16-05-09

மாயா டீச்சரின் மந்திர கம்பளம்

'அப்போகலிப்டோ' படத்தின் DVD--யை மாயா டீச்சர் வீட்டு கணிப்பொறியில் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள். கொலம்பஸ் தலைமையில் ஸ்பெயின் நாட்டினர் கடற்கரையோரம் வந்து இறங்குவதோடு படம் முடிந்ததும் படத்தைப் பற்றிய விவாதத்தை ஆரம்பித்தனர்.

''என் ஃபிரெண்டு இது மாயா நாகரிகத்தைப் பற்றிய படம்னு சொல்லிக் கொடுத்தா. ஒரு நாகரிகத்தைப் பத்தித் தெரிஞ்சிக்கலாமேன்னு நெனச்சுதான் எடுத்திட்டு வந்தேன். ஆனா அவங்க எவ்வளவு கொடூரமா, காட்டுமிராண்டித்தனமா இருந்திருக்காங்க'' என்றாள் ரோஸி.

''இல்லை ரோஸி! இது ஒரு கற்பனைக் கதைதானே தவிர மத்தபடிக்கு அந்த மக்கள் யாரும் அப்படிப்பட்டவங்க கிடையாது. கலைகள், வானியல், கணித அறிவு, கட்டடக் கலை போன்ற பல விஷயங்களில் மாயா இன மக்கள் மேதாவிகள். கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு செழித்து வளர்ந்த நாகரிகம் மாயா மக்களுடையது. கி.பி 300-900-க்கு இடைப்பட்ட காலத்தில்தான் மாயா நாகரிகம் உச்சகட்டத்தில் இருந்தது.

அவர்கள் கலைகளில் சிறந்தவர்கள்தான். ஆனால் மனிதர்களை உயிரோடு பலி கொடுக்கும் மத நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். அதோடு அடிமைகள் வியாபாரமும் செம சூடாக நடந்து கொண்டிருந்தது. இதெல்லாம்தான் அவர்களை காட்டுமிராண்டிகளாக ஐரோப்பியர்கள் சித்தரித்ததற்கு முக்கிய காரணம்.'' என்றார் மாயா டீச்சர்.

''மாயான்னு உங்க பேரையே இதுக்கு ஏன் வச்சாங்க டீச்சர்?'' என்றான் ஆஷ்லே.

''கிண்டலைப் பாரு... மாயா அந்த இனத்தோட பேர். எனக்கு வெச்சிருக்கற பேர் சமஸ்கிருதத்தில் வர்ற மாயா. அதுக்கு 'மேஜிக்'னு அர்த்தம். ஆனா அந்த மாயா மொழியில் இட்ச் அப்படின்னாதான் மேஜிக்னு அர்த்தம். சரி, சரி நாம அந்த இடங்களுக்கு போக வேண்டாமா... சீக்கிரம் கிளம்புங்க'' என்றார் மாயா டீச்சர்.

சுட்டிகள் எல்லோரும் ஏறிக்கொள்ள கம்பளம் பறந்து மெக்ஸிகோவில் உள்ள சிக்கென் இட்ஸா பிரமிடு படிக்கட்டுகளில் தரையிறங்கியது. அந்த பிரமிடின் நான்கு பக்கப் படிக்கட்டுகள் வழியாகவும் உச்சிக்கு ஏறி, இறங்கிப் பார்த்தனர் சுட்டிகள். சிறிது நேரத்தில் களைப்படைந்ததும் ஓய்வாக அதன் படிக்கட்டுகளில் அமர்ந்தனர்.

''இந்த கட்டடத்துக்கு என்ன வயசு?'' என்றாள் டிவிங்கிள்.

''இதை நம்ம வசதிக்காக வேணும்னா கட்டடம்னு சொல்லலாம். ஆனா மாயாக்களைப் பொறுத்த வரை இது கோயில். சுமார் கிபி 600-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடம் இது.

செனோட் எனப்படும் இரண்டு நீர்நிலைகளை புனித நீராக பாவித்து வந்தார்கள் மாயாக்கள். மழைக்கடவுள் 'சாக்' என்பவருக்கான பலிபீடமாக இவை இருந்தன. தங்கம், வாசனைத் திரவியங்கள், மண்பாண்டங்கள் ஆகியவற்றை காணிக்கையாக இவற்றில் போட்டனர். பல சமயம் மனிதர்களைக்கூட கொன்று கணிக்கையாக்கினர். இந்த நீர்நிலைக்கு அருகிலேயே அவர்கள் உருவாக்கிய நகரம்தான் சிக்கென் இட்ஸா. நான் முன்னாடியே சொன்ன மாதிரி 'இட்ஸ்'-னா மேஜிக். 'மந்திர நீர்க் கிணற்றின் வாய்'னு அர்த்தம். மந்திர நீர்நிலைகளால் அந்தப் பெயர். நீர்கட்டடக்கலையில் தேர்ந்த பல கட்டடங்கள் இந்த இடத்தில் உள்ளன. அதன் முக்கியமான கோயில்தான் இந்த பிரமிடு. இதன் பேர் 'எல் கேஸில்லோ'. ஸ்பானிய மொழியில் அரண்மனை-ன்னு அர்த்தம். மாயாக்கள் வச்ச ஒரிஜினல் பேர் தெரியல. குகுல்கான் என்ற இறக்கையுள்ள பாம்புக் கடவுளுக்காக கட்டப்பட்டது இந்தக் கோயில். மழைக்கடவுள் சாக்கின் முன்னால் அவருக்கு வசதியாக நிலத்தை தன் வாலால் சுத்தப்படுத்திக் கொண்டும், மேகங்களை விரட்டி விட்டுக் கொண்டும் செல்வாராம் குகுல்கான்.

மொத்தம் 30 மீட்டர் உயரம் இருக்கும் இந்த பிரமிடின் மேலே இருக்கும் கோயில் பகுதி மட்டும் 6 மீட்டர் உயரம். கீழ்ப்பகுதியின் அகலம் 55.3 மீட்டர். இந்த பிரமிடில் ஒவ்வொரு பக்கமும் 91 படிகள் உள்ளன. மேலே இருக்கும் ஒரு படியைச் சேர்த்தால் இங்கிருக்கும் மொத்த படிகளின் எண்ணிக்கை 365. அதாவது வருடத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு படி.

படிகள் முடியும் இடத்தில் உள்ள கைப்பிடியை குகுல்கான் வாயைத் திறந்து படுத்திருப்பது போல அமைத்துள்ளனர்.

சமநாட்களின்போது (பகலும், இரவும் சம அளவிலான நேரத்தைப் பெற்ற நாட்கள். வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இந்தப் பெருமையைப் பெறுபவை) உருவாகும் நிழல் இந்த பாம்பு சிலை வளைந்து நெளிந்து செல்வது போன்ற தோற்றத்தை உருவாக்கும். மாயாக்கள் எவ்வளவு சிறந்த கட்டடக் கலை வல்லுனர்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி.

இன்னொரு விஷயம்... ஏற்கெனவே கோயில் இருந்த இடத்தில் வேறொரு கோயிலைக் கட்ட வேண்டுமென்றால் மாயாக்கள் அந்தப் பழைய கோயிலுக்கு மேலேயே, அதாவது பழைய கோயிலைச் சுற்றி புதுக் கோயில் எழுப்பி விடுவார்கள். இந்த அரண்மனைக் கோயிலின் உள்ளே கூட இப்படி ஒரு பழைய கோயிலைக் கண்டுபிடித்துள்ளனர் அகழ்வாராய்ச்சியாளர்கள்'' என்றார் மாயா டீச்சர்.

அடுத்து அங்கிருந்து கிளம்பி அடுத்த இடத்தைப் பார்வையிட நகர்ந்தனர். இயற்கையின் வளம் குறையாமல், மரங்கள் அடர்ந்திருந்த காட்டுப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர்.

''சிக்கென் இட்ஸாவில் வேற என்னென்ன முக்கியமான கட்டடங்கள் உள்ளன?'' என்றான் கிங் சிவபாலன்.

''இங்கே ஏகப்பட்ட கல் கட்டடங்கள் மிகச் சிறந்த நிலையில் உள்ளன. அவற்றில் முக்கியமானவை கிரேட் பால் கோர்ட், ஸாம்பன்ட்லி, போர்வீரர்களின் கோயில், ஆயிரம் தூண்களின் கோயில்னு நிறைய இருக்கு. மாயாக்கள் நிறைய விளையாட்டு மைதானங்கள் வைத்திருந்தர்கள் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். அதில் 'கிரேட் பால் கோர்ட்' மிகவும் முக்கியமானது. சுமார் 166 மீட்டர் நீளமும், 68 மீட்டர் அகலமும் கொண்ட இந்த மைதானத்தின் சுற்றுப்புறச் சுவர்களில் பந்து விளையாடு பவர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பமாக உருவாக்கப் பட்டுள்ளன.

இந்த மைதானத் துக்கு அருகே நிறைய குட்டிக் குட்டி கோயில்கள் உள்ளன. 'தாடி வைத்த மனிதர்களின்' கோயில் சுவர்களில் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. 'கருஞ்சிறுத்தை'யின் கோயிலில் சிறுத்தை வடிவ அரியாசனம் ஒன்று உள்ளது. அதன் சுற்றுச் சுவர்களில் ஒரு போர்க் காட்சி அழகான புடைப்புச் சிற்பமாக உள்ளது. மாயாக்களின் முக்கியமான கடவுளர்களில் கருஞ்சிறுத்தையும் ஒன்று. வேகத்துக்கும், மறைந்து இருந்து சரியாக குறி பார்த்து தாக்கும் திறனையும் இதனிடமிருந்துதான் மாயாக்கள் கற்றுக் கொண்டார்களாம். அதனால் இவர்கள் இனத்தில் பிறக்கும் குழந்தைகளில் பலவற்றுக்கு 'சிறுத்தை' என்று வரும்படி பெயர் வைப்பார்களாம்.'' என்று மாயா டீச்சர் சொல்லிக் கொண்டிருந்தார். சுட்டிகள் கவனித்துக் கொண்டே அவருடன் நடந்தனர். பேச்சு சுவாரஸ்யத்தில் பின்னால் ஏற்பட்ட சலசலப்பை யாருமே கவனிக்கவில்லை. நான்கு மாயாக்கள் அவர்களைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

இது தெரியாமல் அருகே தென்பட்ட ஒரு குகைக்குள் நுழைந்தார்கள் மாயா டீச்சரும், சுட்டிகளும்.

(தொடரும்...) படம் ரா.ராம்குமார்