Published:Updated:

பந்தை விரட்டும் கோஹ்லி !

பந்தை விரட்டும் கோஹ்லி !

பந்தை விரட்டும் கோஹ்லி !

பந்தை விரட்டும் கோஹ்லி !

Published:Updated:

 கே.கணேசன்

 இப்போது சுட்டி கள் மத்தியில் கிரிக்கெட் உலகக் கோப்பையை யார் ஜெயிப்பாங்க அப்படிங்கிற எதிர்பார்ப்பு இருக்கு. இந்தியாதான் கிறது அவங்களோட அசைக்க முடியாத நம்பிக்கை, ஆசை. அதை நிரூபிக்கும்படி இருந்தது வங்கதேசத்துடன் ஆடிய முதல் போட்டி.

பந்தை விரட்டும் கோஹ்லி !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

அதுவும் போன உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நம்மைத் தோற்கடிச்சு முதல் ரவுண்டிலேயே நம்மை காலி பண்ணிய டீமை எதிர்த்து சூப்பரா ஆடியது நம் அணி!

போட்டியில் ஆடும் டெண்டுல்கர், சேவாக், டோனி என எல்லோரையும் சுட்டிகளுக்கு பிடிக்கும். அதில் இப்போ லேட்டஸ்ட் ஃபேவரட் கோஹ்லிதான். மிடில் ஆர்டரில் இறங்கி, சேவாக்குடன் 203 ரன்கள் சேர்த்தது, ஸ்டெம்பை நோக்கி வரும் பந்துகளை விரட்டி 83 பந்துகளில் தனது முதல் உலகக் கோப்பை சதத்தை அடித்து, சுட்டிகளின் மனதில் 'பச்சக்’கென ஒட்டிக் கொண்டு விட்டார் கோஹ்லி. உலகக் கோப்பையில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்த முதல் இந்திய வீரர் இவர்தான் என்பது கூடுதல் சிறப்பு.

பந்தை விரட்டும் கோஹ்லி !

டெல்லிச் சேர்ந்த வலது கை ஆட்டக்காரரான விராட் கோஹ்லி, ஐ.பி.எல். போட்டிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடினார். ஏற்கனவே மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பையில் நமது அணிக்கு கேப்டனாக இருந்து, பல ஆட்டங்களில் வெற்றியைத் தேடித்தந்து கோப்பையையும் பெற்றுத் தந்திருக்கிறார். இப்போதும் அதுபோலவே தனது திறமையான பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கினால் அணிக்கு உறுதுணையாக செயல்பட்டு இந்த உலகக் கோப்பையைப் பெற்றுத் தருவார் என ஆர்வத்துடன் நம்பு கிறார்கள்.

படங்கள்: சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism