##~##

நீங்கள் தமிழ் கற்றுக் கொடுப்பவருக்குப் பாடங்கள் எளிதாக இருக்கின்றன என்கிறாரா... அப்படியென்றால், நீங்கள் அவருக்குச் சிறப்பாகக் கற்றுக்கொடுக்கிறீர்கள், வாழ்த்துகள்.

சென்றபகுதியில் குறியீடுகளையும், அந்தக் குறியீடுகள், எழுத்துகளோடு எப்படி இணைந்து ஒலிக்கின்றன என்பதையும் பார்த்தோம். இனிவரும் பகுதியில் ஒரு குறியீட்டைப் பற்றியும், அந்தக் குறியீட்டை எவ்வாறு எழுதுவது என்பது பற்றியும் பார்க்கலாம். அதோடு, அந்தக் குறியீடுகள் எழுத்தோடு எங்கு இணையும் என்பதையும் (வலது புறமா, இடது புறமா, நடுவிலா) பார்ப்போம். மேலும், அந்தக் குறியீடுகள் எங்கு இருந்தால், எப்படி ஒலிக்க வேண்டும் எனப் பயிற்சி எடுப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில் துணைக்கால் (£) பற்றிப் பார்ப்போம்.

க் ஆ = கா (க என்ற எழுத்தின் வலது பக்கத்தில் துணைக்கால் உள்ளது.)

எழுத்தின் வலது பக்கத்தில் துணைக்கால் இருந்தால், 'ஆ’ என்ற ஒலிப்பு வரும்.

உதாரணமாக, கா, சா, டா, தா, பா, றா.

இனிதாகக் கற்போம் தமிழ் !

ik +aa = kaa

க முதல் ன வரையில் இருக்கும் 18 எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் என்று உங்களுக்குத் தெரியும். அந்த எழுத்துகளை அதன் வரிசையில் படித்து நினைவில் வைத்துக்கொள்ளச் சிரமமாக இருந்தால், அதற்குப் பதிலாக...

அந்த எழுத்துகள் பிறக்கும் இடங்களுக்கேற்ப (வல்லினம், மெல்லினம், இடையினம்)  அறிமுகப்படுத்தினால், அந்த எழுத்துகள் மிக எளிமையாக மனதில் பதியும்.

1. கசடதபற - வல்லினம்

2. யரலவழள - இடையினம்

3. ஙஞணநமன - மெல்லினம்

இதை வாய்விட்டு இசையோடு சொல்ல வேண்டும். பாடல் பாடுவதைப் போல இருக்கிறதா... இந்த அடிப்படையில்தான் அட்டையில் எழுத்துகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், துணைக்கால் குறியீட்டுக்கு சிவப்பு வண்ணம் தரப்பட்டுள்ளது.

இனிதாகக் கற்போம் தமிழ் !

துணைக்கால் குறியீடு வந்தால், 'ஆ’ ஒலிப்பு வரும். ஆ வரிசை எழுத்தின் வலது பக்கத்தில் துணைக்கால் இருக்கும்.

இப்போது, அட்டையில் உள்ள எழுத்துகளை ஒலித்துப்பாருங்கள். 'ஆ’ வரிசை எழுத்துகள் எளிமையாக இருக்கும்.

கா முதல் னா வரையிலான இந்த 18 எழுத்துகளையும் செய்தித்தாளில் அடையாளம் கண்டு, வட்டமிட்டு பழகச்செய்யுங்கள். வட்டமிடும்போதே எழுத்துகளை உரக்க ஒலித்துக்கொண்டே வட்டமிடச் செய்யவும். அதே போல குறிப்பேட்டிலும் எழுதிப் பழகவேண்டும்.

படம் 26-ல் இருக்கும் படங்களைப் பாருங்கள். படங்களின் அடியில் அந்தப் படங்களுக்கான சொற்கள் தரப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்து அதன் பெயரை ஒலித்து, அந்தப் பெயரில் 'ஆ’ வரிசை எழுத்து (சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது) எங்கு உள்ளது என்று அறிந்துகொள்வதற்குத்தான் இந்தப் படங்கள் தரப்பட்டுள்ளன. எனவே, படங்களுக்குக் கீழ் உள்ள சொற்களை மனப்பாடமாகப் படிக்க வேண்டியதில்லை.

அட்டை 26கி-ல் 'ஆ’ வரிசையின் எளிமையான சொற்கள் தரப்பட்டுள்ளன. இந்தச் சொற்கள் அனைத்தும் நீங்கள் இதுவரை கற்ற எழுத்துகளின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே, உங்கள் உதவியின்றி நீங்கள் கற்றுத்தரும் பயனாளியைப் படிக்கச் சொல்லுங்கள்.

ஒவ்வோர் எழுத்தாக ஒலித்து, பிறகு அனைத்தையும் வேகமாக ஒலித்தால், அந்தச் சொற்களுக்கு உரிய ஒலிப்புமுறை தானாக வந்துவிடும்.

முன்பு இரண்டு எழுத்துகளை இணைத்துப் படித்துப் பழகியது நினைவில் இருக்கிறதா... அதைப்போலவே இந்தச் சொற்களையும் படிக்கச் செய்யுங்கள்.

- தொடர்ந்து கற்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism