Published:Updated:

கணினி கற்கலாம் வா நீ

கணினி கற்கலாம் வா நீ

கணினி கற்கலாம் வா நீ

கணினி கற்கலாம் வா நீ

Published:Updated:

கணினி கற்கலாம் வா நீ !
இரா.முருகன்

சமூக இணைப்பு (social networking) என்ன மாதிரி சமாச்சாரம்னு அறிமுகப்படுத்திக்கிட்டோம். மிச்ச தகவலும் தெரிஞ்சுக்கலாமா...

கணினி கற்கலாம் வா நீ

பேஸ்புக் 2004-ல் வளர்ச்சி அடைய ஆரம்பிச்சதும், மைக்ரோசாப்ட், ஆப்பிள் கம்பெனிகளில் வேலை பார்க்கிறவங்களையும் பேஸ்புக்கிலே சேர வைச்சாங்க. இது மைக்ரோ சாப்ட் கம்பெனி நிர்வாக கவனத்துக்கு வந்தது. பேஸ்புக்கிலே கோடிக்கணக்கான தொகைக்கு பங்கு வாங்கினார் பில்கேட்ஸ். அப்புறம் பேஸ் புக்குக்கு ஏறுமுகம்தான்!

பேஸ்புக்கிலே சுவர் (wall) ரொம்ப பிரபலமான வசதி. மனசுலே தோணறதை எழுதி வச்சா, நண்பர்கள் மட்டும் படிச்சு கருத்துச் சொல்லலாம். பிடிச்ச புத்தகம், செய்தி, இதோட இன்டர்நெட் விலாசத்தைக் கூட சுவர்லே தரலாம். அதேபோல், புகைப்பட வசதி. எத்தனை போட்டோவை வேணும்னாலும் மொபைல் போன்லே எடுத்து, நண்பர்கள் பார்க்கத் தரலாம். பிறந்தநாள் போட்டோ, பிக்னிக் போன போட்டோ... இப்படி ஆல்பம் ஆல்பமா பிரிச்சுப் போடலாம். இந்த ஆல்பத்தை இன்னார்தான் பார்க்கலாம்னு கூட கட்டுப் பாடு விதிக் கலாம். நீங்க நெட்டுலே மேயற போது நண்பனும் நெட்டிலே இருந்தா அரட்டை (chat) போடலாம்.

கிட்டத்தட்ட பேஸ்புக் கிலே இருக்கற எல்லா வசதிகளோடும் கூகுள் அறிமுகப்படுத்திய வெப்சைட் ஆர்க்குட்,(Orkut).. பல வசதி உண்டு. ஆனா, நம்மைப் பற்றிய முக்கியத் தகவலை (profile) ஆர்க்குட் தளத்துக்கு வர்ற எல்லாரும் படிக் கலாம் என்கிற குறைபாடு இருக்கு.அதை மாத்திட்டு இருக்கறதா தகவல். அதனால, ஆர்க்குட் இரண்டாம் இடத்திலே இருக்கு. முதல் இடத்தை பேஸ்புக் தக்க வச்சிருக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கணினி கற்கலாம் வா நீ

வலைப்பதிவு (blog) ஏற்படுத்தி நாம் எழுதின கட்டுரை, கவிதை, கதையை எல்லோரோடும் பகிர்ந்துக்கற சமூக இணைப்பு பற்றிப் பார்த்தோம். www.blogspot.com போன்ற இணைய தளங்கள் இலவசமாக இந்த வசதியைத் தரும். நீளமாவோ, கையெழுத்துப் பத்திரிகை மாதிரியோ எழுத நேரம் கிடைக்கலே. திடீர்னு ஏதாவது தோணுதா, அதைச் சுருக்கமாச் சொல்ல வழி இருக்கா? இருக்கே. மைக்ரோப்ளாகிங் ஆன குறும் பதிவு. www.twitter.com என்ற வெப்சைட்டுலே பதிவு பண்ணிக்கிட்டா சின்னச் சின்னதா வலைப்பதிவுகளை நாள் முழுக்க போட்டுக்கிட்டே இருக்கலாம்.

ட்விட்டர்னா பறவை கத்தற ஒலி. அந்தக் கம்பெனி தமிழிலும் குறும்பதிவு போட வசதி செஞ்சு இருக்கு. தன் பெயரை தமிழ்லே 'கீச்சு'ன்னு மொழி பெயர்த்திருக்கு. அமெரிக்கக் கம்பெனியின் தமிழ்ப் பற்று இப்படி வெளியாகிறது முதல் தடவை. எங்கே இருந்தாலும் நம்ம செல்போன் மூலமா ட்விட்டருக்கு பதிவு அனுப்பலாம். பயணம் போறப்போ வழியில் பார்க்கிற, கேட்கிற எல்லாத்தையும் கீச்சு கீச்சுன்னு

கணினி கற்கலாம் வா நீ

பதிவுகளாகத் தட்டி அனுப்பிடலாம். ஒரே ஒரு சவால், 140 எழுத்துக்கு மேலே ஒரு பதிவு இருக்க முடியாது. அதனாலே திருக்குறள் போல் குறுக்கி, செறிவா அனுப்பணும். இந்த சவால்தான் தினமும் பல ஆயிரம் பேர் புதுசா ட்விட்டர்லே பங்குபெற வைக்குது. ஒரு நாளைக்கு சராசரி ஐந்து கோடி கீச்சுக்கள் பதிவாகிறதுன்னா பார்த்துக்குங்க!

ட்விட்டர் வெப்சைட்டில் பாஸ்வேர்ட் கொடுத்து நுழைந்தும் கீச்சு அனுப்பலாம். செல்போன்லே அனுப்பறதை வாங்கிக்க, மொத்தம் ஐந்து நுழைவாசல் (gateway) திறந்திருக்கு. ட்விட்டர் - அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, கனடா இங்கெல்லாம் உள்நாட்டு நம்பர் கொடுத்து கீச்சுகளை வாங்கிக்கறாங்க. நம் நாட்டில் இருந்து நிறையப் பேர் ட்வீட் பண்றதாலே நமக் குன்னு ஒரு நுழைவாசல். பிரபலங்கள் அமிதாப் பச்சன், டெண்டுல்கர்... இப்படி பலரும் இதில் உண்டு. நீங்க அவங்களை பின் தொடர (follow), உங்க ட்விட்டர் பக்கத் திலே ஈசியா ஒரே ஒரு க்ளிக் செஞ்சா போதும். டெண்டுல்கர், 'நான் நெட் ப்ராக்டிஸ் போய்ட்டு இருக்கேன்'ன்னு கீச்சு போட்டா, அடுத்த நிமிஷம் நீங்க படிப்பீங்க!

கணினி கற்கலாம் வா நீ

ட்விட்டர் மூலம் கிடைக்கற சமூகத் தொடர்பை தொழில் நிறுவனங்களும் பயன்படுத்த ஆரம்பிச்சது யாரும் எதிர்பார்க்காத விஷயம். டூத்பேஸ்ட், ஷாம்பு, சோப், பிஸ்கட் இப்படி வேகமாக விற்கிற பொருட்கள் (Fast Moving Consumer Goods - FMCG) உற்பத்திசெய்து விற்கிற பெரிய கம்பெனிகளோட தலைவர்களும் பொறுப்பான அதிகாரிகளும் ட்விட்டரைத் தொடர்ந்து பார்த்துக்கிட்டே இருக்காங்க. எதுக்கா?

'இந்தக் கம்பெனி பிஸ்கட் நமத்துப் போய்த்தான் விக்கறாங்க'ன்னு யாராவது கீச்சு போட்டா, இவங்க கவனத்திலே உடனே விழுந்து, சரி பண்ணிடு வாங்க. சமீபத்திலே மும்பையிலே ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பில் போட தாமதம் ஆச்சுன்னு வெளிநாட்டுலே இருந்து வந்திருந்த ஒரு அம்மா ட்வீட் போட, அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே கம்பெனியோட எம்.டி அவருக்கு மன்னிப்பு தெரிவிச்சார். அவங்க விலாசத்தைத் தேடிப் போய் சன்மானமும் கொடுத்தாராம். பல ஊர்கள்லே இயங்கற சூப்பர் மார்க்கெட்களுக்கு ஒவ்வொரு கிளையிலும் எந்தப் பொருள் ஸ்டாக் இருக்கு, இல்லேன்னு தெரிஞ்சு, உடனே புதுசா சரக்கு அனுப்ப விற்பனைப் பிரிவு எப்பவும் சுறுசுறுப்பா செயல்பட்டுக்கிட்டே இருக்கும். இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தோட தலைவருக்கு சூப்பரா ஒரு ஐடியா வந்தது. 'எங்களோட எந்தக் கடையிலே எப்பப் போனாலும், நீங்க தேடி வந்த பொருள் இல்லாட்டா, ஒரே ஒரு கீச்சு போடுங்க, நாங்க பாத்துக்கறோம்'னு வேண்டுகோள் விடுத்தார். அப்புறம் என்ன, விற்பனைப் பிரிவைவிட வேகமா தகவல் தெரிஞ்சு சோப்போ, சீப்போ உடனே அங்கங்கே போய்ச் சேர்ந்திடுது. பேஸ்புக், ட்விட்டர், ஆர்க்குட் இதெல்லாம் இப்படி கோடிக்கணக்கான பேருக்கு சமூக இணைப்பு வசதி செஞ்சு கொடுக்கறதெல்லாம் சரிதான். இதை நிறை வேற்ற சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்கள் வேணும். ஊழியர்கள் வேணும். அவங்களுக்கு சம்பளம், இத்தனைக்கும் அப்புறம் லாபமும் கிடைக்கணும். எப்படி சோஷியல் நெட் ஒர்க்கிங் வெப்சைட்டுகள் இந்தப் பிரச்னைய சமாளிக்கின்றன?

சந்தேகமென்ன? விளம்பரங்கள் மூலம்தான்.

(அடுத்த இதழில் பார்ப்போம்...)

"முடியாது... முடியவே முடியாது. என்னால வாங்கித்தர முடியாது. எனக்கும் அப்பாவுக்கும் செல்லப் பிராணிகள் பிடிக்காது; அடம்பிடிக்காதே!" என்று உங்கள் அம்மா சொல்லி, செல்லப் பிராணி வாங்கித் தர மறுக்கிறாரா?

இன்டர்நெட் இருக்க பயமேன்? வாருங்கள்... உங்களுக்கு இலவசமாக செல்லப் பிராணியைக் கம்ப்யூட்டரிலேயே இயக்கலாம், உடனே லாக் இன் செய்யுங்கள் www.marapets.com

உங்கள் தனிமையைப் போக்கி, களிப்பு தரும் செல்லப் பிராணியைத் தவிர, மாதம் தோறும் பரிசு, கேம்ஸ் என அட்டகாசமான உலகம்! ஞாபகம் இருக்கட்டும், அது உயிருள்ள செல்லப் பிராணிகளைத் தராது... Virtual Gifts and games and pets மட்டும்தான்!

கணினி கற்கலாம் வா நீ

 
     
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism