பிரீமியம் ஸ்டோரி

  இலவசமாகக் கிடைப்பதிலேயே மிகவும் காஸ்ட்லியான இலவசம் எது ஜீபா?

-ஆர்.ஸ்ருதி, கோயம்புத்தூர்.

மை டியர் ஜீபா !

இதே கேள்வி எனக்கு தோணுச்சு. ஒரு ஆஸ்பத்திரிக்கு போயிருந்தப்பதான் அதுக்கான பதிலும் கிடைச்சது. சுவாசிக்கவே கஷ்டப்பட்டுட்டு இருந்த ஒருத்தருக்கு 'மாஸ்க்’ மாட்டி, ஆக்ஸிஜனை சுவாசிக்க வெச்சாங்க. ஒரு மணி நேரத்துக்கு பல ஆயிரங்கள் பணம் செலவாச்சு! கொஞ்சம் யோசிச்சுப் பாரு ஸ்ருதி, பிறந்ததுலே இருந்து கடைசி வரைக்கும் எந்தப் பில்லும் கட்டாம இலவசமா சுவாசிச்சுட்டு இருக்கோமே... அதைவிட ரொம்ப காஸ்ட்லியான இலவசம் வேற என்ன இருக்க முடியும்?

டியர் ஜீபா, பழங்களை ஜூஸ் எடுத்துக் குடிப்பதைவிட அப்படியே சாப்பிடுவதுதான் நல்லதுன்னு சொல்றாங்களே... நிஜமா?

-எம்.எஸ்.மோஹித், சேலம்.

பழத்தை ஜூஸ் எடுத்து அப்படியேவா குடிக்கறோம்? கூடுதல் இனிப்புக்காக சர்க்கரையும் சேர்த்துக்கறோம். உடம்பை ஸ்லிம்மா வெச்சுக்க நினைக்கறவங்களுக்கு இந்த சர்க்கரை கூடுதல் கலோரியா சேர்ந்துக்கும். அதுமட்டுமில்லே, பழமா சாப்பிட்டா ஒரு பழமோ ரெண்டு பழமோதான் சாப்பிடுவோம். அதே ஜூஸ்னா எப்படியும் நாலு அஞ்சு பழத்துல ஜூஸ் எடுத்தாதான் முடியும். இதுவும் நம்ம உடம்புக்கு கூடுதலான சத்தா சேரும்.

பழத்தை அப்படியே சாப்பிடும்போது இனிப்பு கம்மியா இருந்தாலும் பெருசா தெரிஞ்சுராது. சுவைச்சு சாப்பிடுவோம். அதுமட்டுமில்லே, பழத்தை அப்படியே சாப்பிடறதுனாலே அதுல இருக்கிற நார்ப் பொருளையும் நாம சேர்த்துச் சாப்பிடுவோம். அது ஜீரணம் ஆகாதுனாலும், நம்ம வயிறு  அதை ஜீரணிக்க மேக்ஸிமம் ட்ரை பண்ணும்... இந்த ஆக்ஷன்லே நம்ம உடம்புல இருக்கிற கொழுப்புச் சத்து எரிக்கப்படுது. அதேபோல, வாயால் கடிச்சு, மென்னு சாப்பிடறதாலேயும் எனர்ஜி செலவாகி கொழுப்புச் சத்து குறையும்.

பழத்தை எப்படி சாப்பிடறது நல்லதுன்னு இனி ஒரு முடிவுக்கு வந்துடுவே இல்லே... ரொம்ப டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணதுல எனக்குதான் நிறைய கலோரி செலவாயிடுச்சு... 'டபுள் சுகர்’ போட்டு ஒரு பலாப் பழ ஜூஸ் ப்ளீஸ்!

  சாத்தான், பிசாசுகளை எல்லாம் 'குட்டி’ என்று அடைமொழியிட்டு அழைப்பது ஏன் ஜீபா?

-ஜி.எம்.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

ஒரு விஷயம் அப்படியே சின்ன சைஸ்ல இருக்கறதை நாம இப்படிதான் அடைமொழி வெச்சு சொல்றோம்... குட்டி கார், குட்டி செருப்பு, குட்டி சைக்கிள்... இப்படி! இதே, ஜீவராசிகளின் வாரிசுகளைச் சொல்ல, குட்டி சேக்கறோம்... நாய்க் குட்டி, பூனைக் குட்டி என்று.

இன்னொரு விஷயத்தையும் கவனிச்சேன்... பயமுறுத்துகிற ஜீவராசிகளைச் சொல்லும்போது, குட்டியை முன்னாடி போட்டுச் சொல்றோம்... குட்டித் தேள், குட்டிப் பல்லி, குட்டிக் கரப்பான் பூச்சி... இப்படி!

இந்தச் சாத்தான், பிசாசு விஷயத்தில் நாம அதன் சின்ன சைஸைச் சொல்றோமா இல்லை... அதனோட குட்டியைச் சொல்றோமா இல்லை... பயத்துல சொல்றோமான்னு சரியாத் தெரியலை மஞ்சரி. எதுக்கும் ஒரு அப்பாயின்மென்ட் வாங்கித் தர்றேன், கொஞ்சம் விவரமா கேட்டுச் சொல்றியா?

  மை டியர் ஜீபா! முக்கனிகள் என்றாலே மா, பலா, வாழையைத்தான் குறிப்பிடுகிறோம். திராட்சை, ஆப்பிள், மாதுளை எல்லாம் முக்கனிகள் இல்லையா ஜீபா?

-எஸ்.சௌம்யா, தேவனாங்குறிச்சி.

இலக்கியங்கள்லே இந்த மூணு பழங்களைத்தான் அதிக சுவை மிக்கதுன்னு முக்கனிகளா குறிப்பிட்டிருக்காங்க. அதையேதான் நாம இன்னிய வரைக்கும் சொல்லிட்டு வர்றோம். அதனால் என்ன சௌமி, உன் ஆசைக்கு திராட்சை, ஆப்பிள், மாதுளை இவை மூணையும் 'முக்கனிகள்-டூ’ன்னு சொல்லிக்கோ... கொய்யா, சப்போட்டா, பப்பாளி இந்த மூணையும் 'முக்கனிகள்-த்ரீ’ன்னு சொல்லிக்கோ... இந்த மூணு முக்கனிகளையும் மொத்தமா சேர்த்து 'மும்முக்கனிகள்’னு கூட சொல்லிக்கோ! எப்பூடி?!

உலகிலேயே மிகப் பெரிய விதை எதுன்னு தெரியுமா ஜீபா? உனக்கு க்ளூ தர்றேன்... இது 30 செ.மீ. விட்டமும் 20 கிலோ எடையும் கொண்டது... திருத்திருன்னு முழிக்காம பதிலைச் சொல்லு!

-எஸ்.மஞ்சுளா, கரூர்.

'கோகோ டெ மேர்’ (Coco de mer)...சரியா மஞ்சுளா? புல்லின மரங்கள்னு சொல்ற பனை, தென்னை மர வகையைச் சேர்ந்த மரத்தின் பெயர் இது. ஆப்பிரிக்க கண்டத்தை ஒட்டிய செஷெல்ஸ் (Seychelles) தீவுகளில் இந்த மரங்கள் இருக்காம். தாவரவியல்லே இதுக்கு 'லொடொய்சியா மால்டிவிகா’ (Lodoicea maldivica)ன்னு பெயர். இதனோட விதைதான் உலகத்திலேயே பெரியதாம்.

இதனோட பழம் கிட்டத்தட்ட 40-50 செ.மீ. விட்டம் இருக்குமாம். இதுவரைக்கும் பதிவானதுல, 42 கிலோ எடைகொண்ட இதன் பழமும், 17.6 கிலோ எடைகொண்ட இதன் விதையும்தான் ரெக்கார்டை வெச்சிருக்காம்!

ம்ம்... பலா ஜீஸை விட இந்தப் பழத்தோட ஜூஸ் நல்ல்ல்ல்ல்லா இருக்கும் போல இருக்கே... கிடைக்குமா?!

 ஆமைகள் ஏன் ஜீபா அவ்வளவு ஸ்லோவா நடக்குது? வேகமா நடக்கக் கூடாதா?

!முழுசா மறைக்கிற அளவுக்கு பெரிய சைஸ் பாறையை முதுகுல சுமந்துகிட்டு, தரையில் படுத்தடி தவழ்ந்து நடக்கச் சொன்னா... நாமும் இப்படிதான் ஸ்லோவா போவோம். விட்டா, இந்த ஆமைகளே கூட நம்மை ஓவர் டேக் செஞ்சுடுங்க!

தரை ஆமைங்கதான் இப்படி. தண்ணீர்ல இருக்கிற ஆமைகளோட ஸ்பீடு நம்மை விட அதிகம்! ரொம்பப் பிரபலமான பச்சை நிற கடல் ஆமைகளோட ஸ்பீடு மணிக்கு 20 மைல்கள்! மனுஷங்களோட ஸ்பீடு என்ன தெரியுமா? ஒலிம்பிக் ரெக்காட்ஸை வெச்சிருக்கிற நீச்சல் வீரர் ஃபெட்ரிக் பவுஸ்கெட், 50 மீட்டர் தூரத்தை 20.94 செகண்ட்ஸ்ல தொட்டிருக்கார். அதாவது, மணிக்கு 5.34 மைல்கள்!

அதுசரி, நீ யாரு... எங்கேயிருந்து கேள்வி கேட்டே? போஸ்ட் கார்டுல இதெல்லாம் எழுதறது கிடையாதா? ஹைய்ய்யோ ஹைய்ய்யோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு