Published:Updated:

சிக்கு... புக்கு... குக்கு...

சிக்கு... புக்கு... குக்கு...

பிரீமியம் ஸ்டோரி
சிக்கு... புக்கு... குக்கு...

ஹாய் சுட்டீஸ், இந்த முறை ஓட்ஸில் செய்த ரெண்டு ரெசிபிக்களை சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன் தந்திருக்கிறார். இவை, உங்கள் உடல் நலத்துக்கு நன்மை அளிக்கும். டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி இவற்றைச் சாப்பிடுவதால் சுட்டிகளுக்கு கிடைக்கக்கூடிய பயன்களையும், சிறப்புகளையும் விளக்குகிறார்.

ஓட்ஸ் இட்லி!

தேவையானவை: ஓட்ஸ் - அரை கப்(75 கிராம்), வறுத்த ரவை - அரை கப்(75 கிராம்), தயிர் - ஒரு கப் (150 கிராம்), ஈனோப்ரூட் சால்ட் - அரை டீஸ்பூன்(10 கிராம்), உப்பு - தேவையான அளவு, எண்ணெய் 10 மில்லி.

சிக்கு... புக்கு... குக்கு...
##~##

செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் பொடியாக்கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், ரவை, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். பிறகு இட்லி மாவு பதத்தில் கரைத்து, அரை மணி நேரம் ஊறவிடவும். இட்லி ஊற்றும் முன் ஈனோப்ரூட் சால்ட் சேர்க்கவும். 10 நிமிடம் கழித்து இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, வேகவிட்டு இட்லிகளை எடுக்கவும். (ப்ரூட் சால்ட் கலந்தபின் மாவைக் கலக்க வேண்டாம்) தேங்காய் அல்லது தக்காளிச் சட்னியுடன் பரிமாறலாம்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 720 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 110 கிராம்
ப்ரோட்டீன் - 22.5 கி
கொழுப்பு - 20
கால்சியம் - 273 மில்லி கி
இரும்பு - 4.5மி.கி
பீட்டா கரோட்டின் - 186 மைக்ரோ கி

டயட்டீஷியன் கமென்ட்: ஓட்ஸ் தானிய வகையைச் சேர்ந்தது.  இது ஆஸ்திரேலியாவின் ஸ்பெஷல் தானியமாகும். இதில் இருக்கும் நார்ச்சத்து, குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு நல்லது. அதுபோல மற்ற தானிய வகைகளில் இல்லாத 'சால்யுபல் ஃபைபர்’(Soluble Fibre) இதில் இருக்கிறது. இந்த நார்ச்சத்துக்கு கொழுப் பினைக் கரைக்கும் சக்தி உண்டு. அதனால், நிறைய சாப்பிட்டாலும் உடல் பருமனாகாது. தாது உப்புக்கள் தேவையான அளவு கிடைக்கும்.

ஓட்ஸ் பக்கோடா!

தேவையானவை: ஓட்ஸ் பவுடர் - அரை கப் (75 கிராம்), பொட்டுக்கடலை மாவு - அரை கப் (50 கிராம்), புதினா - கால் கப் (10 கிராம்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் (5-கிராம்), பெருங்காயம் - கால் டீஸ்பூன், முந்திரி பொடித்தது - அரை டீஸ்பூன் (10 கிராம்), உப்பு - தேவைக்கு ஏற்ப, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

சிக்கு... புக்கு... குக்கு...

செய்முறை: ஓட்ஸ் பவுடர், பொட்டுக் கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான தண்ணீர் சேர்க்கவும். சூடான எண்ணெயில் சிறு சிறு வில்லைகளாகப் போட்டு பொரித்தெடுக்கவும். புதினா மணத்துடன் கரகரப்பான பக்கோடா ரெடி!

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 821 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 82 கிராம்
ப்ரோட்டீன் - 25 கி
கொழுப்பு - 43
கால்சியம் - 120 மில்லி கி
இரும்பு - 11 மி.கி
பீட்டா கரோட்டின் - 240 மைக்ரோ கி
ஃபோலிக் ஆசிட் - 106 மை.கி
கொலின் - 198 மை.கி

டயட்டீஷியன் கமென்ட்:  ஓட்ஸுடன் உடைத்த கடலை மாவையும் சேர்ப்பதால் இது ஒரு தனிச்சுவையுடன் இருக்கும். புதினா இருப்ப தால் வாசனையும் நன்றாக இருக்கும். சாதாரண பகோடாவை விட இது குழந்தைகளைச் சாப்பிடத் தூண்டும். எளிதில் ஜீரணமா கும். இதில் கிடைக்கும் நார்ச் சத்து உணவு செரிமானம் ஆவதற்கு மிகவும் ஏற்றது.

சம்மர் ஸ்பெஷல் சர்பத்!

தேவையானவை: மாங்காய் - நான்கு கிலோ, சர்க்கரை - 250 கிராம், ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை. செய்முறை: பிரஷர் குக்கரில், ஒன்றரை கப் தண்ணீரில் முழு மாங்காய்களை 5 நிமிடம் வேகவைக்கவும். விசில் வந்ததும் 2 நிமிடம் இருந்தால் போதும். பிரஷர் குறைந்ததும் மாங்காயை எடுத்து, தோலையும் கொட்டையையும் நீக்கி, பிழிந்து சாறு எடுக்கவும். சர்க்கரை, ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவற்றைப் போட்டு கலக்கி பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொள்ளவும். தேவையானபோது ஒரு டம்ளர் தண்ணீர் அல்லது பாலில், 3 டேபிள் ஸ்பூன் மாம்பழக் கூழ் கலந்து சாப்பிடலாம். கோடைக்கு ஏற்ற குளிர்பானம். ஆரோக்கியத்துக்கும் நல்லது!

சிக்கு... புக்கு... குக்கு...

 படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு