16-11-2009

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

கார்த்திகாகுமாரி

உடல்நிலை சரியில்லாத வினோத்தின் உடலில் மாயா டீச்சரும், சுட்டிகளும் நுழைந்திருந்தார்கள். ரத்தத்தின் உள்ளே இருக்கும் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகியவற்றின் மேல் போய் இறங்கியிருந்தார்கள் சுட்டிகள். ஓடும் ரத்தத்தில் நுழைந்த அனைவரும் அதன் ஒரு துளிக்குள் நுழைந்-தனர். அதில் சிவப்பு அணுக்கள் எக்கச்சக்கமாகவும் வெள்ளை அணுக்கள் குறைவாகவும் இருந்தன. சிவப்பு அணுக்கள் ஓட்டையில்லாத குட்டிக் குட்டி 'போலோ' மிட்டாய் போல இருந்தன. வெள்ளை அணுக்கள் தங்களுக்கென்று எந்த குறிப்பிட்ட வடிவமும் இல்-லாமல் வெவ்வேறு வடிவங்களில் இருந்தன.

"இந்த அணுக்களில் வெள்ளை நிறத்தில் குறிப்பிட்ட வடிவம் எதுவும் இல்லாமல் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறதே இவைதான் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி படைவீரர்கள். இவற்றை லீக்கோசைட்ஸ் என்றும் சொல்வோம். இவைதான் நோய்த் தொற்றில் இருந்தும், அயல் பொருட்கள் உடலுக்குள் நுழையாமலும் தடுக்கும்" என்றார் மாயா டீச்சர்.

"இதில் எத்தனை வகை இருக்கு?" என்று கேட்டான் சுரேஷ்.

"இந்த வெள்ளை அணுக்களில் பல வகை இருக்கு. அவற்றை க்ரானுலோசைட்ஸ், அக்ரானுலோசைட்ஸ் என்று இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். க்ரான்யூல்ஸ் என்றால் சின்னச் சின்ன ரவை, மணல் மாதிரியான துகள்கள் என்று அர்த்தம். மைக்ரோஸ்கோப்புக்கு அடியில் வைத்துப் பார்த்தால் செல்களின் மையப்பகுதியான சைட்டோப்ளாசம் பகுதியில் சின்னச் சின்ன துகள்கள் போல் தெரிந்தால் அவை க்ரானுலோசைட்ஸ். நியூட்ரோஃபில்ஸ், பேஸோஃபில்ஸ், ஈஸ்னோஃபில்ஸ் போன்றவை க்ரானுலோசைட்ஸ் வகையைச் சேர்ந்தவை. சைட்டோபிளாசமின் உள்ளே எந்தத் துகள்களும் இல்லாமல் இருந்தால் அவை அக்ரானுலோசைட்ஸ் என்று அழைக்கப்படும். லிம்ஃபோசைட்ஸ், மோனோசைட்ஸ், மேக்ரோஃபேஜஸ் போன்றவை அக்ரானுலோசைட்ஸ் வகையைச் சேர்ந்தவை" என்றார் மாயா டீச்சர்.

"நீங்க சொல்றது வடிவத்தின்படி பிரிக்கப்பட்ட செல்கள். அவை செய்யற வேலைகளின் அடிப்படையில் இந்த செல்களில் என்னென்ன வகை இருக்கு?" என்றாள் ஷிவானி.

"ம்... நல்ல கேள்விதான். அப்படிப்பட்ட முக்கியமான வெள்ளை அணுக்கள் பற்றிப் பார்ப்போம்.

நியூட்ரோஃபில் வெள்ளை அணுக்கள் ஆறு மணி நேரத்தில் இருந்து சில நாட்கள் வரையிலான ஆயுட்காலம் கொண்டவை. பாக்டீரியா, பூஞ்சை இவற்றை எதிர்த்துப் போரிடும்.

ஈஸ்னோஃபில் வெள்ளை அணுக்கள் பாராசைட்களையும், அலர்ஜியைத் தோற்று விக்கும் விஷயங்களையும் எதிர்த்துப் போரிடும். ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை யெல்லாம் நமக்கு வராமல் இருப்பதற்கு இந்த செல்கள் அவற்றைத் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கின்றன என்று அர்த்தம்.

அடுத்து பேசோஃபில்கள். இவையும் அலர்ஜியைத் தடுப்பதில்தான் அதிக பங்கு வகிக்கின்றன.

மோனோசைட்களை நியூட்ரோஃபில்களின் வேக்குவம் க்ளீனர் என்று சொல்லலாம். அதோடு ஏற்கெனவே வந்த ஒரு கிருமி, மறுபடி வருகிறது என்பதை மற்ற வெள்ளை அணுக்களுக்கு அறிவிக்கும் அலாரம் இவைதான். இந்த வேலையை இவற்றோடு மேக்ரோபேஜ் என்ற வகை வெள்ளை அணுக்களும் செய்கின்றன. இதைப் போலவே டென்ட்ரிக் செல்கள் அயல் பொருள்களை கண்டுபிடிப்பதற்கான ஊக்குவிப்பான்களாக செயல் படுகின்றன.

இவை எல்லாவற்றிலும் ரொம்ப முக்கியமானவை லிம்போசைட் எனப்படும் ஒருவகை அணுக்கள்தான். இவைதான் வெள்ளை அணுக்களில் அதிகம் காணப்படும். ரத்தத்தில் மூன்று வகையான லிம்போசைட்டுகள் உள்ளன.

அவை பி செல்ஸ் - இவை ஆன்டிபாடிஸ் எனப்படு பவற்றைத் தயாரிக்கும். இந்த ஆன்டிபாடிகள் புதிதாக வரும் கிருமிகள் அல்லது அயல் பொருள்களில் போய் ஒட்டிக் கொள்ளும். இதன் மூலம் அயல் பொருள்களை அடையாளம் கண்டு அழிக்க இவை உதவுகின்றன.

இரண்டாவது டி செல்ஸ் - செல்லுக்குள்ளே புகுந்து அழிக்கும் பாக்டீரியாக்களை மட்டும் கண்டுபிடித்து அழிப்பது, வைரஸ் தாக்கிய செல்களை அழிப்பது, போன்ற வேலைகளை இவை செய்யும். நேச்சுரல் கில்லர் செல்கள், வைரஸ் தாக்கி... அதனால் மற்ற செல்களை அழிக்க வரும் செல்களை மட்டும் தேடிப் பிடித்து அழிக்கும்" என்றார்.

"ஹப்பா! எவ்வளவு வேலைகள் பார்க்குது இந்த வெள்ளை அணுக்கள்" என்றான் பிரசன்னா.

அப்போது மாயா டீச்சர் அருகில் இருந்த ரத்த அணுக்களை மட்டும் ஃபோகஸ் செய்து காண்பித்தார். அதில் வெள்ளை அணுக்கள் புதிதாக நுழைந்த கிருமிகளுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. சுட்டிகளின் கண்ணுக்கு அவை பெரிய அரக்கர்களை எதிர்த்துப் போரிடும் சூப்பர்மேன்கள் போலத் தோன்றின.

"சரி, இந்த அணுக்களே இவ்வளவு செய்யும்போது நாம எதுக்காக மருந்து, மாத்திரையை எல்லாம் சாப்பிடறோம். போதாக்குறைக்கு இந்த இன்ஜக்ஷன் வேற... ஒவ்வொரு தடவை போடும்போதும் எவ்வளவு வலிக்குது தெரியுமா?" என்று எப்போதோ ஊசி போட்ட இடத்தை ஞாபகம் வைத்து தடவிக் கொடுத்தாள் நேத்ரா.

"நீ சொல்றது சரிதான் நேத்ரா, கிருமிகள் உள்ளே நுழைந்ததுமே உஷாராகி வெள்ளை அணுக்கள் சண்டை போட ஆரம்பிக்கும். வெள்ளை அணுக்கள் ஜெயித்து விட்டால் கிருமிகள் வந்த சுவடே நமக்குத் தெரியாது. ஒரு வேளை வெள்ளை அணுக்கள் அதிக அளவில் இறந்து கிருமிகள் அதிகரித்தால் நமக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும். எல்லா நேரமும் வெள்ளை அணுக்கள் ஜெயித்துக் கொண்டிருக்காது இல்லையா? அப்படி அவை தோற்றுப் போகும்போதுதான் நாம் இந்த மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்துகிறோம். வெள்ளை அணுக்களுடன் சேர்ந்து இவையும் சண்டை போட்டு நம்மைக் காப்பாற்றும்" என்ற மாயா டீச்சர் தொடர்ந்து, "எல்லோரும் கொஞ்சம் தள்ளிக்கோங்க" என்றார்.

எல்லோரும் சற்று விலகியதும் கூரான ஏதோ ஒரு பொருள் சில நொடிகள் முன்பு அவர்கள் இருந்த இடத்துக்குள் நுழைந்தது. அதில் இருந்து ஒரு திரவம் பீய்ச்சி அடிக்க ஆரம்பித்தது. அது ஒரு ஊசி என்பதையும் அதிலிருந்து வரும் திரவம் மருந்து என்பதையும் புரிந்து கொண்ட சுட்டிகள் அதை ரத்தத்தில் சரியாகக் கலக்கும்படி தெளித்தனர்.

"இனி மத்த வேலைகளை வெள்ளை அணுக்கள் பார்த்துக்கும். நாம கிளம்புவோம். ரொம்ப நேரம் ஆச்சே! தனக்கு ஏதாவது ஆகுமோன்னு வினோத் பயந்திட்டிருப்பான்" என்று மாயா டீச்சர் சொல்ல, எல்லாருமாக வெளியே வந்தார்கள்.

வினோத்திடம், "உன் வெள்ளை அணுக்கள் ரொம்பவே உற்சாகமா உன் காய்ச்சலை எதிர்த்துப் போராடிட்டு இருக்கு கவலைப்படாதே!" என்று ஆறுதலாகச் சொல்லி, ரெக்கார்ட் செய்தவற்றைக் காண்பித்தார்கள் சுட்டிகள்.

"காய்ச்சல் சரி, காயம்பட்டால் வெள்ளை அணுக்கள் என்ன செய்யும்?" என்றான் வினோத்.

"இதே விஷயம்தான். காயம்பட்ட இடத்துக்கு கூட்டம் கூட்டமாக வெள்ளை அணுக்கள் போய்ச் சேரும். அந்த திறந்த பகுதி வழியாக உள்ளே வர நினைக்கும் கிருமிகளை எதிர்த்துப் போரிடும். அதில் செத்துப் போகும் வெள்ளை அணுக்களைத்தான் நாம் 'சலம்' என்று அருவருப்பாகப் பார்க்கிறோம்" என்றார் மாயா டீச்சர்.

"ஓ, இதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இனி நாங்க காயம்பட்டு சலம் வந்தா, அதை இறந்து போன போர் வீரர்களுக்கு ஒப்பான வெள்ளை அணுக்களா மட்டும் பார்க்கிறோம்" என்றார்கள் சுட்டிகள். நீங்களும் தானே!