Published:Updated:

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

Published:Updated:

  உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் ஒவ்வொரு மேட்சிலும் யார் ஜெயிப்பாங்கன்னு கணிச்சுச் சொல்லேன் ஜீபா... 'ஆக்டோபஸ் பால்’ மாதிரி நீயும் சீக்கிரம் பிரபலம் ஆயிடுவே இல்லே?

 -எஸ். பார்த்திபன், கோவை.

அய் சந்தடி சாக்குல ஆசையக் கிளப்பி, 'மேட்ச் ஃபிக்ஸிங்’ கேஸ்ல மாட்டிவிட பாக்குறார்யா நம்ம பார்த்தீ... விடு எஸ்கேப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மை டியர் ஜீபா !

  டியர் ஜீபா, எதுக்காக நாம் அடிக்கடி விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பிக் கொண்டே இருக்கிறோம்?

-செ.கணபதி, செங்கல்பட்டு.

##~##

சூரியனைக் கோள்கள் சுற்றி வருது. கோள்களை துணைக் கோள்கள் சுற்றி வருது. பூமி சூரியனைச் சுற்றி வர்ற ஒரு கோள். நிலா அதன் துணைக் கோள். ஓகே? இப்ப, நமக்காக நம் பூமியைச் சுற்றி வர்ற மாதிரியோ அல்லது துணைக் கோளைச் சுற்றி வர்ற மாதிரியோ ஒரு கோளை உருவாக்கி சுத்த விட்டா, அது 'செயற்கை’க் கோள்.

எதுக்கு இப்படி ஒரு செயற்கைக் கோளை அனுப்பறாங்கன்னு பார்த்தா நிறைய காரணங்கள் இருக்கு. யுனிவர்ஸை தெரிஞ்சுக்க, வானிலை முன்னறிவிப்பு செய்ய, டெலிபோன் கால்ஸை கடல் தாண்டி அனுப்ப, கப்பல்களுக்கும் விமானங்களுக்கும் வழி காட்ட, நிலத்தடி நீர் பற்றி விவரங்களை வெச்சு பயிர் விளைச்சலைக் கவனிக்க, ராணுவத்துக்கு உதவ...ன்னு இந்த செயற்கைக் கோள்கள் உதவியால நிறைய நல்ல காரியங்கள் நடக்குது. அதே சமயம், இப்படி அனுப்பப்படற ராக்கெட்லே இருந்து எரிஞ்சு உதிர்ற பூஸ்ட்டர்கள், எரிபொருள் காலியான டேங்க்குகள்... இதெல்லாம் திரும்ப பூமிக்கு வர்றது இல்லை. அங்கேயேதான் ஸ்பேஸ்ல சுத்திட்டுக் கிடக்கும். இதை 'ஸ்பேஸ் ஜங்க்’னு சொல்றாங்க.

சோவியத் ரஷ்யாதான் முதல் முதலா 1957-ல 'ஸ்புட்னிக்1’ ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பினது. அதுக்குப் பிறகு கிட்டத்தட்ட நாற்பதுக்கும் அதிகமான நாடுகள் வரிஞ்சுகட்டிக்கிட்டு ஆளாளுக்கு ராக்கெட் அனுப்ப ஆரம்பிச்சுட்டாங்க. இன்னிக்கு நம்ம ஸ்பேஸ்ல கிட்டத்தட்ட 3,000 செயற்கைக்கோள்கள் சுத்திட்டு இருக்கு. கூடவே, சுமார் 6,000 உதிரிகளும் 'ஸ்பேஸ் ஜங்க்’கா சுத்திட்டுக் கிடக்காம்

பிப்ரவரி மாசத்துல 28 நாட்கள் மட்டும் இருக்கறதால யாருக்கு அதிக லாபம் ஜீபா?

-எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.

மாச சம்பளக்காரங்க 28 நாள் வேலை செஞ்சாலே சம்பளம். வீட்டை வாடகைக்கு விட்டவங்களுக்கு ரெண்டு நாள் முன்னாடியே வாடகை. ஸ்கூல் வேன், டியூஷன், ட்ரெயினிங் கோர்ஸ்... எல்லாருக்கும் லாபம்தான் அதிக லாபம் யாருக்குன்னா, டெய்லி காலண்டரைக் கிழிக்கறவங்களுக்கு... 28-ந் தேதிய கிழிச்சாலே ஒண்ணாந் தேதி வந்துடுமே எப்பூடி?

 ஹாய் தலைவா நான் உனக்கு ஒரு பரிசு வாங்கி ஒரு பெட்டிக்குள் வைத்துப் பூட்டி உனக்கு அனுப்பு கிறேன். சாவியை நான் தரவில்லை. ஆனால், நீ அந்தப் பெட்டியை உடைக்காமல், வேறு சாவி போட்டுத் திறக்காமல் அதைத் திறந்து பார்க்கிறாய். எப்படி திறந்தீங்ண்ணா?

-சொ.ஆகாஷ்குமார், பட்டுக்கோட்டை.

ஆமா சாவியை நீ எனக்குத் 'தர’லைதான் பொட்டியோட கைப்பிடிலயே அதனோட ரெண்டு சாவியும் கட்டித் தொங்கவிட்டு இருந்துச்சு. அதாலதான் திறந்தேங்ண்ணா... பரிசுதான் என்னன்னு சொல்லலை

மை டியர் ஜீபா படித்தவை அனைத்தும் மறக்காமல் இருக்க சூப்பரோ சூப்பர் ஐடியா ஒண்ணு சொல்லேன்..?

-எஸ். சௌமியா, தேவனாங்குறிச்சி.

மை டியர் ஜீபா !

சிம்பிளா ஒரு விஷயம் சொல்றேன்... எந்த ஒரு மேட்டரைப் படிச்சாலும் முதல் தடவை எங்கே எதுலேயிருந்து படிச்சோமோ அங்கேயே திரும்ப அந்த மேட்டரைப் படிக்கும்போதும் படிக்கணும். உதாரணமா, நியூட்டனின் விதிகளை நாம முதல் முதலா கைப்பட எழுதி வெச்சதைப் பார்த்து படிச்சி இருக்கலாம். அல்லது கெய்டு புக்ஸ்ல படிச்சி இருக்கலாம். இல்லே, பாடப் புத்தகத்திலேயே படிச்சி இருப்போம். அதே நியூட்டன் விதிகளைத் திரும்ப எப்பப் படிச்சாலும் நாம முதல் முதலா எதுல படிச்சோமோ அதுலேயே படிச்சா மறக்காம இருக்கும். ஏன்னா, நாம படிக்கும்போது நம்ம மூளை அந்த இடத்தை, அந்த வரிகளை, அங்கே நாம எழுதின குறிப்புகளை, அடிக்கோடுகளை அப்படியே விஷ§வலாவும் பதிவு செஞ்சுக்கும். அதே விஷயத்தைத் திரும்பவும் பார்க்கும்போது, ஒரு 'கோட்டிங்’ கொடுத்த மாதிரி ஞாபகப்படுத்திக்கலாம். ஆனா, இதையே வேற வேற சமயங்கள்ல வேற வேற எழுத்துக்களா படிச்சோம்னா, ஞாபகம் வெச்சுக்கறது அந்த அளவுக்கு பவர்ஃபுல்லா இருக்காது. குழப்பத்தில் மறந்தும் போகலாம்.

இது ஒரு யோசனைதான். ட்ரை பண்ணிப் பாரு

  ஒரு புதிர் ஜீபா... ரகு, தேவன், கமல் மூன்று பேரும் ஆற்றில் குளிக்கச் செல்கிறார்கள். மூவருமே வெள்ளைச் சட்டைகளை அணிந்திருந்தார்கள். சட்டைகளைக் கரையிலேயே கழற்றி வைத்துவிட்டுக் குளித்த பின்னர், ஒருவர் பின் ஒருவராக வந்து சட்டைகளை மாட்டிக்கொண்டார்கள். 'ரகு போட்டிருப்பது என் சட்டை’ என்கிறான் கமல். 'தேவன் போட்டிருப்பது என் சட்டை’ என்கிறான் ரகு. 'கமல் போட்டிருப்பது என் சட்டை’ என்கிறான் தேவன். சட்டைகள் மாறியதை எப்படி கண்டுபிடித்தார்கள் மூவரும்?

-எஸ். சுந்தரபுதல்வி, திருச்செங்கோடு.

அவங்க மூணு பேரும் பிளேயர்ஸா இருக்கணும். சட்டைகள்லே இருந்த அவங்களோட பெயர்களை வெச்சு கண்டுபிடிச்சு இருப்பாங்க. சரியா?

இன்னொரு பதிலும் இருக்கு... குளிக்கப் போன மூணு பேரும் வேற வேற ஸ்டைல்ல வெள்ளைச் சட்டை போட்டிருக்கலாம்

  ஹாய் ஜீபா நீ சுண்டெலி சைஸில் இருந்தால் எப்படி இருக்கும்?

-செ.கவிமொழி, பல்லடம்.

அதனால எந்தப் பிரச்னையும் இருக்காது கலை... சுண்டெலிதான் என் சைஸ்ல இருக்கக் கூடாது... பிரச்னை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism