ஜியோமெட்ரி பாக்ஸ்!

தாரிக்

எக்கச்சக்க சந்தோஷத்தில் இருந்தான் விக்கி. "சைலாக்கா, இவ்வளவு லெவல்ஸை கடந்து இவ்வளவு தூரம் வந்தது வீணாகலை இல்லே?" என்றான். "ஆமா விக்கி, இப்படி ஒரு பவர்ஃபுல் கேரக்டர் நமக்கெல்லாம் ஃபிரண்டா இருக்கப் போறதை நினைச்சா நாம மட்டுமில்லே சுட்டிகள் அத்தனை பேரும் சந்தோஷப் படுவாங்க..!" என்றாள்.

அவர்கள் முன்னால் அந்தரத்தில் தயாராக நின்றிருந்த மேஜிக் சிலேட்டில், சைலாவின் செல்போனுக்கு சுட்டிகள் அனுப்பும் SMS அனைத்தும் பதிவாகிக்கொண்டிருந்தது. செல்போன் எண், சுட்டியின் பெயர், அவர்களது ஊர், SMS அனுப்பிய நேரம்-தேதி, அவர்கள் விரும்பும் உருவம்... என அனைத்தும் தனித்தனியாக பிரித்து காட்டியது அந்த மேஜிக் சிலேட். எப்போதும் போல இந்த முறையும் சுட்டிகள் SMS-ஐ குவித்திருந்தார்கள்.

"முயல், பூனைக் குட்டி, டெடிபேர், நாய்க் குட்டி, ஒட்டகம், புலி, மான், மிக்கி மவுஸ், ரோபாட், கொக்கு, சிங்கம், குதிரை, பீனிக்ஸ், கிளி, எலி, ஒட்டைச்சிவிங்கி, கொசு, மயில்..." என்று விதவிதமான சுட்டிகள் அனுப்பியிருந்த ஆசைகளின் பட்டியலை படித்தாள் சைலா. "என்ன சைலாக்கா... என்னோட சாய்ஸை சொல்லவே இல்லை?" என்று மேஜிக் சிலேட்டை எட்டிப் பார்த்தான் விக்கி. பார்த்த அடுத்த நிமிஷம் அவன் கண்கள் விரிந்தன. வாய் பிளந்தபடி 'ஆஹ்!' என ஒரு ஆச்சரியக் குரல் எழுப்பி ஸ்தம்பித்து நின்றான். சைலா அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே மேற்கொண்டு படித்தாள்... "மொத்தம் வந்த SMS-களையும் பார்த்ததில், 68.8 சதவிகிதம் பேர் 'யானைக்குட்டி' என்று சொல்லி இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் இருப்பது பூனைக்குட்டி, மற்றும் பாக்கி ஆசைகள் அனைத்தும் சேர்த்து 31.2 சதவிகிதம்" என்று படித்து முடித்தாள் சைலா. விக்கி அந்த இடத்திலேயே இல்லை... அவனுக்குள்ளாகவே ஏதோ பாடியபடி, உற்சாக குதி குதித்து, கைகளை உயர்த்தி கத்தி என ஏதேதோ செய்துகொண்டிருந்தான். "டேய்... விக்கி... டேய்..." என்று அவனை உலுக்கி எடுத்த சைலா "உலகத்துக்கு வாடா... பறந்தது போதும்!" என்றாள்.

"ஆமாம்! உலகத்துக்குதான் போகப் போறோம்... நம்ம உலகத்துக்கு! வெற்றி வீரர்களா... யானைக் குட்டியோடு! ஹையோ! லேட் பண்ணாதே சைலாக்கா, சீக்கிரம் வா, நாம போய் ம்ரீஷிபா கிட்டே யானைக் குட்டின்னு சொல்வோம். சீக்கிரம்.... வா" என்றான் விக்கி. அவன் பொறுமை முற்றிலுமாக கரைந்திருந்தது. ரெஸ்ட்லெஸ்ஸாக இருந்தான். உடனே அந்த யானைக் குட்டி ஆன்மாவைப் பார்க்க வேண்டும் என்ற வெறி மட்டுமே நூறு சதவிகிதம் இருந்தது அவனிடத்தில். "ஒரு நிமிஷம் விக்கி, நான் சொல்றதைக் கேளு..." என்று பேச்சை நிறுத்தினாள் சைலா. விக்கி கொஞ்சம் சாந்தமாகி சைலாவைப் பார்த்தான். "இவ்வளவு தூரம் நாம எவ்வளவு அமைதியா நிதானமா யோசிச்சு யோசிச்சு ஒவ்வொரு அடியையும் எடுத்து வெச்சு வந்திருக்கோம். நாம பொறுமையா இருந்ததால்தானே இதை சாதிக்க முடிஞ்சது? இப்பவும் அதே பொறுமையைக் கடைப்பிடிக்கறது நமக்கு ஈஸிதானே?வெற்றி வரும்போதுதான் பொறுமையும் பண்பும் இன்னும் இன்னும் கூடுதலா இருக்கணும். புரிஞ்சுதா? நான் சொல்றது சரிதானே விக்கி?" என்று சைலா கேட்க, விக்கி அமைதியானான். "ஸாரி சைலாக்கா... ஓவர் எக்ஸைட்மென்ட்லே இப்படி பண்ணிட்டேன். நீ சொன்னது ரொம்ப கரெக்ட்தான். இப்பதான் நாம பொறுமையா இருக்கணும்" என்றான்.

"ஃப்லோஷி, நாங்க பேசறதை கேட்டுட்டு இருக்கியா?" என்று கேட்டாள் சைலா. "ம்ம்... மிக அழகாக தெளிவாக அறிவுரை சொன்ன அக்காவுக்கும், அதை பளிச்சென்று கேட்டுத்திருத்திக்கொண்ட தம்பிக்கும் என் பாராட்டுக்கள்" என்ற ஃப்லோஷி நத்தை, "சற்று காத்திருங்கள், நம் தலைவர் ம்ரீஷிபா விரைவில் உங்களோடு பேசுவார்" என்றது.

இருவரும் அந்த கணீர் குரலை எதிர்பார்த்து காத்திருந்தனர். இவர்களுக்கு மரம், செடி, கொடிகள் அசைகிற ஓசையும் பறவைகளின் ஓசையும் கேட்க ஆரம்பித்தது. ஏதோ கண்ணாடி அறையைத் திறந்ததும் திடீரென்று கேட்கிற சத்தத்தைப் போல இந்த ஓசை வந்ததும் விக்கியும் சைலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். "உங்கள் ஒலி வளையத்துக்குள் இந்த ஓசையை அனுமதித்திருக் கிறார்கள்... ம்ரீஷிபா வரும் வரை!" என்றது ஃப்லோஷி நத்தை.

சில நிமிடங்கள் கடந்தன. கண்ணாடி அறை திரும்ப மூடப்பட்டது போல சத்தமெல்லாம் நின்று சூழ்நிலை அமைதியானது. "வாருங்கள் விக்கி, சைலா..." என்ற கணீர் குரல் இருவரையும் நிமிரச் செய்தது. "வணக்கம் ம்ரீஷிபா அவர்களே!" என்றான் விக்கி படு உற்சாகமாக. ஒரு சின்ன சிரிப்பொலிக்குப் பிறகு ம்ரீஷிபா பேசியது, "என்ன, உங்கள் சுட்டி நண்பர்களில் பெருவாரியானவர்கள் யானைக் குட்டியை விருப்பமாகச் சொல்லி விக்கியோடு சேர்ந்து கொண்டார்களா! மிக்க மகிழ்ச்சி" என்றது. "ஆமாம். ம்ரீஷிபா அவர்களே. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது" என்றான் விக்கி.

"சைலா! உங்களுக்கும் யானைக் குட்டி என்பதில் விருப்பம்தானே?" என்றது ம்ரீஷிபா.

"நிச்சயமாக! ஜியோமெட்ரி பாக்ஸ் உலகத்திலேயே மிகவும் சிறந்த ஒரு ஆன்மா எங்களுக்கு நண்பனாக கிடைப்பதே பெரிய சந்தோஷம். அதிலும், பெருவாரியான சுட்டிகளின் விருப்பத்தை இங்கே நாங்கள் நிறைவேற்ற இருக்கிறோம் என்பது அந்த சந்தோஷத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது" என்றாள் சைலா உற்சாகமாக.

என்ன சுட்டீஸ்! உங்களுக்கும் யானைக் குட்டி என்பது சந்தோஷம்தானே? அப்படியென்றால் உற்சாகமாக ஒரு 'ஓ.கே.' சொல்லிவிட்டு கீழுள்ள பக்கத்துக்கு வாருங்கள்!

விறுவிறு விளையாட்டில் விக்கி, சைலா!

"மிக்க மகிழ்ச்சி விக்கி, சைலா. உங்கள் நண்பர் தயாராகிவிட்டார். உங்கள் உலகத்தில் இருக்கிற யானைக் குட்டிகள் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. உங்களுக்கும் சுட்டிகளுக்கும் பார்த்ததும் பிடித்துவிடுகிறபடி மிகக் கச்சிதமாக உருவத்தை உங்கள் நண்பருக்கு கொடுத்திருக்கிறோம். இந்த மகத்தான காரியத்தைச் செய்வதற்கு எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது 'ய்மாஸியஜா' என்ற ஆன்மா. கிட்டத்தட்ட உங்கள் உலகத்தில் இருக்கும் அத்தனை யானைக் குட்டிகளையும் பார்த்துவிட்டு வந்த பெருமை இதற்கு உண்டு" என்றது ம்ரீஷிபா.

"நாங்கள் எப்போது எங்கள் நண்பரை பார்க்க முடியும்?" என்று கேட்டான் விக்கி. "தெரியும் விக்கி. யானைக் குட்டி என்று முடிவானதுமே உனக்கான இந்த ஆர்வம் எந்த அளவுக்கு அதிகமானது என்பதை கவனித்தோம். இருந்தாலும் நிறையவே பொறுமை வேண்டும். ஏனென்றால், உங்களுக்கு பரிசாக தரப்படும் இந்த ஆன்மா உங்கள் முன் எப்போது தோன்ற வேண்டும் என தீர்மானிக்கும் பணியை அதனிடமே விட்டிருக்கிறோம்" என்றது ம்ரீஷிபா.

"அப்படியென்றால், இப்போது எங்களால் பார்க்க முடியாதா? என்று கேட்டாள் சைலா. "ஆமாம். உங்களோடு முதலில் பேச இருக்கிறது. அதன் கேள்விகள் சந்தேகங்கள், உங்கள் கேள்விகள் சந்தேகங்கள் என பரஸ்பரம் பேசிக் கொள்ளப்போகிறீர்கள். நீங்கள் திரும்ப உங்கள் உலகத்துக்கு போன பிறகோ, உங்கள் வீட்டை அடைந்த பிறகோ அல்லது இப்பொதே கூட அது உங்கள் முன் தோன்றலாம். ஆனால் எப்போது வரவேண்டும்... உங்கள் முன் தோன்ற வேண்டும் என்பதை அதுதான் தீர்மானிக்க உள்ளது" என்றது ம்ரீஷிபா.

அங்கே சற்று அமைதி நிலவியது. "என்ன யோசிக்கிறீர்கள் இருவரும்? பார்க்க முடியவில்லையே என்றா? நிச்சயம் இது ஒரு ஆரோக்கியமான உறவாக இருக்கப் போகிறது. இப்படி ஒரு யோசனையையே உங்கள் நண்பர்தான் சொன்னார். நிச்சயம் இது பலனளிக்கும்... நீங்கள் சரியான ஒத்துழைப்பு கொடுத்தால்!" என்றது ம்ரீஷிபா.

இதில் நிச்சயம் ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை விக்கி, சைலா இருவருமே உணர்ந்தார்கள். நமக்கு நண்பராகப் போகும் இந்த ஜியோமெட்ரி பாக்ஸ் உலகத்தின் அதி அற்புத ஆன்மாவின் யோசனை இது எனும்போது நிச்சயம் அதற்கு நாம் ஒத்துழைப்பு கொடுத்தே ஆகவேண்டும் என்று தீர்மானித்தார்கள் இருவரும்.

சைலா பேசினாள், "ம்ரீஷிபா அவர்களே! எங்கள் அனைவரது ஒத்துழைப்பும் நிச்சயம் எங்கள் நண்பருக்கு..." என்றவளுக்கு திடீரென்று ஏதோ நினைவுக்கு வர... "ஒரு நிமிஷம் ம்ரீஷிபா அவர்களே... எங்கள் நண்பருக்கு என்ன பெயர் என்று நீங்கள் சொல்லவே இல்லையே?" என்று கேட்டாள். "அட, ஆமாம்... என்ன பேருன்னு கேட்கவே மறந்துட்டோமே சைலாக்கா!" என்று உச்சந்தலையில் கையை வைத்துக் கொண்டான் விக்கி.

"ம்ம்! நீங்களே கேட்கிறீர்களா என்று பார்க்கத்தான் நான் அதுபற்றிய பேச்சையே எடுக்கவில்லை. உங்களுடைய முதல் சவாலே அதுதான். உங்கள் யானைக் குட்டி நண்பருக்கு நாங்கள் சூட்டியிருக்கும் பெயர் என்னவாக இருக்கும் என்பதை கண்டுபிடிப்பதுதான்!" என்றது ம்ரீஷிபா.

"ஐயோ! அதெப்படி முடியும்? உங்கள் ஜியோமெட்ரி பாக்ஸ் உலகத்தில் இருக்கும் எல்லா ஆன்மாவுக்கும் 'புள்ளி வெச்ச' எழுத்தில் தான் பெயரே ஸ்டார்ட் ஆகுது..." என்றான் விக்கி.

ம்ரீஷிபாவுக்கு புரியாமல், "என்னது 'புள்ளி வெச்ச' எழுத்தா? அப்படியென்றால்?" என்று கேட்டது.

"தமிழில் மெய் எழுத்து என்று சொல்வோம். அந்த எழுத்துகளில்தான் இதுவரை நாங்கள் சந்தித்த அனைத்து ஆன்மாக்களின் பெயரும் ஆரம்பிக்கிறது... உங்கள் பெயர் உள்பட! அதைத்தான் சொல்கிறான் விக்கி" என்ற சைலா, "ம்ரீஷிபா அவர்களே, வெறுமனே இந்த பெயரைக் கண்டுபிடிப்பது எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் சுட்டிகளுக்கும் சிரமம்தான்" என்றாள்.

"'க்ளூ ஏதாச்சும் கொடுங்கள் வெளுத்து வாங்கிடறோம்!" என்று முந்திக்கொண்டு வந்து சவாலாக பேசினான் விக்கி.

அந்த அறையே அமைதியாக இருந்தது. தூரத்தில் இருந்த இருட்டான பகுதிகளில் எல்லாம் யார் யாரோ இருப்பது போல தெரிந்தது விக்கி, சைலா இருவருக்கும்.

"ஃப்லோஷி..." என்று ரகசிய குரலில் கம்மினாள் சைலா. "இருக்கிறேன்..!" என்று அதே ஸ்டைலில் பதில் வந்தது ஃப்லோஷி நத்தையிடமிருந்து.

ம்ரீஷிபா பேசியது... "சரி, உங்களுக்கு ஒன்றல்ல, மொத்தம் மூன்று 'க்ளூஸ்'-ஐ கொடுக்கிறோம். அதை வைத்து உங்கள் நண்பரின் பெயரைக் கண்டுபிடியுங்கள். சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அந்த பெயரைச் சொல்லி அழையுங்கள். உங்கள் நண்பர் உங்களுடன் பேசுவார்" என்றது ம்ரீஷிபா.

"சரி. மிக்க நன்றி!" என்றாள் சைலா.

"முதல் க்ளூ... இது 'புள்ளி வெச்ச' எழுத்தில் தொடங்கவில்லை. இரண்டாவது க்ளூ... இந்த ஜியோமெட்ரி பாக்ஸ் போட்டியோடு தொடர்புடையது. மூன்றாவது க்ளூ... அது இரண்டு வார்த்தைகளின் சுருக்கம்" என்று சொன்ன ம்ரீஷிபா, வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றது.

"என்னன்னு சீக்கிரம் யோசிங்க சுட்டீஸ்! நாங்களும் யோசிக்கறோம். சரியாக கண்டுபிடிச்சு யானைக் குட்டி ஃப்ரெண்டோட பேசணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. உங்களுக்கும்தானே. சீக்கிரம் யோசிங்க. எங்களுக்கு ஷிவிஷி அனுப்புங்க!" என்றான் விக்கி.

சைலா அவனைப் பார்த்து சிரித்தாள். "நீ இவ்வளவு சொல்லவே தேவையில்லைடா. இந்நேரம் அவர்கள் யோசிக்க ஆரம்பிச்சுட்டு இருப்பாங்க!" என்றாள்.

இருவரும் அந்த பெயரை யோசிப்பதில் மூழ்கினார்கள்.