Published:Updated:

சிக்கு...புக்கு...குக்கு !

சிக்கு...புக்கு...குக்கு !

சிக்கு...புக்கு...குக்கு !

சிக்கு...புக்கு...குக்கு !

Published:Updated:
சிக்கு...புக்கு...குக்கு !

ஹாய் சுட்டீஸ், புதினாக் கீரை மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை வைத்து இரண்டு ரெசிப்பிக்களை வசந்தா விஜயராகவன் செய்யச் சொல்லித் தந்திருக்கிறார். அம்மா கிட்ட செஞ்சு கொடுக்கச் சொல்லி சாப்பிட்டுப் பாருங்க..! டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி இவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்களையும் அவற்றின் சிறப்புகளையும் விளக்குகிறார்.  

புதினா சாதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவையானவை: பச்சரிசி - 2 கப், புதினா - 1 கப், பச்சை மிளகாய் - 2 எண்ணிக்கை, உப்பு, நெய் - தேவையானது, பிரட் துண்டுகள் - கால் கப், முந்திரி துண்டுகள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன் (தலா), எண்ணெய் -2   டீ ஸ்பூன்

சிக்கு...புக்கு...குக்கு !
##~##

செய்முறை: புதினா, பச்சை மிளகாயை சிறிதளவு எண்ணை விட்டு லேசாக வதக்கி விழுதாக அரைக்கவும். இதை அரிசியுடன் கலந்து, வேக வைத்து சாதமாக வடித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு தாளித்து முந்திரி, பிரட் துண்டங்களை சேர்த்து, மொறு மொறுப்பாக வறுத்து, சாதத்தில் உப்பு சேர்த்து, வறுத்த பொருட்களையும் கொட்டி, கலந்து மேலாக நெய் ஊற்றிப் பரிமாறவும்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 1475 கிலோ கலோரி

கார்போஹைட்ரேட் - 272 கிராம்

ப்ரோட்டீன் - 32 கி

கொழுப்பு - 29 கி

கால்சியம் - 177 மில்லி கிராம்

இரும்பு - 19.5 மி.கி

கொலின் - 30.5 மி.கி

ஃபோலிக் ஆசிட் - 98 மைக்ரோ.கிராம்

பீட்டா கரோட்டின் - 1325 மை.கி

டயட்டீஷியன் கமென்ட்: புதினாக் கீரையும் சாதமும் இருப்பதால் ஆற்றல் அதிகம் கிடைக்கும். புரதச் சத்து குறைவாக இருக்கும். இரும்புச் சத்து அதிகமாகக் கிடைப்பதால் ரத்தத்துக்கு நல்லது. கண்களுக்கு நன்மை அளிக்கும் பீட்டா கரோட்டின் தேவையான அளவும் கிடைக்கும். நெய் சேர்ப்பதால் கொழுப்புச் சத்து வேண்டிய அளவு கிடைக்கும். புதினாக் கீரை சாப்பிடுவதால் வாயில் ஏற்படும் புண்கள் குணமாகும். மேலும் ஒரு விதமான வாசனையுடன் இருப்பதால் சாப்பிடத் தூண்டும். விட்டமின்களும் தாது உப்புக்களும் தேவையான அளவு கிடைக்கும்.

மரவள்ளிக் கிழங்கு வடை!

தேவையானவை: வேக வைத்த மரவள்ளிக் கிழங்கு துருவல் - 2 கப், இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன், அவல் பொடி - கால் கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையானது, எண்ணை - பொரிக்க தேவை யானது.

செய்முறை: எண்ணை தவிர மற்ற எல்லா சாமான்களையும் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து, சிறிய வடைகளாக தட்டி சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும். அபாரமான ருசியுடன் இந்த வடை இருக்கும்.

சிக்கு...புக்கு...குக்கு !

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 1130 கிலோ கலோரி

கார்போஹைட்ரேட் - 135 கிராம்

ப்ரோட்டீன் - 5 கி

கொழுப்பு - 65 கி

கால்சியம் - 171மில்லி கி

இரும்பு - 6 மி.கி

பீட்டா கரோட்டின் - 16 மைக்ரோ கி

டயட்டீஷியன் கமென்ட்: மரவள்ளிக் கிழங்கில் ஆற்றல் நிறைய கிடைக்கும். கால்சியம் கிடைப்பதால் எலும்புகளுக்கு நல்லது. இதில் இருந்துதான் ஜவ்வரிசி செய்யப்படுகிறது. ஜவ்வரிசிக் கஞ்சி பிடிக்காதவர்களுக்கு இதுபோல வடை செய்து கொடுக்கலாம். பேதி ஆகும் குழந்தைகளுக்கு இது நல்ல மருந்து. இதனுடன் பருப்பு வகைகளைச் சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும். மிதமான உணவு இது!

படங்கள்: து.மாரியப்பன்

நெல்லிக்காய் ஜாமுன்!

தேவையான பொருட்கள்: நெல்லிக்காய்- அரை கிலோ, சர்க்கரை- கால் கிலோ, சுண்ணாம்பு - ஒரு ஸ்பூன், வினிகர் - கால் ஸ்பூன், படிகாரம் - ஒரு ஸ்பூன்.

நெல்லிக்காயை நன்கு கழுவி மூழ்கும் அளவு நீர் விட்டு, சுண்ணாம்பு கரைத்து ஊற வைக்கவும். அடுத்த நாள் எடுத்து நன்கு கழுவி, மூழ்கும் அளவு நீர் விட்டு, படிகாரம் போட்டு 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, எடுத்து நன்கு கழுவி 2 பங்கு நீர் விட்டு சர்க்கரை, வினிகர் சேர்த்து கொதித்த பிறகு, நெல்லிக்காயைச் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

ஒருநாள் நெல்லிக்காயை எடுத்துவிட்டு சர்க் கரையை மட்டும் 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, நெல்லியைப் போட்டு வைக் கவும். அடுத்து 5 நிமிடம் சர்க்கரையை கொதிக் கவிட்டு 10 நிமிடம் நெல்லியைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும். 2 நாட்கள் ஊறிய பிறகு, ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும்.

சிக்கு...புக்கு...குக்கு !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism