Published:Updated:

கனவு ஆசிரியர்

தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த க்ளோரி டீச்சர் !வி.எஸ்.சரவணன் க.தனசேகரன்

கனவு ஆசிரியர்

தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த க்ளோரி டீச்சர் !வி.எஸ்.சரவணன் க.தனசேகரன்

Published:Updated:
##~##

''என்னடா செல்லம்... ஏன் அழுவுறே?'' என்று ஒரு மாணவியின் தலையில் வாஞ்சையோடு வருடிக்கொடுக்கிறார் க்ளோரி ரோஸ்லின்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் அரசு உதவிபெறும் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார் க்ளோரி ரோஸ்லின். ''சின்ன வயதிலிருந்தே அறிவியல் பரிசோதனைகள் மீது எனக்கு ஆர்வம். அதனால்தான் என் மாணவர்களுக்கு விருப்பத்தோடு சொல்லிக்கொடுக்க முடிகிறது'' என்று எளிமையாகச் சொல்கிற க்ளோரி ரோஸ்லின் செய்யும் பணிகள் அபாரமானவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடக்க வகுப்பு மாணவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்ள உதவும் செயல்வழிக் கற்றல் வழிமுறையிலேயே பெரிய வகுப்பு மாணவர்களுக்கும் கற்றுத்தருகிறார். தேவைப்படும் பாடங்களுக்கு 'டெமோ’ செய்தும் பாடம் நடத்துகிறார். உதாரணமாக, தாவரங்கள் பற்றிய பாடம் என்றால், தோட்டத்துக்கு அழைத்துச்சென்று அங்கே செடிகளைக் காட்டி விளக்கம் சொல்கிறார்.

கனவு ஆசிரியர்

''எங்க மேடம் தோல்வியையே பார்க்காதவங்க'' என்று ஒரு மாணவி சொல்வதும் உண்மைதான். க்ளோரி ரோஸ்லின் பயிற்சி அளித்து அனுப்பும் மாணவர்கள், தொடர்ந்து பரிசுகள் பெறுபவர்களாக இருக்கிறார்கள். ''மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு அவர்களின் முயற்சியே காரணம். போட்டியை எப்படி எதிர்கொள்வது? எந்தெந்த விஷயங்களால் வெற்றி கிடைக்காமல் போகிறது, மேடை நிகழ்ச்சிகளில் எப்படிப் பங்குபெறுவது? இது போன்ற அடிப்படை விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பேன்'' என்கிறார் க்ளோரி ரோஸ்லின்.

இதற்கெல்லாம் காரணம், தன்னிடம் படிக்கும் மாணவர்களைத் தன் குடும்ப உறுப்பினர்கள் போல நினைப்பதுதான். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரின் குடிசைவீடு தீப்பற்றி எரிந்துவிட்டது. அதற்கு தான் உதவியதோடு, பணம் வசூல்செய்தும் கொடுத்திருக்கிறார்.

கனவு ஆசிரியர்

சென்ற வருடம் ஹாங்காங்கிலிருந்து 11 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்கு இந்தியா வந்தபோது, இந்தப் பள்ளிக்கும் வந்தார்கள். இதில் க்ளோரி ரோஸ்லின் பங்கும் இருக்கிறது.

தகவல் தொடர்புச் சாதனங்களை சிறப்பாகப் பயன்படுத்தி கல்வி கற்றுத்தரும் ஆசிரியருக்கு, 'தேசிய நல்லாசிரியர் விருது’ (ஐ.சி.டி. விருது) 2009-ம் ஆண்டிலிருந்து அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியா முழுவதும் 54 ஆசிரியர்கள் தந்த படைப்புகளில் ஒன்பது பேர் தேர்வானார்கள். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரில் க்ளோரி ரோஸ்லினும் ஒருவர். 'வாழ்க்கையில் கடினமானது என்று எதுவும் இல்லை’ என்பதை, நடத்தும் பாடங்கள் மூலம் மாணவர்களுக்குச் சரியாகவும் தெளிவாகவும் கொண்டுசேர்ப்பதில் துடிப்பாக இருக்கிறார் கனவு ஆசிரியர் க்ளோரி ரோஸ்லின்.

 ஐ.சி.டி. விருதுபெறும் ஆசிரியர்!

கனவு ஆசிரியர்

சமீபத்தில் 2012-ம் ஆண்டுக்கான ஐ.சி.டி. விருது (ICT -Information and Communi cation Technology) அறிவிக்கப்பட்டது. அதில், க்ளோரி ரோஸ்லின் டீச்சருடன் விருதை வென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மற்றோர் ஆசிரியர், ஸ்ரீ.திலீப். விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான இவர், தனது வீட்டில் மூன்று ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி அளித்துவருகிறார். சுட்டி விகடனின் எஃப்.ஏ. பக்கங்களுக்கும் இவர் தொடர்ந்து பங்களித்துவருகிறார். பாராட்டுகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism