01-12-2009

கணினி கற்கலாம் வா நீ...

இரா.முருகன்

குஷியா கம்ப் யூட்டரை இயக்கி விளையாடுங்க. கணக்குப் போடுங்க. ஆனால் ஸ்க்ரூ ட்ரைவரை எடுத்துக்கிட்டு, கம்ப்யூட்டரைத் திறந்து பார்க் கணும்னு கிளம்பிடாதீங்க!

கம்ப்யூட்டருக்கு உள்ளே என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கா? சரி சொல்றேன்.

கம்ப்யூட்டர்ங்கறது ஒரு கருவி. ஹார்டுவேர். டி.வி, டிஜிட்டல் கேமிரா போல் இதுவும் ஒரு கருவி. இந்த ஹார்ட்வேரை இயக்க சாஃப்ட்வேர் தேவை. கண்ணுக்குத் தெரியாத மின்னணு ஆணைத் தொடர் இந்த சாஃப்ட்வேர். மென்பொருள்னு தமிழ்லே சொல்றாங்க.

கம்ப்யூட்டரின் சுவிட்சைத் தட்டியதும் திரை நடுவிலே பறக்கற ஜன்னல் படம் வருதா? 'விண்டோஸ் இப்போ ஆரம்பம் ஆகுது'ன்னு சுறுசுறுப்பா கம்ப்யூட்டர் திரையிலே எழுத்துகள் நகருதா? விண்டோஸ் என்ற அடிப்படை மென்பொருள் ஓட ஆரம்பிச்சிருக்குன்னு அர்த்தம். இந்த விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் இயங்கிட்டு இருந்தால்தான் கணக்கு போடறதுக்கான எக்ஸல், கடிதம் எழுத எம்எஸ் வேர்ட், வீடியோ கேம் இப்படி மற்ற ப்ரொகிராம் எல்லாம் வேலை செய்ய ஆரம்பிக்கும். ஆமா, இதெல்லாமே மென்பொருள்தான். ஆகவே கம்ப்யூட்டர் இயங்க ஹார்ட் வேர், சாஃப்ட்வேர் ரெண்டும் தேவை.

கம்ப்யூட்டரைப் பிரிச்சாச்சு. இதோ நட்ட நடுவிலே நாட்டாமை மாதிரி உக்கார்ந்திருக்கே இதுதான் மதர் போர்ட். கம்ப்யூட்டரின் எல்லா பாகங்களையும் இணைச்சு செயல்பட வைக்கறதுதான் இதோட வேலை. இதுல இருக்கற பாகங்களை பார்க்கலாமா?

மதர் போர்டோட முதுகிலே குழந்தை மாதிரி ஜோரா உட்கார்ந்திருக்கற இந்த குட்டி சதுரம்தான் சி.பி.யூ. இதுதான் கம்ப்யூட்டரோட மூளை. இதோ இருக்கே சின்னச் சில்லு, இதுதான் ராம் (RAM). ரேண்டம் ஆக்ஸஸ் மெமரி. இதோ இது ஹார்ட் டிஸ்க். மென் பொருளை எல்லாம் இங்கேதான் சேமிக்கும்.

ராம் பக்கத்திலே லட்சுமணன் மாதிரி அதை விட சின்னதா ஒரு சில்லு இருக்கே, அதுதான் ரோம் (ROM). ரீட் ஒன்லி மெமரி. இதுலே அன்று எழுதினதை அழித்து எழுத முடியாது! அப்படீன்னா? கம்ப்யூட்டரை ஆன் செய்ததும் முதல்லே இயங்கற ஆரம்ப ஆணைத் தொடரை இங்கேதான் பதிஞ்சு வச்சிருக்கு. ஹார்ட்வேரையும் சாஃப்ட்வேரையும் ஒண்ணோட ஒண்ணு 'ஹலோ'ன்னு கை குலுக்க வைச்சு, அப்படியே சேர்ந்து வேலை செய்ய வைக்கற ப்ரோகிராம் அது. ஈசியா மாற்ற முடியாத அந்த மென் பொருளுக்கு BIOS(Basic Input Output System)-ன்னு பெயர்.

'ரைட்... போகலாம்!'னு இந்த BIOS சிக்னல் கொடுக்கும். உடனே சி.பி.யூ வேலையை ஆரம்பிக்கும். முதல்லே ஆப்பரேட்டிங் சிஸ்டம். பிறகு உங்களுக்குத் தேவையான மற்ற மென்பொருள் இப்படி ஒவ்வொண்ணா ஹார்ட் டிஸ்க்லே இருந்து எடுத்து ராம்-ல் ஏற்றி உட்கார்த்தும். அந்தந்த மென்பொருள் சமர்த்தா, அடுத்தடுத்து செய்ய வேண்டியது என்னன்னு சி.பி.யூ.க்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்கும். அதை கொஞ்சமும் பிசகாமல் சி.பி.யூ. செய்துட்டே போக ஃபார்முலா ஒன் கார் போல கம்ப்யூட்டர் 'ஸ¨ம்ம்ம்ம்ம்'னு பறக்கும்.

இதோ, மதர் போர்ட் மேலே பொடிசு பொடிசா சில்லுகள் சேர்ந்து இருக்கற பகுதிக்கு சிப்செட்-னு பெயர். சிப்செட்டில் ஒரு பக்கம் வடக்குப் பாலம்(North Bridge). அந்தப் பக்கம் தெற்குப் பாலம் (South Bridge). வடக்குப் பாலம் வேகமான கம்ப்யூட்டர் பாகங்களை இணைக்கற வேலையைச் செய்யும். அதாவது ராம், கம்ப்யூட்டர் திரைக்கு வீடியோ கிராஃபிக்ஸை கொண்டு போய்ச் சேர்க்கிற கிராஃபிக்ஸ் கண்ட்ரோலர். இப்படி படு வேகமாக சி.பி.யூ.வோடு தொடர்பு கொள்ள வேண்டிய பாகங்களை இணைக்கும் ரெண்டு பாலமும் செயல்பட்டால்தான் தகவல் போக்குவரத்து.

'சி.பி.யூ இருக்காஹ. ராம் இருக்காஹ. ரோம் இருக்காஹ. சிப்செட் இருக்காஹ. வாம்மா, மின்னல்.' எந்த மின்னல்? இதோ, கம்ப்யூட்டர் பஸ்! சி.பி.யூ.வுக்கும், நண்டும் சிண்டுமான மற்ற கம்ப்யூட்டர் பகுதிகளுக்கும் இடையே தகவலை மின்னணுவாக ஏற்றிக் கொண்டு போய் பத்திரமாகச் சேர்க்க, இறக்க என்றே ஸ்பெஷலாக ஏற்படுத்தப்பட்ட ப்ரேக் டவுன் ஆகாத பஸ் இது.

இது சிடி ராம் ட்ரைவ். நீங்க சிடியை செருகி பாட்டு கேட்கறது, படம் பார்க்கறது இதை வச்சுத்தான். சரி, கம்ப்யூட்டர் உள்ளே பார்த்தது போதுமா? வெயிட். ஏற்கெனவே கோடு போட்டோமே வீடியோ கிராஃபிக்ஸ் கண்ட்ரோலர், இந்த வீடியோ கார்டையும் சின்னதா ரோடு போட்டு பார்த்துட்டு மூடி வச்சுடலாம்.

இங்கிலீஷ் A,B,C,D-யா... தமிழ் அகர முதல எழுத்தெல்லாமா? கீ போர்டில் தட்டினால் அதெல்லாம் எழுத்தாக கம்ப்யூட்டர் திரையில் தெரிய வைப்பது கிராஃபிக்ஸ் கண்ட்ரோலர்தான். எழுத்து மட்டுமில்லை. புகைப்படம், அனிமேஷன், சினிமா இதெல்லாம் கூட திரையில் ஏழு வண்ணமும் எடுப்பாகத் தெரிய பளிச்சென்று காட்டுவது இது. மதர்போர்டில் இணைத்தே வீடியோ கார்ட் முதலில் வந்தது. அது தனிப்பட இணைத்துக் கொள்ளும் பாகம் இப்போது (expansion card).

1981-க்கு முன்னால் தயாரித்த வீடியோ கார்ட் அந்தக் கால திரைப்படம் போல பிளாக் அண்ட் ஒய்ட் ஆகத்தான் திரையில் காட்டும். இருபது வருடத்தில் படு வேகமான முன்னேற்றம். 3-டி முப்பரிமாண கிராஃபிக்ஸ்ஸை சுளுவாக கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் காட்டி, மின்னல் வேகத்தில் படத்தை நகர்த்தி வீடியோ கேம் விளையாட வைக்க எல்லாம் வழி செய்யும் கிராஃபிக்ஸ் கார்டுகள் இப்போது புழக்கத்துக்கு வந்துவிட்டன. கம்ப்யூட்டரில் டிவி-ட்யூனர் பகுதியை இணைத் துவிட்டால் கேபிள் டி.வி-யில் 20-20 மேட்ச் பார்க்க எழுந்து போகாமல் கம்ப்யூட்டரிலேயே பார்த்து விடலாம். அது சரி, ஹோம் ஒர்க் செய்ய ஒத்தாசை செய்யுமா இவையெல்லாம்? செய்யுமே... எப்படி?

-அடுத்த இதழில் பார்ப்போம்....