Published:Updated:

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

Published:Updated:

30-11-2010
காப்பி அடிக்கலாம் வாங்க !

கே.கணேசன்

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க என்ற உடனே... நாங்க ஷாக் ஆயிட்டோம்! ஆனா, படிக்கப் படிக்க ரொம்பவே நல்லா இருந்தது. சுட்டிகள் எப்படி வளரவேண்டும் என்று எடுத்துச் சொல்லும் விதம், ரொம்பவே பிடிச்சிருக்குனு நிறைய கடிதங்கள் வந்திருக்கு!
ஓ.கே இந்த முறை நாம் காப்பி அடிக்கப் போறது யாரைன்னுதானே யோசிக்கிறீங்க..? மேல படிங்க!

இது ஒரு சாதாரண பள்ளி. அதன் நூலகத்தில் கலைந்திருக்கும் புத்தகங்களை கவனமுடன் அடுக்கிக் கொண்டிருக்கும் சுட்டியைத்தான் நாம் இந்த முறை காப்பி அடிக்கப் போகிறோம். சுட்டியின் பெயரைப் பிறகு தெரிந்துகொள்வோம்.

அமெரிக்காவில் உள்ள சியாட்டல் பகுதியில் இருக்கும் வசதியானவர்கள் படிக்கும் பள்ளியில் இடம் கிடைக்காததால், அதே பகுதியில் உள்ள ஒரு சாதாரண பள்ளியில் சேர்ந்தான்.

ஒருநாள், பள்ளி நூலகத்தில் கலைந் திருக்கும் புத்தகங்களை முறையாக அடுக்கச் சொல்லி, பள்ளியின் நூலகர் மாணவர்களிடம் சொன்னார். முதலில் ஆர்வத் துடன் வேலை செய்ய ஆரம்பித்த மாணவர்கள்... நாளாக நாளாக, நூலகத்துக்கு புத்தகங்களை அடுக்க வருவதைக் குறைத்துக் கொண்டனர். ஆனால், நம் சுட்டி மட்டும் அந்த வேலையை மிகுந்த விருப்பத்துடன் செய்ய ஆரம்பித்தான். ஏற்கனவே கம்ப்யூட்டர் புரோகிராம்களை உருவாக்குவதில் திறமை இருப்பதால், புத்தகங்களை எப்படி வரிசைப் படுத்துவது... எந்த வரிசையில் அவற்றை அடுக்குவது, எப்படித் தேடினாலும் விரைவாக எடுக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்தபடியே அந்த வேலையில் ஈடுபட்டான்.

சுட்டீஸ்... நீங்க நினைப்பது சரிதான், அந்தச் சுட்டியின் பெயர் பில் கேட்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காப்பி அடிக்கலாம் வாங்க !

புத்தகங்களின் தலைப்பு, எழுத்தாளர் பெயர் வரிசை, புத்தகத்தில் இலக்கமிடுவது, வெளியீட்டாளர் பெயர் வரிசை என அத்தனை முறைகளையும் யோசித்து, இப்படி அடுக்கினால் என்ன? என்று அவனது மூளை தனக்குள்ளேயே புரோகிராம் செய்ய ஆரம்பித்துவிட்டது. புத்தகங்களையும் அடுக்கிக்கொண்டே அதில் ஏற்படும் சிக்கல்களை அலசி ஆராய்ந்து, அதைத் தவிர்க்க வழி... என அவரது செயல்பாடுகள் அமைந்தன.

அவனது மூளை... ஒரு கம்ப்யூட்டரைப் போல செயல்பட்டது, நூலகத்தைத் தன் எண்ணப்படி அமைத்தார். நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒழுங்காகவும், விரும்பிய புத்தகங்களை சட்டென்று தேடி எடுக்கும் படியும் அடுக்கி வைத்துவிட்டார். கூடவே... தான் பின்னாட்களில் உருவாக்கப் போகும் கம்ப்யூட்டர் புரோகிராம்களுக்கு, இந்த அனுபவம் கை கொடுக்கும் என்பதை உணர்ந்தார்.

பள்ளியில் படிக்கும்போதே ‘டிராஃப் ஓ டேட்டா’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, நகரத்தின் வாகனப் போக்குவரத்துக்கான புள்ளி விவரங்களை எடுக்க ஒரு மென்பொருளைத் (சாஃப்ட்வேர்) தயாரித்து விற்றார். கூட இருந்து உதவியது சக தோழனான பால் ஆலங். 1975-ல் அவருடன் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை உருவாக்கினார். நம் வீடுகளில் ஜன்னல் இருக்கோ இல்லையோ கம்ப்யூட்டர்ல கண்டிப்பா விண்டோஸ் இருக்கும். அந்த அளவுக்கு, கணினி உலகின் தவிர்க்க முடியாத நிறுவனமாக மைக்ரோ சாஃப்ட், மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்தது. அதுமட்டும் இல்லாமல், உலகின் மிகப் பெரும் பணக்காரர் வரிசையில் முதல் இடத்தில் 1995 முதல் இன்று வரை பில் கேட்ஸ் இருக்கிறார் (இடையில் இரண்டு வருடம்தான் இல்லை).

உங்களில் நிறைய பேர் யார் மாதிரி ஆகணுங்கற கேள்விக்கு, கொஞ்சம்கூட யோசிக்காமல் டக்குனு பில்கேட்ஸ் அப்படீனு உற்சாகத்துடன் சொல்வது என் காதில் விழுகிறது.

அவர், உங்களைப் போல சுட்டியாக இருந்த நாட் களில்... நூலகத்தில் புத்தகங்களை அடுக்கும் ஒரு சுவாரசியம் இல்லாத வேலையைச் செய்யும் போதே... அதை எப்படி எல்லாம் செய்யலாம், எவ்வளவு வேகமாகவும் எளிதாகவும் செய்தால் எல்லோருக்கும் பயன் அளிக்கும் எனச் சிந்தித்து அதை, தனக்குப் பிடித்தமான துறையுடன் தொடர்புபடுத்தி, அந்த வேலையை இன்னும் சுவாரசியம் உள்ளதாக ஆக்கிக் கொண்டார். ஒரு சாதாரண வேலையைத் தன்னுடைய அறிவு வளர்ச்சிக்கும், தான் எதிர்காலத்தில் ஈடுபடக்கூடிய துறையைச் சார்ந்ததாகவும் அமைத்துக் கொண்டு, மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். எந்த செயலாக இருந்தாலும், அதை நாம் ஆர்வத்துடனும் நல்ல முறையில் திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இந்த அளவுக்கு சாதித்திருக்கும் பில் கேட்ஸை நாம் ஏன் காப்பி அடிக்கக் கூடாதுன் சுட்டீஸ்?

(காப்பி... தொடரும்!)
     
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism