Published:Updated:

கார்ட்டுன் வி.ஜ.பி.!

கார்ட்டுன் வி.ஜ.பி.!

கார்ட்டுன் வி.ஜ.பி.!

கார்ட்டுன் வி.ஜ.பி.!

Published:Updated:

30-11-2010
கார்ட்டுன் வி.ஜ.பி. மீட்டிங்..
இரா.நடராசன்

டோராவும் அவளது குரங்கு நண்பன் பூட்ஸ§ம் அந்த காட்டுப் பாதையில் நடந்தார்கள். பூட்ஸ் கையில் ஏழெட்டு வாழைப்பழங்கள்... திடீரென பக்காத் திருடன் சுவீப் வந்தது. அப்போது ஒரு மரத்தின் பின்னாலிருந்து ஒரு குரல்...

கார்ட்டுன் வி.ஜ.பி.!

நம்ம சுட்டி குள்ள நரி திருடக்கூடாது... குள்ள நரி திருடக்கூடாது... குள்ள நரி திருடவே... கூடாது.

சுவீப் நரி என்ன... நான் திருடறேனா..? (ஓடி விட்டது)

டோரா பூட்ஸ் உனக்கு கேட்டுதா... அது யாருனு பார்த்து நன்றி சொல்லலாம்... மரத்தின் பின்புறம் இருப்பது யார்? வெளியே வாங்க.

நம்ம சுட்டி ஹாய்... என் பெயர் கார்த்திக் சங்கர். நான் மதுரையில செவன்த்டே அட்வன்டீஸ் ஸ்கூல்ல ஏழாவது படிக்கிறேன். சுட்டி விகடனுக்காக உங்களோடு கொஞ்ச நேரம் பேசலாமா ப்ளீஸ்!

டோரா ஓ தாராளமா இப்ப நாம ஃப்ரண்ட்ஸ்.

கார்த்திக் சங்கர் உங்களை சின்னதா ஒரு பேட்டி காண வந்தேன். உலக பிரசித்தி பெற்றுவிட்ட உங்களது முதல் எபிசோட் படம்?

டோரா நாங்க 1999-ல் அனிமேட்டட் டிவி சானலில் வலம் வந்தோம். எங்களை உருவாக்கியது மூன்று பேர்... கிரிஸ் கில்போர்டு, வாலரிவால்ஷ் மற்றும் எரிக்வெய்னர். இயக்கினது, கேரிகொனார்ட். 2000"ல் இருந்து எங்க பயணம் தொடருது.

சுட்டி டோரா... உன்னைப் பற்றியும் உன் நண்பர்களைப் பற்றியும் சொல்லேன்.

டோரா என் பெயர் டோரா மார்க்வெஸ். நான் என் குடும்பத்தை மிகவும் நேசிக்கிறேன். ஆனால், வீட்டில் இருப்பதைவிட வெளியே போகவே அதிகம் விரும்புவேன். என் பயணங்கள் மற்றவர்களுக்கு உதவிடத்தான். இதுதான் பூட்ஸ். என் நண்பன்... பூட்ஸ் உன்னை பற்றி நீயே சொல்லேன்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார்ட்டுன் வி.ஜ.பி.!

பூட்ஸ் நான் டோராவின் பெஸ்ட் ஃப்ரண்ட். என் காலில் இருப்பது பெரிய சிகப்பு பூட்ஸ். அதனால்தான் எனக்கு அந்தப் பெயர். ஒரு முறை அந்த குள்ள நரி சுவீப், என் பூட்ஸை திருடப் பார்த்தது. அதைக் காப்பாற்றிக் கொடுத்தது டோராதான். அதிலிருந்து ஃப்ரண்ட்ஸ் ஆனோம். நாங்க சாகசப் பயணங்கள் செய்ய டோரா வோட பேக் பேக்"கும் மேப்பும் உதவுகின்றன."

பேக் "பேக்... பேக்... பேக்... என்னிடம் மந்திர சக்தி இருக்கு. அதனால்... டோராவுக்கு ஏணி, விண்வெளி ஆடை என எதுவும் கிடைக்கும். டோராவின் பிறந்த நாளுக்கு என்னை, அவளோட அப்பாவும் அம்மாவும் வாங்கித் தந்தாங்க. உண்மையில் டோராவுக்கு எந்த பொருள் தேவை என்பதை எடுத்துக் கொடுப்பது நானல்ல... நடப்பதைப் பார்க்கும் நீங்க தான்"

சுட்டி "தேவையானதை எடுத்த பிறகு... மற்ற பொருள்கள் பாட்டு பாடிக்கிட்டே உள்ளே போகும் இல்ல... எங்கே அந்த மேப்பை காணோம்?"

மேப் "நான்தான் மேப்... மேப்.... மேப்... டோராவின் பயணத்தில் முக்கிய அம்சம். அவங்க போய் சேர வேண்டிய இடம், நடுவில் வரும் கஷ்டம், இதெல்லாம் துல்லியமா காட்டுவேன். சில சமயம் நான் சூப்பர் மேப் ஆகி... சூப்பர்மேன் மாதிரி பறந்து பறந்து உதவுவேன்."

கார்ட்டுன் வி.ஜ.பி.!

சுட்டி "டோரா... உங்க டீம் வெற்றி பெரும் போதெல்லாம் பாட்டுப் பாடி, உங்களை வாழ்த்து வாங்களே... அந்த மூணு பேர்."

டோரா "ஆமாம்... அது எங்க வெற்றிப் பயணத்துக்கு டானிக் மாதிரி. ஒரு வெட்டுக்கிளி, ஒரு நத்தை மற்றும் தவளை. நல்லதை பாட்டுப் பாடி கொண்டாடுவது அவங்க வேலை."

சுட்டி "பயணம் தவிர உங்க பொழுது போக்குகள்?"

டோரா "என் அப்பா ஒரு பேஸ் பால் கோச். எனக்கும் பேஸ் பால் பிடிக்கும். அப்புறம், நம்ம நண்பன் பூட்ஸ் போடும் புதிர்கள்... நான் ஸ்பானிஷ் மொழியும் கத்துக்கறேன்... அப்புறம் ஃபுட்பால்."

சுட்டி "உங்க சகோதரர் டியாக்கா, அப்புறம், அந்த அணில் டிகோ, பென்னி எருது, உங்க டீச்சர் உட்பட நாங்கள் எல்லாவற்றையுமே ரசிக்கிறோம் டோரா. நீங்க உலகில் எந்தெந்த மொழி எல்லாம் பேசறீங்க?"

டோரா "நிறைய... சீனம், டானிஷ், டச்சு, பிரெஞ்சு, பிலிப்பினோ, ஜெர்மன், கிரேக்கம், ஹீப்ரு, இந்தோனேசியன், இத்தாலியன், ஜாப்பனீஸ், கொரிய மொழி, மலேயா, நார்வீக மொழி, போர்ச்சுகீஸ் அப்புறம் ஸ்பானிஷ் இந்தியாவில் தமிழ் மொழியில் மட்டும்தான் வருவோம். லேட்டஸ்ட்டா போனவாரம் துருக்கி மொழியில் வந்தேன்."

சுட்டி "அடேயப்பா... கலக்கறியே! டிவி சேனல் தவிர, வீடியோ கேம்ஸ், மேடை நாடகம், வானொலி நாடகம் என நீங்கள் எதையும் விட்டு வைக்கலை போல... உங்கள் பயணம் எங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கு. நாங்க நிறைய கத்துக்கறோம்."

பூட்ஸ் "டோரா... அங்க பென்னி எருது... சேற்றில் சிக்கிகிட்ட மாதிரி இருக்கே... போகலாமா..?"

டோரா "எங்களோட பயணம் செய்ததற்கு நன்றி. உங்கள் வாசக சுட்டிகளையும் கேட்டதா சொல்லுங்க."

சுட்டி "ரொம்ப நன்றி டோரா!"

 
     
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism