01-12-2009

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

கார்த்திகாகுமாரி

"இன்னும் கொஞ்ச நாள்ல எங்களுக்கு எக்ஸாம் ஆரம்பிச்சுடும். இப்பவே அப்பா அம்மா எங்கயும் கூட்டிட்டு போக மாட்டேங்கிறாங்க. உங்க வீட்டுக்கு மட்டும்தான் அலோ பண்ணியிருக்காங்க" என்று டெடிபியரைக் கட்டிப் பிடித்தபடியே சொன்னாள் விஜி.

ஒரு பேப்பரில் பென்சில் ஸ்கெட்ச் வரைந்து கொண்டிருந்த திவ்யா, தலையைப் பேப்பரில் இருந்து திருப்பாமலே... "ஆமா டீச்சர்! கொஞ்சம் கூட ரிலாக்ஸ் பண்ணாம வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து படிச்சா எப்படி டீச்சர் தொடர்ந்து படிக்க முடியும்?" என்றாள்.

"ஜாலியா இருந்தாதான் படிச்சதெல்லாம் மண்டைல ஏறும்" என்றான் கதை புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்த கார்த்திக்.

"ரொம்ப போர் அடிக்குது மாயா டீச்சர். பக்கத்து பீச் வரைக்கும் வாக்கிங் மட்டுமாவது போயிட்டு வருவோமே" என்றான் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த தீபக்.

"வரும்போதே முடிவு பண்ணிட்டுதான் வந்தீங்களா? நீங்க கூப்பிட்டு வரமாட்டேன்னு சொல்வேனா சுட்டிப் பசங்களா? பதில் சொல்லக் கூட கேப் கொடுக்காம இப்படி பொளந்து கட்றீங்களே" என்றார் மாயா டீச்சர்.

சில நிமிடங்களில் முகம் கழுவி உற்சாகமாக வெளியே கிளம்பினர் சுட்டிகளும், மாயா டீச்சரும்.

"டீச்சர், மந்திரக் கம்பளம் நம்ம கூட வரலியா?" என்றான் தீபக்.

"நாம வெளியே எந்த அட்வென்ச்சருக்கும் போகப் போறதில்லையே! அப்புறம் ஏன் கம்பளத்தை எடுத்திட்டுப் போகணும்?" என்றார் மாயா டீச்சர்.

"அட்வென்ச்சருக்கு மட்டும்தான் மந்திரக் கம்பளமா? அது எவ்வளவு ஹெல்ப் பண்ணியிருக்கு. நாம இப்போ அதை தனியா விட்டுட்டுப் போறோமே" என்றான் கார்த்திக்.

" ஏதாவது ஆபத்து வந்தா மந்திரக் கம்பளம் இருந்தா நமக்கு வசதிதானே!" என்றாள் திவ்யா.

"மந்திரக் கம்பளத்தையும் நம்மோட கூட்டிட்டுப் போகலாம் டீச்சர்" என்று கெஞ்சலாகச் சொன்னாள் விஜி.

"சரி ஓகே! மந்திரக் கம்பளமும் நம்மோட வரும்" என்ற மாயா டீச்சர், பூட்டிய கதவை மறுபடித் திறந்து, வீட்டுக்குள் இருந்த மந்திரக் கம்பளத்தை எடுத்து வந்தார். வெளியே வந்ததும் கம்பளத்தைச் சின்ன கர்ச்சீஃப் அளவுக்கு உருமாற்றி மடித்துத் தன் கைப்பைக்குள் வைத்தார்.

கடற்கரைக்குச் சென்றதும் முதல் வேலையாக அணிந்திருந்த செருப்பைக் கழற்றிப் போட்டு விட்டு, கடல் அலைகளுடன் விளையாட ஆரம்பித்தனர் அனைவரும். கடலுக்கும் கரைக்கும் ஓடி ஆடிய அலைகளுடன் நெடுநேரம் கண்ணாமூச்சி விளையாடினார்கள் சுட்டிகளும், மாயா டீச்சரும். கடைசியில் அலைகளுக்கு விட்டுக் கொடுத்து கடலில் முழுசாக நனைந்தார்கள். கார்த்திக்கும், தீபக்கும் ஒருவர் கையை மற்றவர் இறுக்கமாகப் பற்றியபடி கடலின் ஓரத்தில் சிறிது தூரம் ஓடிவிட்டுத் திரும்பினார்கள்.

எல்லோருமே நன்றாக களைத்த பிறகு வீட்டுக்குத் திரும்ப முடிவெடுத்தனர். மாயா டீச்சர் பீச்சில் வாங்கிக் கொடுத்த ஐஸ்க்ரீமைச் சுவைத்தபடி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

ஏதோ நினைவு வந்தவராக தனது செல்ஃபோனில் உள்ள எஃப்எம் ரேடியோவை உயிரூட்டினார் மாயா டீச்சர்.

"...ஆகிய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் இன்னும் இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றது வானொலிக்குள் ஒலித்த குரல்.

அப்போது அருகிலேயே ஒளிந்திருந்தாற்போல சடாரென்று வேகமாக வீசத் தொடங்கியது காற்று. வீசிய பேய்க் காற்றில் எதிர்வரும் எதுவுமே புலப்படவில்லை. மரங்களெல்லாம் வேரோடு விழப்போவது போல வேகமாக அசைந்தன.

"மழை வருதாமே! அதற்குள் வீட்டுக்குப் போயிடுவோமா?" என்று விஜி கேட்டு முடிப்பதற்குள் மழை 'சட சட'வென்று பெருவேகமாக பெய்யத் தொடங்கியது. மழையை எதிர்த்து முன்னேற ஆரம்பித்தனர். மழையோடு காற்றும் சேர்ந்துகொண்டதால் வேகம் தடைபட்டது.

"டீச்சர்! நான் ஒரு யோசனை சொல்றேன். இப்படியே நாம வீட்டுக்குப் போறதால என்ன நடக்கப் போறது? நாம இந்த மழைக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்கிட்டா என்ன?" என்றான் தீபக்.

"ஆமாம். தீபு சொல்றது சரிதான். நிச்சயம் உங்க கூட இருக்கறதால அப்பா அம்மா தேடப் போறதில்ல." என்றான் கார்த்திக்.

"அதோட அவங்களால இந்த மழையில் வெளியே வரவும் முடியாது" என்றாள் திவ்யா.

"சீக்கிரம் மந்திரக் கம்பளத்தை விரிங்க டீச்சர் போகலாம்" என்றாள் விஜி.

'வீட்டுக்குத் திரும்பியதும் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் ஒழுங்காக பாடத்தைப் படிப்போம்' என்று அனைவரும் உறுதிமொழி அளித்த பிறகு, கம்பளத்தை வெளியே எடுத்துப் பெரிதாக்கினார் மாயா டீச்சர்.

"மறுபடியும் கடலுக்குத்தான் போகணுமா? அதை நினைச்சாதான் கொஞ்சம் அலுப்பா இருக்கு" என்றபடி அனைவரையும் கம்பளத்தில் ஏற்றினார் மாயா டீச்சர்.

முதலில் கடற்கரைக்கு வந்து இறங்கினர் அனைவரும். சிறிது நேரம் முன்பு கூட்டமாக இருந்த கடற்கரை இப்போது ஆளரவமே அற்று அமைதியாக இருந்தது. கடலின் மேல்பரப்பில் தூரத்தில் சுழலாக உருவாகி இருந்தது புயல். கம்பளத்தில் ஏறி புயலை நோக்கி பயணிக்கத் தொடங்கினர்.

"புயல் எப்படி உருவாகுது? காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்னு சொன்னாங்களே அப்படின்னா என்ன?" என்றாள் விஜி.

"ஒரு குறிப்பிட்ட இடத்தை மையமாகக் கொண்டு, அந்த சுற்றுப் பகுதியில் இருக்கும் காற்று அனைத்தும் சேர்ந்து மிக வேகமாகச் சுழல ஆரம்பிக்கும். இவற்றின் சுழல் திசை பூமியின் சுழல் திசையை ஒத்து இருக்கும். பூமியின் தென் கோளத்தில் இந்தக் காற்று கடிகாரச் சுற்றிலும், வட கோளத்தில் எதிர் கடிகாரச் சுற்றிலும் சுற்றும்.

பூமியின் ஏதாவது ஒரு பரப்பில் (பெரும்பாலும் கடலில்) வளிமண்டலத்திலிருந்து கீழாக காற்றின் அழுத்தம் அதிகரிக்கும். இதைத்தான் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்கிறோம்" என்ற மாயா டீச்சர் தொடர்ந்து, "நம்முடைய பருவகால புயல்களில் பெரும்பாலானவை இப்படி குறைவான அழுத்தத்தால் உருவாகுபவைதான்" என்றார்.

"சரி, இவை மழையை எப்படி உருவாக்குகின்றன?" என்றான் தீபக்.

"சாதாரண புயல், காற்றை மட்டும்தான் வீசிச் செல்லும். ஆனால் குறைவான காற்றழுத்தத்தால் உருவாகும் வெப்ப மண்டலப் புயல்கள் கடும் மழையையும், பெரும் காற்றையும் ஏற்படுத்தும். குளிர்ந்த காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உணவாகக் கொண்டு இவை மேலெழும்புகின்றன. கடல் போன்ற பெரிய நீர் நிலைகளின் மேலே... கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று உருவெடுக்கும் இவை, நிலத்துக்கு மேலே வரும்போது வலுவிழந்துவிடுகின்றன. இதனால் பெரும் காற்றுடன் மழையாய்ப் பொழிந்துவிட்டு ஒன்றுமில்லாமல் போகின்றன. பெரும்பாலும் கடற்கரையோரப் பகுதிகளில் அதீத மழை பொழிவதற்கு இதுதான் காரணம்" என்றார் மாயா டீச்சர்.

அவர் பேசி முடிக்கும் சமயம் புயலை நெருங்கியிருந்தனர். 'ஹோ'வென்ற பேரிரைச்சலுடன் சுழன்று கொண்டிருந்தது புயல். கம்பளத்தை உயரே உயரே செலுத்திய மாயா டீச்சர், புயலின் நேர் மேலே கம்பளத்தைக் கொண்டுவந்தார். வேகம் குறைந்த கம்பளத்தை புயல் உள்ளிழுக்கத் தொடங்கியது. அதற்குள் சுழன்றபடி புயலின் மையத்தை நோக்கி அவர்கள் பயணித்தனர்..

-(தொடரும்...)