மாயா டீச்சரின் மந்திரச் கம்பளம்!

மாயா டீச்சர் சுட்டிகளோடு ஒவ்வொரு இடமாக போய் கொண்டு இருந்ததால், தனது சொந்த ஊரு பக்கம் போய் ரொம்ப நாளாயிற்று. இந்த கோடைவிடுமுறையில் தனது கிராமத்திற்குச் செல்ல ரெடியான மாயா டீச்சரோடு... நாங்களும் வருகிறோம்... என பெட்டி படுக்கையோடு புறப்பட்டனர், பாபநாசத்தில் உள்ள பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் பள்ளியில் ஏழாவது படிக்கும் ஹரிஹரன், மாயவரம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் ஏழாவது படிக்கும் அரவிந்த் மற்றும் ஒன்பதாவது படிக்கும் சிந்துஜாவும் இவர்களோடு... சென்னை எர்வின் மெட்ரிக் பள்ளியில் ஆறாவது படிக்கும் நிவேதிதாவும் சேர்ந்து கொண்டாள். கிராமத்து காற்றை சுவாசிக்கப்போகும் சந்தோஷத்தில் இருந்த இவர்களை மாயா டீச்சர் தன்னுடைய மந்திரக் கம்பளத்தில் ஏற்றிக்கொண்டு பறந்தார். காலை சீக்கிரமாகவே கிராமத்திற்குப் போய் சேர்ந்தனர்.

"எல்லோரும் கிளம்புங்க ஏரிக்குப் போய் குளிச்சுட்டு வந்துடலாம்" என்று மாயா டீச்சர் சொன்னதும் நிவேதிதா தயங்கியபடியே...

"டீச்சர் நான் இதுவரைக்கும் ஏரியில குளிச்சதில்லை. எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்றாள். "தெனமும் நம்ம வீட்ல காத்தோட்டமே இல்லாத நாலு சுவத்துக்குள்ள நின்னுக்கிட்டு ரெண்டு வாளி தண்ணில காக்கா குளியல்தானே போடுறோம். ஏரின்னா நிறைய தண்ணி இருக்கும். சூப்பரா, நீச்சல் போட்டுக்கிட்டு குளிக்கலாம் பயப்படாதே வா" என்றான் அரவிந்த்.

"சரி... சரி... வாங்க போகலாம்" என்றார் மாயா டீச்சர். கம்பளத்தை எடுத்து மாயா டீச்சர் விரிக்கவும், கொஞ்சநேரத்தில் ஏரிக்கரையை அடைந்தனர். "டீச்சர் நான் என்னமோ ஏரின்னா நிறைய தண்ணி இருக்கும்னு நினைச்சேன். கொஞ்சம்தான் இருக்குது" என்று கேட்டான் ஹரிஹரன். "மழைகாலத்துல பாத்தீன்னா, ஏரி முழுக்க தண்ணி இருக்கும். அந்த சமயத்துல எங்கெல்லாமோ இருந்து ஏராளமான பறவைகள் வந்துக்கிட்டே இருக்கும். இந்த கரையில இருக்குற பனை மரத்துலதான் அதுங்க கூட்டம் கூட்டமா தங்கியிருக்கும். உயரமா இருக்கிற ஏரிக்கரையை சுத்திலும் நிக்கிற மரம், செடி, கொடியெல்லாம் ஏரியோட கரை உடைஞ்சு போயிடாம தடுக்குது. அதாவது மண்ணரிப்பை தடுக்குதுன்னு சொல்லலாம். இங்க நிக்குற பனைமரங்களை நம்பித்தான் பெரும்பாலான மக்கள் வாழ்க்கை நடத்தறாங்க. பனை மரம் கொடுக்கிற நொங்கு ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். பனை வெல்லம், பனை கற்கண்டு இவையெல்லாம் சளி, இருமலுக்கு நல்ல மருந்து தெரியுமா" என்றார் டீச்சர். "அதோ, வெள்ளையா கூட்டம் கூட்டமா நிக்குதே... இதெல்லாம் கொக்கா, நாரையா டீச்சர்" என்றாள் நிவேதிதா.

"இங்க இருக்கறது உன்னிக்கொத்தி என்கிற கொக்கு இனம்! இது அதிக ரிஸ்க் எடுத்தெல்லாம் உணவை தேடாது. அப்படியே ஒத்த கால்ல நின்னுக்கிட்டே இருக்கும். திடீர்னு தண்ணிக்குள்ள இருந்து மேல வர்ற மீன்களையும், சேற்றுக்குள்ள கிடக்கிற நத்தைகளையும்தான் உன்னிக்கொத்தி சாப்பிடும். ரொம்ப பொறுமை சாலின்னா பாத்துக்குங்க" என்றார் மாயா டீச்சர். ஏரியின் மறுகரையை நோக்கி பார்வையை பதித்திருந்த சிந்துஜா, "ஐ, ஜாலி" என்ற அரவிந்த்தின் குரல் கேட்டு திரும்பினாள். "டீச்சர் இந்த பக்கம் மாடுகளை குளிப்பாட்டிட்டு இருக்காங்க. அந்த பக்கம் மனுஷங்க குளிச்சிக்கிட்டு இருக்காங்க. அங்க பாருங்க குடிக்க தண்ணி தூக்கிட்டு போறாங்க. என்ன டீச்சர் சுகாதாரமாவே இருக்கமாட்டாங்களா?" என்றாள்.

"ஏன் டீச்சர் இந்த தண்ணிய இவங்க அப்படியே சுத்தப்படுத்தாம குடிப்பாங்களா?" என்றாள் நிவேதிதா.

"அதான் இல்லை! இந்த தண்ணியை கொண்டு போய் ஒரு மண்பானையில ஊத்தி வச்சிடுவாங்க.அந்த தண்ணிக்குள்ள தீத்தாங்கொட்டை இருக்குல்ல அதை போட்டு மூடி வச்சுருவாங்க.ரெண்டு, மூணு மணி நேரம் தண்ணிக்குள்ள தீத்தாங்கொட்டை ஊறிக்கிட்டு இருக்கும். அப்பறமா திறந்து பார்த்தா, தண்ணியில இருந்த கசடுகளும், மாசுகளும் பானையின் அடிப்பகுதியில் படிவாக தங்கிவிடும். பிறகு அந்த தண்ணியை ஒரு வெள்ளை துணியில வடிகட்டி பானையிலேயே வச்சுடுவாங்க. இந்த வெயில் காலத்துல மண்பானையில இருக்குற தண்ணி குளிர்ச்சியா இருக்கும். சமயத்துல அந்த தண்ணியில கொஞ்சம் சீரகத்த போட்டும் வைப்பாங்க. அதுக்கு எங்க ஊருல சீரகத்தண்ணின்னு பேரு" என்றார் மாயா டீச்சர்.

"டேய், ரொம்பநேரம் தண்ணிக்குள்ள இருந்தா உடம்புக்கு எதாவது ஆகிடப்போகுது" என்று சொல்லிக் கொண்டே கரையேறிய சிந்துஜாவோடு மற்ற இருவரும் கரைக்கு வந்து தலை துவட்டிக்கொண்டு இருந்தனர். அரவிந்த் மட்டும் தண்ணிக்குள் மூழ்கி, மூழ்கி ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தான். திடீரென அலறி அடித்துக்கொண்டு அவர்களை நோக்கி ஓடிவந்த அரவிந்த்தை பயந்தாங்கொள்ளி பயலன்னு சொல்லி நிவேதிதா கிண்டலடித்தாள்.

மூச்சிரைக்க, "டீச்சர் நான் தண்ணிக்குள்ள மூழ்கி இருந்தேனா... அப்ப ஏதோ பாக்கறதுக்கு பறவை மாதிரி இருந்துச்சு. அப்படியே என்னோட காலை வொரசிக்கிட்டு போச்சு. நான் பயந்து போயி ஓடிவந்துட்டேன்" என்றான் அரவிந்த். "அதை நீர்க்கோழின்னு கிராமங்கள்ல சொல்லு வாங்க. அது சுத்த சைவம். இந்த ஏரிக்குள்ள இருக்குற பாசி, அல்லியோட தண்டு, இதுதான் அதுகளோட ஃபேவரிட் உணவு. அசைவமான உன்னை போயி அது சாப்பிடாது. அதைப்பத்தி இன்னொரு சேதி தெரியுமா..? நீர்க்கோழிங்க இந்தக் கரையில மூழ்கினா, அடுத்த கரையிலதான் போயி எந்திரிக்கும். நாலு மணிநேரம் கூட அது தண்ணிக்குள்ளேயே டிராவல் பண்ணும். ஆனா, குளிச்சுட்டு கரையில ஏறதுக்குள்ள நமக்கு எப்படி மூச்சுவாங்குதுன்னு" பாருங்க என்றார் மாயா டீச்சர்.

"டீச்சர் நாம இப்ப கம்பளத்தில் ஏறி போகவேண்டாம். அப்படியே காலாற அந்த வயல் வரப்புல நடந்தே வீட்டுக்குப் போவோம்" என கெஞ்சினான் ஹரிஹரன்.

உடனே அதற்கு மாயா டீச்சரும் சந்தோஷமாக சம்மதித்தார். எல்லோரும் ஆங்காங்கே திட்டுத்திட்டாக பச்சையா தெரிந்த வயல் வெளிகளை பார்த்துக்கொண்டே நடந்தனர். "டீச்சர் இந்த வயல்ல உள்ள செடியில ஏதோ பூச்சி அரிச்ச மாதிரி இருக்குல்ல?!" என்றாள் சிந்துஜா. "சரிதான்! இலை சுருட்டு புழுங்கற பூச்சினாலதான் அது அப்படி அரிக்கப்பட்டு இருக்கு. அந்த செடியில உள்ள இலையில அப்படியே சுருட்டிக்கிட்டு இருக்குப்பாரு அதான் இலை சுருட்டுப்புழு" என்றர் டீச்சர்.

"ஆனா, நமக்கு நன்மை செய்ற பூச்சியெல்லாம் இருக்காதா டீச்சர்?!" என்று கேட்டான் ஹரிஹரன்.

"ஒருகாலத்துல அதுங்கதான் நிறைய இருந்துச்சு. சிலந்தி, பொறிவண்டு இதெல்லாம் கூட நன்மை செய்ற பூச்சிதான்" என்றார் டீச்சர்.

"இப்ப அதெல்லாம் இல்லையா டீச்சர்" என்றாள் நிவேதிதா.

"நாம தீமை செய்ற பூச்சிய அழிக்க போறதா நினைச்சு, நன்மை செய்ற பூச்சிகளை எல்லாம் அழிச்சதுதான் மிச்சம். இப்ப இந்த கெடுதல் செய்ற பூச்சிங்கதான் பெருத்துப் போச்சு" என கூறினார்.

"இதுக்கு என்னதான் வழி டீச்சர்" என்றான் அரவிந்த்.

"நாம ஒன்னும் செய்ய வேண்டாம். இயற்கையை தொந்தரவு பண்ணாம இருந்தாலே போதும். இயற்கையில ஒவ்வொரு உயிரியும், மற்ற ஒன்றை சார்ந்துதான் வாழ்ந்துக்கிட்டிருக்கு. இதுக்கு பல்லுயிர் பெருக்கம்னு பெயர். இந்த உணவு சங்கிலியில ஏதாச்சும் ஒண்ணு பாதிக்கப் பட்டாலும், மற்றவற்றின் கதியும் அதோகதிதான்!" என்றார் மாயா டீச்சர்.

"அங்க பாருங்க... ஒரு புழுவ அழகா கொத்தி தூக்கிட்டு போகுதே, அது ஒரு சிட்டுக்குருவி. அதுக்குப் பேரு பன்னீர் சிட்டு. இப்ப இந்த இனமே ரொம்ப கொறைஞ்சு போச்சு" என்றார் டீச்சர்.

"ஏன் டீச்சர்?!" என்றாள் சிந்துஜா.

"நாம வயல்ல, பூச்சிக்கொல்லி மருந்தை அடிக்கிறதுனால மருந்து அப்படியே தானியங்கள்ல ஒட்டிக்குது. அப்போ அந்த சிட்டுக்குருவி, விஷமா மாறின தானியங்களை சாப்பிட்டு இறந்துபோயிடுது. நாமும் கூட இந்த தானியங்கள சாப்புடுறதால புதுப்புது வியாதியில மாட்டிக்கிறோம்னு நம்ம விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சுருக்காங்க" என்று சொல்லிக்கொண்டிருந்த மாயா டீச்சரை பார்த்த அரவிந்த், "பசிக்குது டீச்சர்" என்றான்.

"நீ சரியான சாப்பாட்டு ராமன்டா" என்ற நிவேதிதாவின் கிண்டல் கூட அவன் காதில் விழவில்லை. நடந்து போவதற்குள் அவன் பசியால் சுருண்டு விழுவான் என நினைத்த மாயா டீச்சர் கம்பளத்தில் அவர்களை ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கி பறந்தார்.