பிரீமியம் ஸ்டோரி

கே.கணேசன்  

நியூ ஸ்போர்ட்ஸ் !
##~##

ஃபார்முலா ஒன் போட்டிகளின் லேட்டஸ்ட் ஃபேவரைட் செபாஸ்டியன் வெட்டெல். ஜெர்மனியைச் சேர்ந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற ஐரோப்பிய கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டியில் வெற்றிபெற்று இருக்கிறார். வரும் ஜூலை 3-ந்தேதி தனது இருபத்தி நான்காவது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு சிறப்பு சேர்ப்பதாக நினைக்கிறார். இதையும் சேர்த்து பதினாறு பட்டங்களை வென்றுள்ளார் செபாஸ்டியன். ரெட் புல் ரேஸிங் அணியின் சார்பில் போட்டிகளில் பங்கேற்று  வருகிறார். 2009-ஆம் ஆண்டின் மிகவும் இளம் வயதில் ஃபார்முலா ஒன் போட்டியில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

நியூ ஸ்போர்ட்ஸ் !

இந்தியாவின் பேட்மின்ட்டன் நட்சத்திரம் சாய்னா நெஹ்வால். கடந்த இரண்டு இந்தோனேஷியன் ஓப்பன் சூப்பர் சீரிஸ் போட்டிகளை வென்ற இவர், இந்த முறையும் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், சீனாவின் யிஹன் வாங்-கிடம் இரண்டுக்கு ஒன்று என்ற செட் கணக்கில் தோற்றுப் போனார். யிஹன் வாங்கும் சாய்னாவும் முறையே தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.

நியூ ஸ்போர்ட்ஸ் !

டென்னிஸின் இந்த ஆண்டுக்கான, முக்கியப் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. இப்போட்டியில், எல்லோரது பார்வையும் ரோஜர் ஃபெடரர் மீதுதான். இதுவரை ஆறு முறை இப்போட்டியை வென்றிருக்கும் இவர், இந்த முறை வெற்றி பெற்றால், ஏழுமுறை விம்பிள்டன் போட்டியில் வெற்றிபெற்ற ஜாம்பவான் பீட் சாம்பிராஸ்ஸின் சாதனையைச் சமன் செய்தவர் என்ற பெருமை கிடைக்கும். உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான ரஃபேல் நடால்... ரோஜர் ஃபெடரருடன் மோதுவதைத்தான் சிறப்பான போட்டியாகக் கருதுவதாச் சொல்லி இருப்பது, ரோஜர் ஃபெடரரரின் ஆட்டத் திறனுக்குச் சான்று!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு