Published:Updated:

இனிதாகக் கற்போம் தமிழ் !

பொள்ளாச்சி நசன், படங்கள்: ஆ.முத்துக்குமார்

பிரீமியம் ஸ்டோரி
##~##

மிகவும் இனிதாகத் தமிழ் உங்கள் மனதை ஈர்க்கிறது என்பதும், நீங்கள் கற்றுத்தரும் பயனாளி மனதிலும் நன்கு பதிகிறது என்பதும் எங்களுக்கு வருகிற மடல்கள் மூலம் தெரிகின்றன.

சென்ற பகுதியில் மற்றும் இணைந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளைப் பார்த்தோம். தமிழ் உயிர்மெய் எழுத்துகளின் அகர வரிசையில் இ, ஈ எழுத்துகளுக்குப் பிறகு, உ, ஊ எழுத்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

தமிழைப் படிக்கிற பலரும் இ, ஈ வரிசை வரை சிக்கல் ஏதுமின்றி உள்வாங்கிப் படித்துவிடுகிறார்கள். உ, ஊ வரிசை உயிர்மெய் எழுத்துகள் புதிய வரிவடிவம் பெறுவதால், எழுத்தின்  வடிவத்தில் குழப்பம் உருவாகும்.

(உ, ஊ வரிசை உயிர்மெய் எழுத்துகளின் புதிய வரிவடிவத்தை ஆறு குறியீடுகளுக்குள் அடக்கிக் கற்பிக்க முடியும். அப்படிக் கற்பித்தாலும் எழுத்துகள் நினைவில் நிற்பது இல்லை. இதனால், அடுத்து கற்பிக்கப்படும் அனைத்து எழுத்துகளுமே சிக்கலாகி, படிக்கும் திறனில் பிரச்னை உருவாகிறது)

இனிதாகக் கற்போம் தமிழ் !

இந்தச் சிக்கல், நீங்கள் கற்றுத்தருபவருக்கு ஏற்படக் கூடாது. எனவே, மற்றும் இணையும் உயிர்மெய் எழுத்துகளை நாம் இறுதியில் பார்க்கலாம். இப்போது மற்றும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகளுடன் இணையும்போது வரும் உயிர்மெய் எழுத்துகளைப் பார்ப்போம்.

- குறில், - நெடில். எனவே,இணைந்து உருவாகும் உயிர்மெய் எழுத்து குறிலாகவும், இணைந்து உருவாகும் உயிர்மெய் எழுத்து நெடிலாகவும் ஒலிக்க வேண்டும்.

க் எ = கெ,  க் ஏ = கே

(ik+ae= kae), (ik+aee = kaee)

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டை எண்:29 மற்றும் 30-ல் இருக்கும் எழுத்துகளை நன்கு கவனிக்கச் சொல்லுங்கள். - வரிசை எழுத்துகளில்  ஒற்றைக் கொம்பும், - வரிசை எழுத்துகளில் இரட்டைக் கொம்பும் உள்ளன.

இந்தக் குறியீடுகள் சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டிருக்கிறது அல்லவா... அதை நினைவில் நிறுத்திக்கொள்ளச் செய்யுங்கள். ஒற்றைக் கொம்பு இருந்தால் குறிலாகவும், இரட்டைக் கொம்பு இருந்தால் நெடிலாகவும் ஒலிக்க வேண்டும்.

அட்டைகளில் படங்களுக்கு அடியில் உள்ள சொற்களில் மற்றும் வரிசை எழுத்துகள், சிவப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்துகளைச் செய்தித்தாளில் வட்டமிட்டு, ஒவ்வோர் எழுத்தாக ஒலித்துப் பழகச் செய்யுங்கள்.

இப்போது எ, ஏ உயிர்மெய் எழுத்து வரிசையை ஒலித்துப் பார்க்கலாமா?

இனிதாகக் கற்போம் தமிழ் !

கெ, கே, செ, சே, டெ, டே, தெ, தே, பெ, பே, றெ, றே, யெ, யே, ரெ, ரே,  லெ, லே, வெ, வே, ழெ, ழே, ளெ, ளே, ஙெ, ஙே, ஞெ, ஞே, ணெ, ணே,  நெ, நே, மெ, மே, னெ, னே.

அட்டை எண் 29A மற்றும் 30A ஆகியவற்றில் தரப்பட்டுள்ள எளிமையான சொற்கள் யாவும் இதுவரை நீங்கள் உங்கள் பயனாளிக்கு கற்றுக்கொடுத்த எழுத்துகளிலிருந்து உருவாக்கப்பட்டவையே. எனவே, உங்களின் உதவியின்றியே அவற்றைப் படிக்கச் செய்யுங்கள். அவர் படிக்க சிரமப்பட்டால், சென்ற பகுதியில் இரண்டு இரண்டு எழுத்துகளாகப் பிரித்துப் படிக்கக் கற்றுக் கொடுத்தது போல செய்யுங்கள்.

இந்தப் பகுதியில் கற்றுக் கொண்ட எழுத்துகளையும் சொற்களையும் செய்தித்தாளில் கண்டுபிடித்து, வட்டமிட்டு, உரக்கச் சொல்லிப் பழக்குங்கள்.

             - தொடர்ந்து கற்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு