பிரீமியம் ஸ்டோரி
'ஓ' போட வைத்த ஓ பிரைன் !

அயர்லாந்து கிரிக்கெட் டீமின் 'கெவின் ஓ பிரைன்’...

இந்தப் பெயர் மார்ச் இரண்டாம் தேதி வரை அவ்வளவு பிரபலம் இல்லைதான். ஆனால், உலகக் கோப்பையின் முதல் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், அரங்கத்தில் குவிந்திருந்த ஆயிரக் கணக்கான பார்வை யாளர்கள் அத்தனைப் பேரையும் தன் பெயரை உச்சரிக்க வைத்ததோடு இல்லாமல், தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன்பக்கம் திருப்பினார் ஓ பிரைன்.

இவரைப்போல் அதிரடி ஆட்டக் காரர் ஒருவர் இருந்தால், எத்தனை ரன்களையும் சேஸ் பண்ணி ஜெயித்துவிடலாம் என எல்லா அணியினரையும் பொறாமைப்பட வைத்தார்.

போட்டியில் இங்கிலாந்து 327 ரன்கள் குவித்தபோது, அரங்கத்தில் இருந்த ரசிகர்களில் பாதி பேர், இது 'ஒன் சைடு மேட்ச்’ எனக் கிளம்பிவிட்டனர். அடுத்து, அயர்லாந்து ஆட ஆரம்பித்தது. 111 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் என்றதும், இன்னும் கொஞ்சம் பேர் கிளம்பிவிட்டனர். ஆனால், ஆறாவது விக்கெட்டாக களம் இறங்கினார், கெவின் ஓ பிரைன். அப்போதுதான் தெரிந்தது அது 'ரன் சைடு மேட்ச்’ என்று. அதுவரை வெற்றி பெற்றுவிட்ட மனநிலையிலேயே பந்து வீசிக் கொண்டு இருந்த இங்கிலாந்து அணியினர் மட்டுமல்ல, ரசிகர்களும் எதிர்பாராத வகையில்... பந்துகளை நான்காகவும் ஆறா வும் அடித்து நொறுக்க ஆரம்பித்தார்.

##~##

ஐம்பது பந்துகளில் சதமடித்து, தன் அணிக்கு மாபெரும் வெற்றி தேடிக் கொடுத்தார்.

அதுவும் தவிர, உலகக் கோப்பைப் போட்டியில் மிகவும் குறைந்த பந்துகளில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இவருடைய சூறாவளி ஆட்டத்தால், இங்கிலாந்து அணி கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதே இழுபறி ஆகிவிட்டது.

இந்த ஒரு போட்டி யில் மட்டும் இல்லா மல் தன் அணியை முக்கியமான பல போட்டிகளில் ரன்களைக் குவித்தும்,  விக்கெட்டுகளைச் சாய்த்தும் வெற்றிபெற  வைத்திருக்கிறார் ஓ பிரைன்.

நாட்டிங்ஹாம் கவுன்ட்டி அணிக்கு எதிராக இவர் 93 ரன்கள் அடித்து நொறுக்கியதைப் பார்த்து,  நாட்டிங்ஹாம் அணி இவரை அடுத்த போட்டித் தொடரில் தங்கள் அணி சார்பில் விளையாட சேர்த்துக் கொண்டது. இவரது ஆட்டத் திறமைக்கு சாட்சி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு