பிரீமியம் ஸ்டோரி
மை டியர் ஜீபா !

 பெரும்பாலான குடைகள் ஏன் கறுப்பு நிறத்தில் இருக்கின்றன ஜீபா?

 -ஜி.எம்.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

!குடைன்னு சொன்னதும் நமக்கு மழைதான் நினைவுக்கு வரும். ஆனா, கறுப்புக் குடைங்க எல்லாமே வெயிலுக்காக செய்யப்பட்டது. சாதாரணமா கறுப்பு கலர் மத்த கலரைக் காட்டிலும் வேகமா வெயிலின் ரேடியேஷனை உள்வாங்கிக்கக் கூடியது. அதனாலதான் கறுப்பா இருக்கிற எந்தப் பொருளும் சீக்கிரமா சூடாயிடும். ஆக, சூடு மொத்தத்தையும் இந்த கறுப்புக் குடைதான் கிரகிச்சுக்கிட்டு நம்மை அந்த சூட்டிலிருந்து காப்பாத்தும்.

மழைக்கும் நாம இதே கலர் குடையை எடுத்துட்டுப் போறதுக்கு முக்கியக் காரணம் 'டூ-இன்-ஒன்’னா யூஸ் பண்ற நம்ம 'சிக்கன’த்தனம்தான்!

  பால் சைவமா... அசைவமா ஜீபா?

-த.ஞான செல்வன், மும்பை.

!ஸ்ரீபால், தனபால், கோபால், சுரேஷ்பால், இக்பால்...னு எனக்கு நிறையபேரைத் தெரியும்... நீ எந்தப் பாலை சொல்றேன்னு கரெக்க்க்க்ட்டா சொன்னா, அவங்க சைவமா அசைவமான்னு கேட்டுச் சொல்ல வசதியா இருக்கும்... எப்பூடி!?

 டியர் ஜீபா, வண்டுகளும் வண்ணத்துப் பூச்சிகளும் தேனை உறிஞ்சி சாப்பிடும்போது தேனீக்கள் மட்டும் ஏன் தேனை சேமித்து வைக்கிறது?

-ஆ.சிந்து, அரிமழம்.

!பனிக்காலத்திலயோ, எதுவும் சாப்பிடக் கிடைக்காத சமயத்திலோ தேவைப்படுமேன்னுதான் தேனீக்கள் சேகரிச்சு வைக்குது. உண்மையா பார்த்தா நாம அதைத் திருடி எடுத்துக்கறோம்னுதான் சொல்லணும்.

பக்கத்து வீட்டுக்காரங்க, வர ராத்திரி லேட்டாகிடலாம்னு முன்யோசனையோடு சாப்பாடு, குழம்பு எல்லாம் மதியமே செஞ்சு அவங்களோட ஃப்ரிஜ்ஜிலே வெச்சுட்டுப் போனா அதைத் திருட்டுத் தனமா நாம எடுத்துட்டு வந்து சாப்பிட்டா எப்படி இருக்கும்? அதுமாதிரிதான் தேன் விஷயமும்!

இன்னொண்ணு தெரியுமா? தேனீக்கள் பூக்களில் இருக்கிற 'nectar’-ங்கிற மலர்தேனை எடுத்து வந்து அப்படியே தன் கூட்டில் சேகரிச்சு வைக்காம ஒரு சின்ன வேலையைச் செய்யுது... இன்னிக்கும் எல்லாரையும் ஆச்சரியப்பட வைக்கிற மிக முக்கியமான வேலை அது. தான் எடுத்து வர்ற மலர்தேனோடு தன் வாயில் சுரக்கிற ஒரு ஸ்பெஷல் ஐட்டத்தைக் கலந்து, கெடாத... மருத்துவ குணங்கள் இருக்கிற... 'தேன்’ (honey) என்கிற ஒரு சூப்பர் உணவுப் பொருளா மாத்தி, தன் தேன்கூட்டில் சேகரிச்சு வைக்குது. இந்த டின்னரைத்தான் நாம அவங்க ஃப்ரிஜ்லேந்து எடுத்துட்டு வந்துடறோம்..!

  மை டியர் ஜீபா, 'வீ’ என்ற ஆங்கில எழுத்து ஆறு முறை இடம்பெறும் ஒரு வார்த்தையை  சொல்ல முடியுமா உன்னால்?

-ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.

!ஆறு 'வீ’ இருக்கிற ஆங்கில வார்த்தைன்னு குறிப்பிட்டு எதுக்கு கேட்கறேன்னு தெரியலை... குறிச்சுக்கோ, ‘indivisibility’(பிரிக்கப்பட இயலாத தன்மைனு அர்த்தம்). இதையே பன்மையில indivisibilitiesனு சொன்னா ஏழு 'வீ’ வந்துடும். உனக்கு இன்னொரு வார்த்தையும் சொல்றேன்...

‘floccinaucinihilipilification’..! ஒரு பொருள் முக்கியமில்லாதது என்பதை விவரிக்கிற செயலுக்கு சொல்ற வார்த்தை இது. இதை 'ஃபாக்ஸினாஸினாஹில்பிலிஃபிகேஷன்’-னு உச்சரிக்கணுமாம்... இதுல மொத்தம் ஒன்பது 'வீ’ இருக்கு. இது போதுமா?

இன்னொரு விஷயம் சொல்லட்டா? உனக்கு '2ஜி’ தெரியும் '3ஜி’ தெரியும் '15ஜி’ தெரியுமா? கேட்டுக்கோ...

‘chargoggagoggmanchauggagoggchaubunagungamangg'... இதுல மொத்தம் 15 'ரீ’ இருக்கு! என்ன வார்த்தை இதுன்னு கேக்கறீயா? இது அமெரிக்காவிலே இருக்கிற ஒரு நதியோட பேரு. இப்போ அந்த நதியை 'வெப்ஸ்டர் லேக்’னு செல்லமா சொல்லிக்கறாங்க. ஒரு காலத்துல அதுக்கு இவ்ளோ... பெரிய பேருதான் இருந்துச்சாம். இதை எப்படி உச்சரிக்கணும் தெரியுமா... 'சகாககாக் மன்சாககாக் ஜபனகாங்கமாங்க்’..!

எங்கே, ஒரு தபா சொல்லிப் பாரு!

  மூட்டைப் பூச்சிக்கு மூட்டைப் பூச்சின்னு எப்படி பெயர் வந்தது ஜீபா? (எப்பூடி!?)

-அனன்யா, திருச்சி.

! வயிறு முட்ட ரத்தம் குடிச்சதும் இந்தப் பூச்சிகள் பார்க்க மூட்டை மாதிரியே இருக்கறதாலே அப்படி சொல்றாங்களோ என்னவோ. இங்கிலீஷ்ல இதுக்கு ஙிமீபீ தீuரீனு சொல்வாங்க. ஒருவேளை, அந்தக் காலத்தில் உழைச்சுக் களைச்சு மக்கள் மூட்டை மேலேயும் கோணிப் பைகள் மேலேயும் படுத்து தூங்கி இருப்பாங்க... அவங்களோட ஙிமீபீ அதுங்கறதாலே இப்படி பேரு வந்திருக்கலாம். உனக்கு இந்தப் பேரு பிடிக்கலைனா சொல்லு... நான் வேணும்னா அதுங்ககிட்டே பேசிப் பாக்கறேன்... 'அனன்யா பூச்சி’ன்னு கெஸட்லே பேரை மாத்தி வெச்சுக்கச் சொல்றேன். ஓகேவா? (இது எப்பூடி!?)

  சூரியன் ஒரு நெருப்புக் கோளம் என்கிறார்கள். பூமியிலிருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு அப்புறம் காற்று மண்டலமே கிடையாதாம். அப்படினா, ஆக்ஸிஜன் இல்லாமல் சூரியனில் நெருப்பு எப்படி எரியுது?

-கு.மகேஷ் முரளி கிருஷ்ணா, பவானி.

!எரியறதுல நிறைய வகை இருக்கு மகேஷ். வெயில்ல ரொம்ப நேரம் இருந்தா உடம்பு எரியறது, சிலருக்கு வயிறெரியறது... இதெல்லாம் ஒரு வகை. அணுக்கள் இடையே இருக்கிற 'பாண்டு’(Bond)-ல் மாற்றம் உண்டாவதால் நெருப்பும், சூடும் வெளியாகி எரியறது ரெண்டாவது வகை. இதுல, பொருட்களில் இருக்கிற கார்பன் அணுக்களின் 'பாண்டு’ உடைஞ்சு அதனோடு ஆக்ஸிஜன் சேர்ந்து புதுசா பாண்டு உண்டாகுது. இந்த 'பாண்டு’ மாற்றத்தில் கார்பன்-டை ஆக்ஸைடு வெளியாகுது.

சூரியனில் இப்படி எல்லாம் இல்லை. அங்கே அணுக்களோட பாண்டு மாற்றம் நடக்கறதுக்குப் பதிலா அணுக்களே மாற்றமாயிடுது! ஹைட்ரஜன் அணுக்கள் நாலு ஒண்ணா சேர்ந்து ஒரு ஹீலியம் அணுவா மாறிடுது. ஆனா, நாலு ஹைட்ரஜன் அணுவோட எடை ஒரு ஹீலியம் அணுவின் எடையைவிட கொஞ்சம் அதிகமா இருக்கு. அதனால, ஹீலியமா மாறும்போது அந்தக் 'கொஞ்ச’ எடை அப்படியே எனர்ஜியா மாறி வெளிச்சமாவும் வெப்பமாவும் வெளிப்படுது. அங்கே ஆக்ஸிஜனும் இல்லை அதுக்கு அங்கே வேலையும் இல்லை! ஓகேயா மகேஷ்?!

ஹாய் ஜீபா! உனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா?

-எம்.பரமேஸ்வரன், சேலம்.

!ஓ! ரொம்ப நல்லா விளம்பரப் படங்களில் நடிக்கத் தெரியும். டீமில்தான் யாரும் சேர்த்துக்க மாட்றாங்க... நீ கொஞ்சம் எனக்காக சிபாரிசு செய்யேன், ப்ளீஸ்!

  மை டியர் ஜீபா! நீ ஏன் எலெக்ஷன்லே நிக்கக் கூடாது? நாங்க எல்லோருமா சேர்ந்து உனக்கு வோட்டுப் போட்டு ஜெயிக்க வெச்சுடுறோம். என்ன சொல்றே?

-ந.மணிமேகலை, திண்டுக்கல்.

!நல்ல யோசனைதான். எனக்கும், எல்லா சுட்டிகளுக்கும் 'எலெக்ஷன் வயசு’ வரட்டும்... பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு