Published:Updated:

மீட்டிங்... கார்ட்டூன் வி.ஐ.பி.! டின்டின்...

மீட்டிங்... கார்ட்டூன் வி.ஐ.பி.! டின்டின்...

பிரீமியம் ஸ்டோரி

இரா.நடராசன்

டின்டினும் அவனது உற்ற தோழன் ஸ்நோயி என்கிற நாயும் அந்த அடர்ந்த காட்டில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருந்தனர். தனது லேட்டஸ்ட் கேஸில் ஏதாவது துப்பு கிடைக்குமா என இருவருமாகத் தேடினர். டின்டினுக்கு உடனடியாக ஒரு கேமரா தேவைப்பட்டது. ''டின்- டின் ப்ளீஸ்... கொஞ்சம் நில்லு'' யாரோ கத்தினார்கள். ஸ்நோயி நாய் குரல் வந்த திக்கில் பார்த்து சத்தம் ரொம்ப வராமல் குரைத்தது. அங்கே கழுத்தில் கேமராவும் கையில்  பேனாவுமாக ஒரு சுட்டி!

மீட்டிங்... கார்ட்டூன் வி.ஐ.பி.! டின்டின்...
##~##

 சுட்டி: டின்டின், ஸ்நோயி... உங்களை இவ்வளவு எளிதாக சந்திப்பேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை.

டின்டின்: உஷ்! அந்தப் புதருக்குப் பின்னால் போய் மற்றதைப் பேசலாம். ஸ்நோயி... கம்!

(மூவருமாக புதர் பின்னால் சென்றார்கள்)

டின்டின்: இந்தக் காட்டில் திருடர்கள் அதிகம். விலங்குகளையும் வேட்டையாடி விற்பதாக தகவல் வந்தது. ஒரு கிரிமினல் கூட்டம் நடமாடிகிட்டு இருக்கு. இப்ப சொல்லு நீ யாரு?

சுட்டி: என் பெயர், ஃபயாஸ்தீன். நான் கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கிறேன். எனக்கும் என் நண்பர்களுக்கும் டின் டின் என்றால் ரொம்பப் பிடிக்கும். உன்னை சுட்டிகள் சார்பாக ஒரு பேட்டிகாண வந்தேன்.

டின்டின்: குட்... எனக்கு உன் கேமராவை தர முடியுமா? இந்த இடத்தை நாலாபுறமும் படம் எடுக்கணும்...

ஃபயாஸ்தீன்: ஓ... இந்தா கேமரா.

(டின்டின், கேமிராவின் உதவியோடு நாலாபுறமும் படம் பிடித்தான்)

மீட்டிங்... கார்ட்டூன் வி.ஐ.பி.! டின்டின்...

டின்டின்: கேப்டன் ஹெ டாக் இது வழியா வருவாரு. அவரிடம் ஒரு லேப் டாப் இருக்கு. கேமிராவில் இருந்து படங்களை டவுன்லோடு பண்ணலாம். அதுவரைக்கும் நாம பேசலாமே.

ஃபயாஸ்தீன்: டின்டின், உன்னோட கார்ட்டூன் அட்வஞ்சர்லயே தி எக்ஸ்ப்ளோரர்ஸ் ஆஃப் தி மூன்... (நிலாவில் டின்டின்)தான் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். பாடப் புத்தகத்தில் வருவதை விட நிலாவைப் பற்றி நாங்கள் அதிகம் தெரிஞ்சுகிட்டோம். அதென்ன, டின்டின்..? பெயரே ரொம்ப வித்தியாசமா இருக்கே!

டின்டின்: என்னை உருவாக்கியவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜஸ் ரெமி (நிமீஷீக்ஷீரீமீs க்ஷீமீனீவீ) என்பவர். தனது இனிஷியலில் சுருக்கமான ஹெர்ஜ்  (பிமீக்ஷீரீமீ) எனும் புனைப் பெயரில்தான் அவர் என்னை உருவாக்கினார். அவரோட குழந்தைப் பருவப் பெயர்தான் டின்டின்

ஃபயாஸ்தீன்: முதலில் கருப்பு வெள்ளை கார்ட்டூன் புத்தகமாகத்தான் வந்தீர்கள் அல்லவா?

டின்டின்: முதன் முதலில் கலரில் கார்ட்டூன் புத்தகமாக வந்தது 1942-ல் 'தி ஷட்டிங் ஸ்டார்!’ சின்ன வயதில் தான் செல்லமாக வளர்த்து, காணாமல்போன பாக்ஸ் டெரியர் வகை நாயான ஸ்நோயியை எனது சகாவாக ஆக்கினார் ஹெர்ஜ். முக்கியத் திருப்பங்களில் (கதையில்தான்) பிரதானக் கண்டுபிடிப்பை நடத்துவதோடு நான் ஆபத்தில் சிக்கினால் வந்து காப்பாற்று வதும் என் தோழன் ஸ்நோயிதான்.

மீட்டிங்... கார்ட்டூன் வி.ஐ.பி.! டின்டின்...

ஃபயாஸ்தீன்: கேப்டன் ஹெ டாக்...

டின்டின்: கேப்டன் ஹெ டாக் பாத்திரம் 'தண்டரிங் டைஃபூன்ஸ்’-ல் அறிமுகமான கப்பல் கேப்டன் எனது நண்பர். அவருக்காகவும் நான் பல வகையில் துப்பு தேடி உதவுவேன்.

ஃபயாஸ்தீன்: அப்புறம் எங்களுக்கு டிடக்டிவ் இரட்டையர் தாம்சன் அண்டு தாம்சனையும் பிடிக்கும். அந்த ஆப்சன்ட் மைண்டட் பேராசிரியர் கால்குலஸ் எல்லாமே சூப்பர். டின்டின், அறிவியலை உங்களோடு சேர்ந்து அறிவது ஒரு பெரிய த்ரில்.

டின்டின்: 'தி சீக்ரட் ஆஃப்  யூனிகார்’னில் அந்த சமையல்காரர் ஹெஸ்டர் அறிமுகம் ஆனார்.

ஃபயாஸ்தீன்: டி.வி... கார்ட்டூனா எப்போ அறிமுகம் ஆனீங்க?

டின்டின்: 1971-ல்... எல்லாமே 15 நிமிடம் ஓடும் தொடர்தான். இதுவரை ஏழு முழு நீள திரைப்படமும் வந்திருக்கு.

ஃபயாஸ்தீன்: உங்க கார்ட்டூன் வழியா அறிவியல், உளவியல், சுரங்கவியல், அகழ்வு ஆராய்ச்சி இயல்... ஏன் சிலவற்றில் மருத்துவ இயல் பற்றி கூட தெரிஞ்சிக்க முடியுது.

டின்டின்: இதோ காப்டன் வந்துட்டார். எனக்கு படங்களை டவுன்லோடு செய்து தந்துவிட்டு நீ போகலாம். எந்த சவால்களையும் பயப்படாமல் எதிர்கொள் சுட்டி!

ஃபயாஸ்தீன்: ஓ... நன்றி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு