Published:Updated:

இனிதாகக் கற்போம் தமிழ் !

பொள்ளாச்சி நசன் கே.குணசீலன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

சிறப்பான பயிற்சியினால் நீங்கள் தமிழைக் கற்றுத் தருபவருக்கு முதல் படியைக் கடக்க வைத்துவிட்டீர்கள், வாழ்த்துகள்!

12  உயிரெழுத்துகள் தமிழில் உள்ளன. இவற்றில் 9 உயிரெழுத்துகளை இந்தப் பகுதியில் பார்ப்போம்.

உயிரெழுத்துகள் குறில், நெடில் என்று வேறுபட்டு ஒலிக்கும். குறில் என்றால், குறுகி ஒலிப்பது. நெடில் என்றால், நீட்டி ஒலிப்பது.

குறில்: அ, இ, எ, ஒ (குறுகி ஒலிப்பது ஒரு நொடி)

நெடில்: ஆ, ஈ, ஏ, ஓ, (நீட்டி ஒலிப்பது இரண்டு நொடி)

குறில் - நெடில்களை வாய்விட்டு உரத்துச் சொல்லும்போது ஒலி வேறுபாடு தெரியும். இந்த எட்டு எழுத்துகளையும் குறில் - நெடில் வேறுபாடுகளுடன் ஒலித்துப் பழகுவதற்கு கீழே உள்ள பாடல் உதவும்.  ராகம் போட்டுப் பாடினால், எளிதில் மனதில் பதியும்.

அழாமல் இருக்கணும் சின்னப் பாப்பா அ அ அ

ஆடிப் பாடணும் சின்னப் பாப்பா ஆ ஆ

இனிமையாகப் பழகிட வேணும் இ இ இ

ஈகை குணமும் உனக்கு வேணும் ஈ ஈ

எங்கும் எதிலும் நேர்மை வேணும் எ எ எ

ஏற்றம்பெற நீ உழைத்திட வேணும் ஏ ஏ

ஒற்றுமையாக வாழ்ந்திட வேணும் ஒ ஒ ஒ

ஓடியாடிப் பாடிட வேணும் ஓ ஒ...,

இனிதாகக் கற்போம் தமிழ் !

மேலே உள்ள எட்டு உயிரெழுத்துகளையும், உரிய முறையில் எழுதக் கற்றுக்கொடுங்கள். குறில்- நெடிலாக ஒலித்துக்கொண்டே எழுதி, பயிற்சி செய்வது மிகவும் அவசியம்.

கற்றுக்கொடுத்த எழுத்துகளைச் செய்தித்தாளில் வரியற்றித் தேடி, வட்டமிடச் சொல்லுங்கள்.

அடுத்ததாக நாம் படிக்க வேண்டிய எழுத்து 'ஐ’. இந்த எழுத்தை உரிய முறையில் எழுதியும் செய்தித்தாளில் 'ஐ’ எழுத்தைத் தேடி வட்டமிடும் பயிற்சியும் அவசியமானது.

அடுத்து, இங்கே கொடுக்கப்பட்டுள்ள கடைசி இரண்டு அட்டைகளை நன்றாகக் கவனியுங்கள். இவை மிக மிக முக்கியமானவை. இந்த அட்டைகளுக்குள் 162 எழுத்துகளுக்கான அடிப்படை ஒளிந்திருக்கிறது. எப்படி என்பதன் அடிப்படையைச் சொல்லிக்கொடுத்துவிட்டால், உங்கள் பயனாளிகளுக்கு இனிவரும் பாடங்கள் தூசு போன்றவை. இதோ அவை...

இனிதாகக் கற்போம் தமிழ் !

மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் இணைந்து உயிர்மெய் எழுத்து உருவாகிறது. (24) (25) க் ஆ =  கா,  'க்’  என்பது மெய்யெழுத்து,  'ஆ’ என்பது உயிரெழுத்து, இரண்டும் இணையும்போது 'கா’ என்ற உயிர்மெய்யெழுத்து உருவாகுகிறது.

'கா’ என்ற உயிர்மெய்யெழுத்தை உற்றுப்பாருங்கள். மெய்யெழுத்தின் தலையில் உள்ள புள்ளி போய்விடு கிறது. மீதம் உள்ள எழுத்துடன் (£) குறியீடு இணைகிறது, இந்தக் குறியீடு, இணைந்துள்ள அந்த உயிரெழுத்துக்கான அடையாளம்.'ஆ’ உயிரெழுத்தின் அடையாளமாக அந்த எழுத்தில் இருப்பது (£) குறியீடுதானே!

அட்டைகளில் உயிரெழுத்தும் அதன் அருகில் அதற்குரிய குறியீடும் சிவப்பு வண்ணத்தில் தரப்பட்டுள்ளன. உயிரெழுத்தையும் அதற்கான குறியீட்டையும் அறிந்துகொள்வதற்காகவே இந்த அட்டைகள் தரப்பட்டுள்ளன. இந்த அட்டையில் சிவப்பு வண்ணத்தில் தரப்பட்டுள்ள 9 குறியீடுகள்தான் 162 தமிழ் எழுத்துகளுக்கான அடிப்படை.

எனவே, இந்த உயிரெழுத்துகளையும், அதற்கான குறியீடுகளையும் நினைவில் நிறுத்தினால் போதும். அனைத்து எழுத்துகளும் எளிமையாகிவிடும்.

இப்போது, நீங்கள் தமிழ் கற்பதற்கான இரண்டாது படியைத் தாண்டிவிட்டீர்கள்.

- தொடர்ந்து கற்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு