சாகச நாயகன்! -ஜாக்கிசான்

சான், புரூஸ் லீயுடன் நெருக்கமாகப் பழகாவிட்டாலும், அவர் செட்டில் நடந்து கொண்ட விதத்திலிருந்து, அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டார். புரூஸ் மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் சாதாரண ஸ்டண்ட் கலைஞர்களையும் மதிக்கும் குணம் கொண்டவர். தன் கீழ் பணிபுரியும் கலைஞர்களின் நலனுக்காக தன்னுடைய முதலாளிகளை எதிர்த்துக் கொள்ளவும் தயங்காதவர்.

'ஃபிஸ்ட் ஆப் ஃப்யூரி' படம் வெளிவந்த சில வருடங்களுக்குப் பிறகு, 'என்டர் தி டிராகன்' படம் எடுக்கப்பட்டது. அதில் சான் ஸ்டண்ட் கலைஞனாக பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. போதை மருந்து கடத்தும் கூட்டத்தின் தலைவன் தன் தொழிலுக்குத் தேவையான சிறந்த சண்டையாளனைத் தேர்ந்தெடுக்க, தன்னுடைய தீவில் ஒரு குங்ஃபூ போட்டிக்கு ஏற்பாடு செய்கிறான். அதில் தலைவனை உளவு பார்க்கவும், தன் தங்கையின் மரணத்துக்குக் காரணமானவனை அழிக்கவும் கிளம்பும் கதாநாயகனாக புரூஸ் லீ நடித்தார். இந்தப் படத்தில்தான் புரூஸ் லீயின் குறிப்பிடத்தக்க ஆயுதமான 'நுன்சாகு'... (இரு பக்கங்களில் கட்டையும் அவற்றை இணைக்க நடுவே சங்கிலியுமாக இருக்கும் ஆயுதம் அது.) பிரபலமானது. நாயகனை வீழ்த்த வரும் அடியாட்கள் ஒவ்வொருவராக லீயின் திறமையால் வீழ்த்தப்படுவார்கள். அவர்களில் கடைசியாக சான் வருவார்.

புரூஸ் அடித்ததும், சான் மயங்கிச் சாய்வது போலவும் பிறகு நினைவு திரும்பி, எழுந்து கேமராவைப் பார்த்து ஓடுவது போலவும் காட்சி.

கேமரா ஓட ஆரம்பித்ததும், புரூஸ் தன்னுடைய ஆயுதத்தை வேகமாக சுழற்ற, கட்டை உண்மை யிலேயே சானின் முகத்தைத் தாக்கியது. வலியால் உயிர் போனதென்றே சொல்லலாம்.

புரூஸ் லீக்குத் தன் தவறு புரிந்தது. காட்சி முடிந்ததுமே சானிடம் ஓடி வந்து, ''மன்னித்து விடு... மன்னித்து விடு'' என்றபடி காயத்தைக் கவனித்தார். அந்த நாள் முழுவதும், ஒவ்வொரு காட்சியின் இடைவேளையின் போதும், ''மன்னித்து விடு'' என்று பலமுறை கூறினார் என்று சான் நினைவு கூர்வார்.

புரூஸ் லீயின் இந்த இளகிய மனம் ஸ்டண்ட் கலைஞர்கள் அனைவரையும் கவர்ந்த ஒன்று.

அப்படிப்பட்ட நடிகனின் திடீர் மரணம்தான் ஹாங்காங் திரையுலகை திடுக்கிட வைத்தது. வர்மக் கலைக்கு உயிர் கொடுத்த நாயகன் இறந்து போனார்.

புரூஸ் லீ படத்துக்குப் பிறகு வந்த சண்டைப் படங்கள் எதையும் மக்கள் பார்க்க விரும்ப வில்லை. அதனால் பல படங்கள் தோல்வியடைந்தன.

இந்த பட்டியலில் சான் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய படமும் அடக்கம்! சிறந்த முறையில் எடுக்கப்பட்டும் தன் படம் தோல்வியடைந்ததில் இயக்குனர் பாவ்-வுக்கு பெருத்த ஏமாற்றம். தங்களது கடின உழைப்பு பலன் தராமல் போனதால் யாரிடமும் சொல்லாமல் காணாமல் போனார்.

தயாரிப்பாளர் தன்னிடம் பணிபுரிந்தவர்களை அழைத்துப் பேசினார். அப்போது சானிடம், ''சான் உனக்கு எல்லாம் தெரியும். நான் சொல்லப் போவது அதிர்ச்சியாகத் தான் இருக்கும். எனக்கு பெருத்த நஷ்டம். நிறுவனத்தை மூடப் போகிறோம். உங்களுக்குத் தர வேண்டிய பணத்தை முழுசாகத் தர முடியாத சூழ்நிலை. மன்னிக்கவும்'' என்றார்.

சோர்வுடன் தலையசைத்துவிட்டு நடந்தார் சான். வெளியில் நின்றிருந்த பியாவ், ''என்ன நடக்கிறது?'' என்று கேட்டான்.

''எல்லாம் முடிந்துவிட்டது. சம்பளம் முழுக்கக் கொடுக்க முடியாதாம். படமும் எடுக்கப் போவதில்லையாம். நாம் தெருவுக்கு வந்து விட்டோம். நீ திரும்பவும் பெரியண்ணாவிடம் போ. அவர் நிச்சயம் ஏதாவது வேலை வாங்கித் தருவார்'' என்று ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டு வீட்டிற்குச் சென்றார்.

என்ன முடிவு செய்வது என்று யோசித்தார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெற்றோரிடமே சென்றுவிடுவது நல்லது என்று தோன்றியது. கடைசியாக இருந்த பத்து வெள்ளியில் தன் தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ''அப்பா நான் அங்கு வருகிறேன்''என்றார். தந்தை பயணத்துக்குத் தேவையான பணத்தை அனுப்புவதாகச் சொன்னார்.

தான் ஆஸ்திரேலியா செல்வது குறித்து யாரிடமும் மூச்சு விடவில்லை. திரைத்துறையில் சாதித்துக் காட்டலாம் என்று விரும்பியது பொய்த்துப் போனது. ஆஸ்திரேலியா செல்லும் நாளும் வந்தது. ஹாங்காங்கை விட்டுச் செல்ல மனசே இல்லாமல் விமானம் ஏறினார். தன்னுடைய பால்ய நாட்களை அசைபோட ஆரம்பித்தார்.

சீனாவில் நடந்த புரட்சியின்போது... முக்கிய நிலப்பகுதியில் வசித்த மக்கள் பலரும், அப்போது ஆங்கில ஆட்சியின் கீழிருந்த பாதுகாப்பும் வளர்ச்சியும் நிறைந்த ஹாங்காங் நகருக்கு குடிபெயர்ந்தனர். உடுத்தும் உடைகள் கொண்ட மூட்டை ஒன்றை மட்டுமே முதுகில் சுமந்துகொண்டு, பலர் மறக்க முடியாத நினைவுகளை மட்டும் மனதில் ஏந்திக் கொண்டு ஹாங்காங் நகருக்கு வந்தனர்.

வந்த இடத்தில் கிடைத்த வேலைகளை, அது ஆபத்தான வேலையென்றாலும் செய்து தங்கள் வயிற்றை நிரப்ப முயன்றனர். அவர்களில் சார்லஸ் சான், லீ லீ சான் தம்பதியினரும் இருந்தனர். ஒரு வேலையில் சேர்ந்து... உண்ணும் உணவுக்கும், உடுத்தும் உடைக்கும், தங்கும் இடத்திற்கும் எந்தவிதப் பிரச்னையும் இல்லாத சூழல் அவர்களுக்குக் கிட்டியது.

அவர்கள் இருவரும் பிரெஞ்சுத் தூதுவர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தனர். சார்லஸ் சான் சமையல்காரராகவும், லீ லீ சான் வீட்டு வேலைகளைச் செய்யும் உதவியாளராகவும் இருந்தார். மிகவும் பணக்காரர்கள் வசிக்கும் விக்டோரியா சிகரத்தில் இருந்த தூதுவர் வீட்டிலேயே ஒரு பகுதியில் வசித்தனர். அப்போதுதான் ஜாக்கி சான் அவர்களுக்குப் பிறந்தார்.

ஒருமுறை ஜாக்கி சானிடம், ''தாங்கள் பெரிதாகக் கருதும் சாகசச் செயல் எது?'' என்று கேட்க, ''நான் செய்த சாகசங்களோடு ஒப்பிட முடியாத சாகசச் செயல் என் தாய் என்னை ஈன்று எடுக்க பட்ட பாடுதான்'' என்றாராம்.

காரணம், லீ லீ பன்னிரண்டு மாதங்கள் வயிற்றில் தாங்கி, ஐந்தரை கிலோ எடையில் பெற்றெடுத்த குழந்தை நம்ம ஜாக்கி சான்!

ஏப்ரல் 7, 1954ல் உலகைப் பார்க்க வந்த குழந்தையைக் கண்ட பெற்றோருக்கோ பேரதிர்ச்சி. அத்தனை பெரிய குழந்தையை அவர்கள் அதுவரை கண்டது கிடையாது. அதனால் குழந்தையை ''பாவ் பாவ்'' என்று செல்லமாக அழைத்தனர். சீன மொழியில் அதற்கு 'பீரங்கிக் குண்டு' என்று பொருள்.

சீனர்களின் கால அட்டவணைப்படி, 1954ஆம் வருடம், குதிரைக்கான வருடம். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், குறிக்கோள் கொண்டவர்களாயும், வாழ்க்கையில் மேன்மேலும் வெற்றிகளைக் குவிப்பவர்களாகவும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.

ஆனாலும் சான் பிறந்தபோது, அப்பா சார்லஸ் சானுக்கு பணப் பிரச்னை. லீ லீ குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து கிளம்ப வேண்டிய நாள். ''என்னங்க... ரொம்ப யோசனையோட இருக்கீங்க?'' என்று கேட்டார்.

''உனக்கு அறுவை சிகிச்சை செய்ததால மருத்துவச் செலவு ரொம்ப ஆயிடுச்சு. டாக்டருக்கு பணம் கட்டணும்'' என்றார் சார்லஸ்.

''எவ்வளவுங்க?''

''500 டாலர் கட்டணும்...''

''ஐநூறா? எப்படிங்க கட்டறது?''

''அதான் தெரியல... நம்மகிட்ட அவ்வளவு பணம் இல்லயே''

''என்ன செய்யப் போறீங்க''

''டாக்டரே ஒரு யோசனை சொன்னார்''

''என்னங்க அது?''

''நாம குழந்தையை அவங்ககிட்டே கொடுத்துட்டா மருத்துவச் செலவு 500 டாலரையும் அதுக்கு மேலே 1500 டாலரையும் கொடுக்கறதா சொல்றார்.''

''ஐயோ... குழந்தையை கொடுக்கறதா..! என்னால முடியாது. யாருகிட்டயாவது பணம் கேட்டுப் பாருங்க'' என்றார் லீ லீ.

சார்லஸ் தன் நண்பர்களைச் சந்தித்தார்.

''இப்ப என்ன செய்யப்போறே?'' என்று கேட்டார்கள் நண்பர்கள்.

''டாக்டர் குழந்தையைக் கொடுத்தா 2000 டாலர் தரதாச் சொல்றார்'' என்றார் சார்லஸ்.

''இங்க அது சகஜம்தானே... 500 டாலரையும் கட்டிடலாம். கூட 1500 டாலரும் கிடைக்கும். உன்னால குழந்தையை எப்படி வளர்க்க முடியும்ன்னு தெரியாது. அவங்க நிச்சயம் நல்லா வளர்த்து ஆளாக்கிடுவாங்க'' என்றார் ஒரு நண்பர்.

''பணம் என்னவோ கிடைக்கும். ஆனா மனசு கேட்கலையே.''

இதைக் கேட்ட மற்றொரு நண்பர், ''சார்லஸ், நான் ஒண்ணு சொல்றேன். பன்னிரண்டு மாதம், ஐந்தரை கிலோ எடை. ரொம்பவே வித்தியாசமான குழந்தை. அவன் சாதிக்கப் பிறந்திருக்கான்னு நினைக்கிறேன். இப்ப டாக்டர்கிட்டே பணத்துக்காக அவனை கொடுத்துட்டு, பின்னால யோசிக்கறதுல பிரயோஜனம் இருக்காது.'' என்றார்.

பணத்துக்கு என்ன செய்வது... குழந்தையை விற்றுவிடுவதா... என புரியாமல் குழம்பி நின்றார் சார்லஸ்.

(சாகசம் தொடரும்)