Published:Updated:

சூப்பர்மேன் கார்ட்டூன் வி.ஐ.பி.க்கள் மீட்டிங்....

சூப்பர்மேன் கார்ட்டூன் வி.ஐ.பி.க்கள் மீட்டிங்....

பிரீமியம் ஸ்டோரி

இரா.நடராசன்

சூப்பர்மேன் கார்ட்டூன் வி.ஐ.பி.க்கள் மீட்டிங்....

ஸ்வெய்ங்! எங்கிருந்தோ பறந்து வந்த சூப்பர்மேன், அந்த உயரமான லைட் ஹவுசின் மொட்டை மாடியில் நின்றபடி யாரோ கையசைப் பதைக் கண்டார். நேராக அங்கே வந்து இறங்கினார்.

சூப்பர்மேன்: ஓ... க்யூட் லிட்டில் ஸ்டார்! உனக்கு என்ன வேண்டும்? என் உதவி தேவையா?

சுட்டி: அட! இதை என்னால் நம்பவே முடியலை. சூப்பர்மேன் நீங்களா? உங்களோட கொஞ்ச நேரம் பேசி, எங்க பத்திரிகைக்காக பேட்டி எடுக்க விரும்பி பல நாட்களா... பல உயரமான கட்டிடங்களில் போய் காத்திருந்தேன். எப்படியும் இந்த வழியா பறந்து வருவீங்கனு தெரியும்.

சூப்பர்மேன்: இந்த பூமி கோளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன். யார் ஆபத்தில் சிக்கினாலும் வந்து காப்பாற்றுவேன். சொல்லு உன் பெயர் என்ன?

##~##

சுட்டி: என் பெயர் ஆதித்யா வெங்கட்ரமணன். சென்னை, பெரும்பாக்கம் பாரதி வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். உங்களைப் பேட்டி எடுக்கலாமா?

சூப்பர்மேன்:  ஒண்டர்ஃபுல்! இந்த விஷயம் லூயிஸ் லேனுக்குத் தெரிஞ்சா ரொம்ப சந்தோசப் படுவா. இன்ஃபேக்ட்... நானே ஒரு பத்திரிகைக்காரன்தானே!

ஆதித்யா: அந்த விஷயத்துக்கு அப்புறம் வருவோம். முதலில் உங்களை உருவாக்கியது யார்?

சூப்பர்மேன்: ஜெர்ரி சீகல் என்ற  எழுத்தாளர் மற்றும் அவரது நண்பர் ஜோசப் ஸ¨ஸ்டர். இருவரும் இணைந்து, என்னை 1934-ல் உருவாக்கினாங்க. அவர்கள் நடத்திய சயின்ஸ் காமிக்ஸ் புத்தகத்தில்தான் எனது முதல் பிரவேசம்.

சூப்பர்மேன் கார்ட்டூன் வி.ஐ.பி.க்கள் மீட்டிங்....

ஆதித்யா: உங்களுக்கு பறக்கவும்...  ஓடும் ரயிலையே நிறுத்தறதுக்குமான பவர் எல்லாம் எங்கே இருந்து கிடைத்தது?

சூப்பர்மேன்: ஓ. கே. கண்டுபிடிச்சுட்ட. நான் இந்த கிரகத்தைச் சேர்ந்தவனல்ல. கிரிப்டான் எனும் (கற்பனைதான்) கோள் அழிவதற்கு முன் என் பெற்றோர் (ஜோ எல் மற்றும் லாரா) என்னை ஒரு ராக்கெட்டில் வைத்து அனுப்பிட்டாங்க. அப்போ எனக்கு மூணு வயசு. பூமியில் வந்து விழுந்த என்னை வளர்த்தது... வயதான ஜொனாதனும் என் வளர்ப்பு அம்மா மார்த்தா கென்ட்டும்தான்.

ஆதித்யா: பல ஆபத்துகளிலிருந்து உலகைக் காப்பாற்றுவதே உங்கள் பணியாக இருக்கு. ரயில் கவிழாமல் தடுப்பது, பெரிய கட்டடங்கள் இடிந்தால் பறந்தோடி உதவுறது,  ராக்கெட் திசை மாறினால்  அதைச் சரிசெய்வது... ஆனால், உண்மையில் ரகசியமான ஒரு பத்திரிகையாளர் வேலை!

சூப்பர்மேன்: ஆமாம்! பத்திரிகையாளராக என் பெயர் கிளாக் கென்ட். கண்ணாடி போட்டுக் கொண்டு ரொம்ப அப்பாவியா இருப்பேன்.

ஆதித்யா: அங்கேதானே லூயிஸ் லேனை சந்திக்கிறீங்க... பாவம் அந்த அக்கா! நீங்கதான் சூப்பர்மேன்னு தெரியாம, உங்ககிட்டயே அவரைப் பற்றி பெரிசா பேசி சிலாகிப்பாங்க. நீங்களும் அலட்டிக்காம கேட்டுப்பீங்க. அதெல்லாம் எங்களுக்குப் பிடிக்கும். முதலில் கார்ட்டூன்ல வந்ததைச் சொல்லுங்க.

சூப்பர்மேன் கார்ட்டூன் வி.ஐ.பி.க்கள் மீட்டிங்....

சூப்பர்மேன்: 1963-ல் ஆக்ஷன் காமிக்ஸிலிருந்து டி.சி. எனப்படும் கார்ட் டூனில் தோன்ற ஆரம்பிச்சேன். அப்புறம் 1976-ல் திரைப்படமாக. முதல் முயற்சி சூப்பர் ஹிட்!

ஆதித்யா: 1993-ல் நீங்க இறந்துவிடுவதாக கார்ட்டூன் எடுத்தாங்க இல்லையா... உலகமே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

சூப்பர்மேன்: எஸ்! தி டெத் ஆஃப் சூப்பர்மேன். காமிக்ஸ், டிவி கார்ட்டூனும்  உலகில் அதிகம் விற்பனையானது. காமிக்ஸ் சி.டி வீடியோவும் வேர்ல்டு ரெக்கார்டு.

ஆதித்யா: பிறகு அடுத்த ஆறு மாதத்தில் திரும்பவும் தோன்றி அசத்தினீங்க.  இன்றைக்கும் நீங்கதான் சூப்பர் ஹீரோ. சுட்டிகளுக்கு  உங்க மெசேஜ்?

சூப்பர்மேன்: ஆபத்து என்றால் பயமோ, பதட்டமோ கூடாது. நிதானமாக அதே சமயம் துரிதமாகச் செயல் படணும். எதற்குமே, எப்போதுமே தயாரா இருக்கணும்!

ஆதித்யா:  தேங்க்யூ சூப்பர்மேன் தேங்க்யூ!

சூப்பர்மேன்: பை... மை சுட்டி ஃபிரெண்ட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு