மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

சுட்டிகளுக்கு அரையாண்டு விடுமுறை. எல்லோரும் எப்போதும் போல் மாயா டீச்சர் வீட்டில்தான் அட்டன்டென்ஸ் போட்டிருந் தார்கள்.

திடீரென வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம். எழுந்து போய்க் கதவைத் திறந்தான் ஷங்கர்.

வாசலில் யாருமே எதிர்பார்க்காத ஒரு வி.ஐ.பி.

சில வினாடிகள் அதிர்ச்சி கலந்த மௌனத்துடன் நின்றிருந்த ஷங்கர் ''ஜீபா'' என்று எல்லோருக்கும் கேட்கும்படி கத்தினான்.

அவன் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தது ஜீபா.

''ஹாய் உங்க எல்லாருக்கும் ஹாஃப் இயர்லி லீவ் விட்டிருக்கும்னு எனக்குத் தெரியும். அதான் உங்களைப் பார்த்திட்டு ஜாலியா உங்க கூட கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போகலாம்னு வந்தேன்'' என்றது ஜீபா.

''ஹாய் ஜீபா! உன்னைத்தான் ரொம்ப நாளா நாங்க எதிர்பார்த்திட்டு இருக்கோம்'' என்றபடி வரவேற்பறைக்கு வந்தான் கிருஷ்ணா.

''எப்படி இருக்கே ஜீபா?'' என்று கேட்டு அதன் கைகளைப் பிடித்துக் கொண்டார்கள் மாலினியும், அபிநயாவும்.

''ம்... நல்லாருக்கேன்''என்ற ஜீபாவுக்கு மாயா டீச்சர் வீட்டில் இருந்த சாக்லேட், ஐஸ்க்ரீமையெல்லாம் எடுத்துக் கொடுத்தார்கள் சுட்டிகள். ஜீபா இரண்டையும் ஒரு வெட்டு வெட்டிவிட்டு 'அப்புறம்' என்பது போல சுட்டிகளைப் பார்த்தது.

''உன்னைப் பார்க்கணும்னுதானே இவ்வளவு நாளா வெயிட் பண்றோம். சரி, வா உனக்கு நாங்க மாயா டீச்சர் வீட்டைச் சுத்திக் காண்பிக்கறோம்'' என்றான் ஷங்கர்.

சுட்டிகளுடன் மாயா டீச்சர் வீட்டைச் சுற்றிப் பார்த்த ஜீபா, ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட அவரது நூலகத்தையும், நிறைய அறிவியல் சாதனங்கள் இருந்த அவரது பரிசோதனைக்கூடத்தையும் ஆச்சர்யமாகப் பார்த்தது.

''மாயா டீச்சர் வீட்டுக்கு எப்போ வேணாலும் வரலாம். எதை வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தலாம். எங்களுக்கு மட்டுமில்லை. உனக்கும் இதே ரூல்ஸ்தான்'' என்று சொல்லி சிரித்தாள் அபிநயா.

''நாம எல்லாரும் ஜாலியா எதாவது விளையாடலாமா?'' என்று கேட்டான் விஷ்ணு.

''என்ன விளையாடலாம்?'' என்றாள் மாலினி.

''ஓடிப்பிடிச்சு விளையாட லாம்'' ஷங்கர்.

''ச்சே போர்'' என்றது ஜீபா.

''ஹைட் அண்ட் ஸீக்'' என்றான் கிருஷ்ணா.

''ம்... ஹ¨ம்'' என்று ஜீபா உதட்டை... ஸாரி! தும்பிக்கையை பிதுக்கியது.

''ட்ரெஷர் ஹன்ட்'' என்றாள் மாலினி.

''ம்...'' என்று சில நொடிகள் யோசித்த ஜீபா, ''ஓகே! அதையே விளையாடலாம்'' என்று பச்சை சிக்னல் காட்டியது.

மாயா டீச்சர் எழுதிக் கொடுத்த குறிப்புகளைக் கொண்டு புதையல் வேட்டையாடினார்கள் சுட்டிகள். சுட்டிகளுடன் சேர்ந்து பயங்கர உற்சாகமாக குறிப்புகளைக் கண்டுபிடித்து விளையாடியது ஜீபா.

''நாமெல்லாம் இந்த குட்டி டிரெஷர் ஹன்ட்டையே இவ்வளவு கஷ்டப்பட்டு விளையாண்டோமே... அந்தக் காலத்தில் ஒரிஜினல் டிரெஷரையெல்லாம் ஒளிச்சு வெச்சதுக்கு அப்புறம் எப்படி சரியா கண்டுபிடிச்சிருப்பாங்க?,'' என்றாள் அபிநயா.

''ஆமாம் டிரெஷர் ஹன்ட்னாலே ஏன் ஒரு தீவைத் தேடிப் போய் எல்லாத்தையும் ஒளிச்சு வெச்சாங்க?'' என்று கேட்டான் விஷ்ணு.

''அதுக்கு காரணம் இருக்கு. வெளிநாட்டுக் கொள்ளைக்காரர்கள்தான் இந்த மாதிரி புதையல்களை ஒளிச்சு வெச்சாங்க. அவங்க பெரும்பாலும் கடற்கொள்ளையர்களா இருந்ததால தீவுகளுக்குப் போனாங்க. தீவுகள் திடீர்னு உருவாகற நிலப்பரப்புகள். கொலம்பஸ் காலத்தில் இல்லாத ஒரு தீவு... அடுத்து வந்த ஆராய்ச்சியாளர்கள் கண்ணில் மாட்டலாம். அதே போல அவை காணாமல் போவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அப்படிப்பட்ட ஆச்சர்யமான நிலப்பரப்புகள்தான் இந்தத் தீவுகள்'' என்றார் மாயா டீச்சர்.

''ஐ... அப்போ எங்களை ஏதாவது சின்னத் தீவுக்குக் கூட்டிட்டுப் போங்க'' என்று அடம்பிடிக்க ஆரம்பித்தது ஜீபா.

''மாயா டீச்சர் வீட்டுக்கு வந்தா என்ன செய்யலாம்னு ஜீபாவுக்கும் இவ்வளவு வேகமா தெரிஞ்சிருச்சா? சரி, ஜீபாவே ஆசைப்பட்டாச்சு! இனி என்ன கம்பளத்தை விரிச்சுற வேண்டியது தான்'' என்றான் கிருஷ்ணா.

சிரித்துக் கொண்டே மாயா டீச்சர் கம்பளத்தை எடுத்து வர, எல்லோரும் அதில் தீவைத் தேடிக் கிளம்பினார்கள்.

''தீவுகள் எப்படி உருவாகுது?'' என்று கேட்டாள் மாலினி.

''அது எப்படி உருவாகுதுன்னு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி அதில் எத்தனை வகை இருக்குன்னு முதலில் தெரிஞ்சுக்கோங்க. அப்போதான் ஒவ்வொண்ணும் எப்படி உருவாகுதுன்னு தெரிஞ்சுக்கலாம்'' என்றார் மாயா டீச்சர்.

அவரே தொடர்ந்து, ''நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட ஒரு நிலப்பரப்பைதான் நாம தீவுன்னு சொல்றோம். பொதுவா தீவுகளை நாம் எல்லாம் அதன் அளவை வைத்து சின்னத் தீவு, பெரிய தீவுன்னு பிரிச்சிடறோம். ஆனால் அவை உருவாகும் விதத்தை வைத்து தீவுகள் இரண்டு விதமாகப் பிரிக்கப்படுகின்றன. அவை கான்டினென்டல் தீவுகள் மற்றும் ஓஷானிக் தீவுகள்'' என்றார்.

அப்போது அவர்கள் பறந்து கொண்டிருந்த கடல் பரப்பில் ஒரு சின்னத் தீவு தென்பட்டது. மொத்தமே இருநூறு பேர் கூட்டமாக நிற்கக் கூடிய அளவே உள்ள தீவு அது. மேலிருந்து பார்த்தாலே நல்ல வளமாக அந்தத் தீவு இருக்கிறது என்று தெரிந்தது. அதன் மேல் கம்பளத்தை இறக்கினார் மாயா டீச்சர். மாயா டீச்சரும், ஜீபாவும், சுட்டிகளும் மெள்ள அந்த தீவை காலால் அளக்க ஆரம்பித்தார்கள்.

''ரெண்டு தீவு வகைகள் சொன்னீங்களே அதில் இது என்ன வகைத் தீவு?'' என்றான் ஷங்கர்.

''அதுக்கு நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி கான்டினென்டல் தீவுகள்னா என்னன்னும் ஓஷானிக் தீவுகள்னா என்னன்னும் சொல்லிடறேன்'' என்றார் மாயா டீச்சர்.

''ஓ.கே சொல்லுங்க சொல்லுங்க தெரிஞ்சிக்கறோம்'' என்று குரலில் அதிக ஆர்வம் தேக்கிக் கேட்டது ஜீபா.

''ஒரு கண்டத்தில் உள்ள கண்டத் திட்டின் மேல் அமைந்திருக்கும் நிலப் பரப்புகளை கான்டினென்டல் தீவுகள் எனலாம். உதாரணமாக க்ரீன்லாந்து, கிரேட் பிரிட்டன், அயர்லாந்து போன்றவற்றைச் சொல்லலாம். இவையெல்லாம் அந்தந்த கண்டத் திட்டுக்களின் மேல் வெளியே தெரியும் மிகப் பெரிய நிலப்பரப்புகளாக இருக்கும். சில சமயம் கண்டத்தின் ஒரு பகுதி திட்டுகள் நகர்வால் பிரித்து இழுக்கப்பட்டிருக்கும். இதனால் அந்தப் பகுதி நிலம் மட்டும் கண்டத்தில் இருந்து பிரிந்து, தனி நிலப்பரப்பாக இருக்கும். இதை மைக்ரோ கான்டினென்டல் தீவு என்பார்கள். ஆப்பிரிக்க கண்டத்துக்கு பக்கத்தில் இருக்கும் மடகாஸ்கர் தீவை இதற்கு உதாரணம் காட்டலாம். இது தவிர, நதிகளின் நடுவே இருக்கும் தீவுகளையும், பாறை மணல் போன்றவை அடித்து வரப்பட்டு கண்டத்திட்டுகளின் மேல் சேர்ந்து உருவாகும் தீவுகளையும் இந்தக் கணக்கில் சேர்க்கலாம். சுருக்கமாக சொல்லணும்னா ஏற்கெனவே இருந்த ஒரு நிலப்பரப்பு நகர்ந்ததாலேயோ, அருகில் உள்ள சிறு பரப்பு முழுமையாக அரிக்கப்படதாலேயோ இந்தத் தீவுகள் உருவாகி இருக்கும். சில நேரம் நீர் மட்டம் அதிகரித்து சுற்றியுள்ள பகுதிகளை நீரில் மூழ்கடித்து விடும். இதனாலும் கூட அந்தப் பகுதியில் உள்ள ஒரு நிலப்பரப்பு தீவாக மாறிவிட வாய்ப்பு இருக்கிறது'' என்றார் மாயா டீச்சர்.

பேசிக் கொண்டே எல்லோரும் தீவின் ஒரு கரைக்கு வந்தார்கள். தீவை ஒட்டிய கடல் பகுதியின் கீழே நிறைய மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அங்கே பவழப் பாறைகள் நிறைய இருந்தன. மணல் மிகக் குறைவாகவே இருந்தது.
அங்கே...

(தொடரும்...)