றார். அதைக் கேட்டு ஒரு கணம் ஆடிப் போய் விட்டார் அந்தப் பிரபலம்.

##~##

வியப்பும் அதிர்ச்சி  யும் நீங்காத அந்தப் பிரபலம். ''அம்மா அங்கு அறுசுவையுடன் கூடிய விருந்தை உங்களுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறேன். ஆனால், நீங்களோ மிச்சம் மீதி என்று கேட்கிறீர்களே'' என்றார்.

புன்னகையுடன்  அந்த அம்மையார், ''இதுபோன்ற ஆடம்பர விருந்து களில் கலந்து கொள்பவர்கள் பல உணவுப் பண்டங் களை தொட்டுக்கூடப் பார்க்காமல் வீணாக்குவார்கள். அப்படி வீணாகும் உணவுப் பண்டங் களை எடுத்துச் செல்ல என்னை அனுமதித் தந்தால் அதை நான் இந்த நகரில் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் அல்லல் படுகிற மக்களுக்கு  கொடுத்து அவர்களின் பசியினைப் போக்குவேன்'' என்றார்.

அந்த அம்மையாரின் தொண்டு உள்ளத்தை எண்ணி வியந்த செல்வந்தர், ''அம்மா நீங்கள் விழாவுக்கு வாருங்கள். உங்களுக்கு வேண்டிய அளவுக்கு நல்ல உணவு வகைகளை நான் கொடுத்து அனுப்புகிறேன்'' என்றார். அந்தப் பெண்மணிதான் அன்னை தெரசா.

கொஞ்சம் ஆண்டுகளுக்கு முன் செல்வோம்... ஆக்னஸ் என்ற இளம் பெண் துறவி இறைப் பணியில் ஈடுபடவும் கல்வி கற்கவும் அல்பேனியா வில் இருந்து 1928-ல் இந்தியா வந்து, மேற்கு வங்கத்தில் இறை ஊழியத்தில் ஈடுபட்டார்.

காப்பி அடிக்கலாம் வாங்க !

அங்கு கன்னியாஸ்திரிகளுக்கானப் பள்ளியில் தங்கிப் பயின்றார். அப்போது அவர் அருகில் இருக்கும் சேரிகளுக்குச் சென்று, அங்கு  குழந்தை களை குளிப்பாட்டுவது சுகாதாரமாக இருக்கச் செய்வது என்று சமூகப் பணிகளை ஆற்றி வந்தார்.  விடுதியில் இருந்து அடிக்கடி வெளியே சென்று சேரிகளில் உள்ள குழந்தைகளுக்கு கல்வியையும் சுகாதாரத்தையும் போதித்தார்.

திருச்சபையின் மரபுப்படி ஆக்னஸ், என்ற  தன் பெயரை... அன்பின் மூலம் மற்றவர்களை ஆட்கொள்ள முடியும் என்று வாழ்ந்து காட்டிய ஃபிரான்ஸ் நாட்டின் பெண் துறவியின் பெயரான தெரசா என்று மாற்றிக் கொண்டார்.

ஒரு முறை தெருவில் ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டியைப் பார்த்தார். கடும் குளிரால் உயிருக்குப் போராடிய அந்த மூதாட்டியை காப்பாற்ற, ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைகள் பலவற்றுக்கும் அலைந்தார். மூதாட்டியை எங்கும் சேர்க்க முடியாததால் அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவம் தெரசாவை வாட்டி வதைத்தது.

இதற்காக தெரசா 1949-களில் 'மிஷினரி ஆஃப் சாரிட்டி’ என்ற அமைப்பினை நிறுவினார்.  உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள்,  தொழுநோயாளிகள், அனாதைகள் ஆகியோரை இங்கு பராமரித்து வந்தார். அன்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஏழையிலும் ஏழைகளுக்குத் தொண்டு புரிந்த தெரசாவின் சேவைகள், மால்கம் முக்கரிட்ஜ்ஜின் 'சம்திங் பியூட்டிஃபுல் ஃபார் காட்’ என்ற விளக்கப் படத்தின் மூலம்  உலகத்தின் பார்வை இவர் பக்கம் திரும்பியது.  

தெரசா தனது சேவைகள் பற்றி சொல்லும் போது, ''நான் இறைப்பணியில் இருந்து வந்தாலும் 1948-ஆம் ஆண்டில் ஒருநாள் எனக்குள் இறைவனின் கட்டளை ஒன்று கேட்டது. அப்போதில் இருந்து நான் முன்பை விட மக்களுடன் நெருக்கமாக, குறிப்பாக சாலையிலேயே குடியிருப்போர், தொழுநோயாளிகள், ஆதரவற்றோர் இவர்களுக்காகப் சேவை செய்ய ஆரம்பித்தேன்'' என்கிறார்.

மிகவும் பொருளாதார நெருக்குதல்களுக்கு இடையிலும் தன் அன்பினால் அனைவரையும் பாதுகாத்தார். ஒரே ஒரு கிளையுடன் ஆரம்பிக் கப்பட்ட இந்த அமைப்பு, சில வருடங்களில் உலகம் முழுவதிலும் பரவியது. பாதிக்கப் பட்டவர்கள் இங்கு அடைகலம் பெற்றனர்.

தெரசாவாக தனது பணியைத் தொடர்ந்தவர் தன் உள்ளார்ந்த சேவையினால் அனைவரின் மதிப்பையும் பெற்று அன்னை தெரசாவாக மதிக்கப்பட்டார். மனித நேயம், அன்பு, அமைதி, சகோதரத்துவம் போன்றவற்றை சிறப்பிக்கும் விருதுகளில் பல இவருக்கு சொந்தமானது. 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசும் அடுத்த ஆண்டே இந்திய அரசின் உயரிய விருதான 'பாரத் ரத்னா’ விருதும் அளிக்கப்பட்டன.

தன்னலமற்ற அன்பின் மூலம் உலகத்தையே ஆளமுடியும் என்பதை அன்னை தெராசா விடம் இருந்து காப்பி அடிக்கலாம் வாங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism