"நாம் அனுப்பற எஸ்.எம்.எஸ்.-எல்லாம். முதல்ல ஙிஷிசி-ங்கிற பேஸ் ஸ்டேஷன் கன்ட்ரோலுக்குப் போகும். அங்கிருந்து விஷிசி-அப்படீங்கிற மொபைல் ஸ்விட்சிங் சென்டருக்குப் போய் அங்கிருந்து ஷிவிஷிசி-ங்கிற ஷார்ட் மெஸ்ஸேஜ் சர்வீஸ் சென்ட்டர் வழியா நாம் அனுப்பற செல்லுக்குப் போய் சேரும். இதுவே, போட்டோ மாதிரி இருந்தா அது ஙிஷிசி-லேர்ந்து நேரா ஷிநிஷிழி--ங்கிற சர்வீஸிங் ஜி.பி.ஆர்.எஸ். சப்போர்ட் நோட் வழியாக நாம் எந்த போனுக்கு அனுப்புகிறோமோ அந்த போனுக்குப் போகும்."
‘சைக்கிள் கேப்’பில் நுழைந்த கணேஷ், "டீச்சர்... எப்படி செல்போன் சிக்னல்கள் பரவலா கிடைக்குது?" என்று கேட்டான்.
"செல்போன் தொடர்புக்கு நெட்வொர்கிங் சிஸ்டம் ரொம்ப முக்கியம். அதாவது, சிலந்தி வலை மாதிரியான கட்டமைப்பு. எல்லா செல்போன்களின் இணைப்பும் இந்த வலை அமைப்புக்குள் தேன் கூட்டிலிருக்கும் சின்னச் சின்ன அறைகள் போல சிறிது சிறிதாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனியே இருக்கும். அதனால், ஒரு போனுக்கு வரும் அழைப்பு, இன்னொரு போனுக்குப் போகும். ‘ராங் கால்’ குழப்பமெல்லாம் இங்கு கிடையாது.
அதேபோல... செல்போன்களின் இணைப்பானது, டிரான்ஸ் மீட்டிங் டவர்களின் மூலம் இணைக்கப்படுகின்றன. அதனால, ரிலே ரேஸ் ஓடும் போது எப்படி ஓடுபவர்கள் அந்தக் குச்சியை கை மாற்றிக் கொள்கிறார்களோ அதுபோல, டவர்கள் சிக்னல்களை நாம் அறியாமலேயே ஒரு டவரிலிருந்து மற்ற டவர்களுக்கு மாற்றிக் கொள்கின்றன. அதனால், நாம் உலவும் ஏரியாவில் உள்ள டவரின் கட்டுப்பாட்டில் நாம் வந்துவிடுகிறோம்." என்றார் மாயா டீச்சர்.
"அப்ப நாம கட்டடத்தின் பேஸ்மென்ட் பகுதியில் இருந்தாலோ, சாலைகளில் நடந்து கொண்டிருக்கும் போதோ... சில சமயங்களில் திடீரென சிக்னல் கட்டாயிடுதே டீச்சர்" என்றான் பிரசன்னா.
"நீ சொல்வதும் கரெக்ட்தான். என்ன விஷயம்னா... அங்கெல்லாம் நெட்வொர்கிங் இல்லை என்று அர்த்தம். நம்முடைய போன் அப்போது எந்த டவரின் கட்டுப்பாட்டிலும் இல்லை என்று அர்த்தம்." என்று சரசு சொன்னதை ஆமோதித்தார் மாயா டீச்சர்.
"டீச்சர்..." என்று இழுத்த மதுவைப் பார்த்து, "உள்ளே போய் பார்க்கணும் அதுதானே, போகலாம்" என்றபடியே மந்திரக் கம்பளத்தை விரித்தார் டீச்சர்.
பெரியதாக இருந்த மந்திரக் கம்பளம்... இவர்கள் எல்லோரும் ஏறிக் கொண்டதும், அப்படியே சுருங்கி, செல்போனின் ஸ்கிரீன் வழியாக உள்ளே பயணித்தது.
மாயா டீச்சரும் சுட்டிகளும் குட்டியாக செல்போனின் உள்ளே போனதும், கணேஷ் கேட்ட கேள்வி... "டீச்சர் எப்படி இது எல்லா வேலைகளையும் பார்க்கிறது?"
"நாம் இப்போ பார்க்கிறது செல்போனின் சர்க்யூட் போர்டு. இதில் இருக்கும் ஐ.சி.க்கள் (இன்டகிரேட்டட் சர்க்யூட்) ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையைப் பார்க்கும். ஒன்று நினவாற்றல் பகுதி, இன்னொன்று ஒலி, இன்னொன்று ஆம்ப்ளிஃபையர், அடுத்தது பவர் சப்ளை என அதனதன் வேலையை அது அது செய்துவிடும்" என்றார்.
"சிம் கார்டு பத்தியும் கொஞ்சம் சொல்லுங்களேன்." என தன் பங்குக்கு கொக் கியைப் போட்டாள் சரசு.
"சொல்றேன்... கொஞ்சம் பேர் போன் தொலைஞ்சாக்கூட கவலைப்பட மாட்டாங்க ஆனா, சிம் கார்டு தொலைஞ்சுட்டா அவ்வளவுதான்! பயங்கரமா டென்ஷன் ஆயிடுவாங்க. சிம் கார்டு அப்படிங்கிறது ரொம்பவே முக்கியம். அதன் மூலமாத்தான் செல்போன் சம்பந்தப்பட்ட எஸ்.எம்.எஸ். அனுப்பறது, நண்பர்களை அழைப்பது, இன்டர்நெட் ஆக்டிவேட் பண்றது அப்படின்னு எல்லா வேலையையும் செய்ய முடியும். மேலும், இந்த சிம் கார்டில் நம் நண்பர்கள் அல்லது நாம் அடிக்கடி அழைக்கக் கூடியவர்களின் எண்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். அந்த எண்களை ஆபீஸ், பர்சனல், ஃப்ரெண்ட்ஸ் என்று தனித்தனியே குழுவாகவும் சேமித்து வைத்துக் கொள்ளலாம். ‘சிம்மின்றி அமையாது செல்’ இது புது மொழி. இந்த தொழில்நுட்பம் நிஷிவி - என்று அழைக்கப்படுது." என்றார் மாயா டீச்சர்.
"ஆனா, எங்க மாமா யூஸ் பண்ற போனில் சிம்கார்டே கிடையாது டீச்சர்" என்றான் கணேஷ்.
"சீ... அப்படியெல்லாம் இருக்காதுடா" என்றாள் மது.
"கணேஷ் சொல்றது கரெக்ட்தான் மது. அது வேற ஒரு தொழில்நுட்பம். அதன் பேரு சிவிஞிகி. இந்த தொழில் நுட்பத்துக்கு சிம் கார்டு தேவையில்லை. ஆனா, சிம் கார்டுல இருக்க வேண்டிய பதிவு எல்லாம் அந்த போனிலேயே பதிவு செஞ்சிருப்பாங்க. அதனால தனியா சிம் கார்டு போடத் தேவையில்லை. அதே சமயம், நாம அடிக்கடி போனோட மாடலை மாத்த முடியாது. வாங்கினதுலேர்ந்து ஒரே போனைத்தான் வெச்சிக்கணும். ஆனா, நிஷிவி - தொழில்நுட்பத்துல நாம டச் ஸ்கிரீன், ப்ளிப் அப்படின்னு இஷ்டத்துக்கு போன் மாடலை எப்ப வேணா மாத்திக்கலாம். மத்தபடி ரெண்டு தொழில்நுட்பத்தின் அடிப்படை செயல்பாடுகளும் ஒன்றுதான்." என்றார் மாயா டீச்சர். நம்ம நாட்டுல ரெண்டுவிதமான டெக்னாலஜியும் பயன்படுத்தறாங்க!
"டீச்சர், உள்ளே வரும்போது சாப்பிட எதாவது கொண்டு வந்திருக்கணும். இப்ப பசிக்குது" என்றாள் மது.
"சரி இன்னிக்கு இது போதும். வேணும்னா அப்புறம் நிறையத் தெரிஞ்சுக்கலாம். அப்ப மறக்காம ஸ்நாக்ஸை கொண்டு வரலாம்... இப்ப கிளம்பலாம்" என்றார். அவர்கள் செல்போனிலிருந்து வெளியே வந்ததும் டீச்சர் சுட்டிகளுக்காக டிபன் செய்ய சமையலறைக்கு சென்றார்.
|