Published:Updated:

மீட்டிங் காட்டூன் வி.ஐ.பி. ஃப்ளின்ஸ்டோன்

மீட்டிங் காட்டூன் வி.ஐ.பி. ஃப்ளின்ஸ்டோன்

பிரீமியம் ஸ்டோரி

இரா.நடராசன்

 கற்காலத்துக்கும் முந்தைய காலத்தில் வாழும் ஃப்ளின்ஸ்டோன் குடும்பம் உலக ஃபேமஸ்! பெட்ராக் எனும் கற்கால நகரில் டைனோசர் போக்குவரத்துக்கு பொறுப்பாளராக இருக்கும் ஃபெரட் ஃப்ளின்ஸ்டோன்  வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அவரது மகள், பெபுள்ஸ் சாலையில் யாருடனோ சுவாரசியமாக பேசுவதைக் கண்டார். அருகில் சென்று வழக்கம்போல 'பெபுள்ள்ள்ள்...ஸ்’ என கூச்சலிட்டார்.

மீட்டிங் காட்டூன் வி.ஐ.பி.  ஃப்ளின்ஸ்டோன்
##~##

ஃபெரட் ஃப்ளின்ஸ்டோன்: பெபுள்ஸ் இங்கே என்ன பண்ணறே? உன் அம்மா  வில்மா எங்கே? வழக்கம்போல ஷாப்பிங் போயாச்சா?

பெபுள்ஸ்: டாடி, ஏன் எப்ப பாரு கத்துறீங்க. இதோ பாருங்க... இவங்க பேரு கே.எஸ்.இந்துஜா. சேத்துப்பட்டு, மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கிறாங் களாம். நம்மை பத்திரிகைக்காக பேட்டி எடுக்க வந்திருக்காங்க. 'பாம்...பாம்’ தான் கூட்டிக்கிட்டு வந்தான்.

இந்துஜா: ஹலோ அங்கிள்!   உங்களை இவ்வளவு ஈஸியா சந்திப் பேன்னு நினைச்சே பார்க்கல... வாவ்!

ஃப்ளின்ஸ்டோன்: (லேசாக வெட்கப்பட்டு) ஹாய்! பத்திரிகை பேட்டியா... வாங்க, நம்ம கார்ல குகை வீட்டுக்குப் போய்கிட்டே பேசலாம்.

இந்துஜா: நீங்க வாழுற கற்காலத்தில் காரா... ஆச்சரியமா இருக்கே!

மீட்டிங் காட்டூன் வி.ஐ.பி.  ஃப்ளின்ஸ்டோன்

பெபுள்ஸ்: எங்களோட பெட்ராக் ஊர் விசித்திரமானது. பி.சி.இ 10,000 எனும் வருடத்  தில் நாங்கள் வாழ்கிறோம். பெடல் செய்தால் சத்தமும் புகையும் இல்லாமல் ஓடும் கார் இருக்கு. வா, ஏறிக்கலாம்.

இந்துஜா: ஃப்ளின்ஸ்டோன் அங்கிள் உங்கள் பொழுதுபோக்குகள் என்ன?

ஃப்ளின்ஸ்டோன்: எனக்கா ஹா... ஹா... ஹா! எனக்கு பிராண்டோசரஸ் டைனோசர்  களில் சறுக்குவது, பால் பௌலிங், மற்றும் எங்க ஊர் மேல்மட்ட ராஜ குடும்பங்களோட விருந்து சாப்பிடுவது... இதெல்லாம் பிடிக்கும்.

இந்துஜா: உங்க குடும்பம், சுற்று வட்டாரம் பற்றி...

பெபுள்ஸ்: (குறுக்கிட்டு) நான் சொல்றேன். என் அம்மா வில்மா. நான் அவர்களது ஒரே மகள்.   அம்மாவுக்கு எங்க பக்கத்து வீட்டு ஆன்ட்டி பெட்டி ரூபுள்ஸை கூட்டிட்டு ஷாப்பிங் போவது பிடிக்கும். வீட்டு வேலைகள் அப்பாவுக்குப் பிடிக்காது. அப்புறம், அப்பாவுக்கு அவரோட பாஸ்... மிஸ்டர் ஸ்லேட்டைப் பிடிக்கவே பிடிக்காது.

இந்துஜா: ஃப்ளின்ஸ்டோன் சாரோட ஃப்ரெண்ட்ஸ் பத்தி...?

மீட்டிங் காட்டூன் வி.ஐ.பி.  ஃப்ளின்ஸ்டோன்

பெபுள்ஸ்: அதையும் நானே சொல்றேன். அப்பாவோட ஒரே ஃப்ரெண்ட் பார்னிதான். கற்காலத்தில் அப்படி ஒரு ஃப்ரெண்ட் கிடைப்பது கஷ்டம்.

இந்துஜா: ஆனால், உங்க வீட்டில் ஒரு டைனோசரை செல்லப் பிராணியாக வளர்க்கிறீங்க இல்லையா...?

பெபுள்ஸ்: ஆமாம்! என் செல்ல டைனோ... வாட்ச்டாகோசரஸ். வீட்டு நாயாக டைனோவை வளர்க்கிறோம்.

இந்துஜா: அப்புறம், அந்தப் பக்கத்து வீட்டு பாம்... பாம்...

பெபுள்ஸ்: அவன் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். பார்னே ரூபுள்ஸ்ஸுக்கு குழந்தை கிடையாது. அவங்க பாம்... பாமை தத்தெடுத்து வளர்க்கறாங்க. பாம்... பாம் உலகிலேயே பலசாலியான குழந்தைன்னு பட்டம் வாங்கியவன்.

இந்துஜா: ஃப்ளின்ஸ்டோன் அங்கிள்... கார்ட்டூன் உலகின் முக்கிய வி.ஐ.பி.-யா ஆகிட்டீங்க. நீங்க யாருக்காவது நன்றி சொல்ல விரும்புறீங்களா?

ஃப்ளின்ஸ்டோன்: உண்மையில் எனக்கு என்ன சொல்றதுனே தெரியல... வில்மாவுக்கு தெரிஞ்சா பெருமையா இருக்கும்.  எங்களை உருவாக்கியது வில்லியம் ஹன்னா (William Hanna)வும் ஜோசப் பார்பெரா  (Joseph Barbera)வும்தான். 1960-ல் எங்கள் பி.சி.இ.10,000 ஆண்டு கற்கால உலகையும் எங்கள் குடும்பத்தையும் படைத்தார்கள். முதலில் காமிக் புத்தகமாத்தான் வந்தோம். பிறகு, டி.வி. சீரியல். அப்புறம் கார்ட்டூன்... அப்புறம் ஏழு மெகா படங்கள். அவங் களுக்குத்தான் நன்றி சொல்லணும்.

இந்துஜா: உங்கள் ஃப்ளின்ஸ்டோன் கார்ட்டூன்தான் உலகின் முதல் அரைமணி நேர டி.வி. எபிசோட் இல்லையா?

மீட்டிங் காட்டூன் வி.ஐ.பி.  ஃப்ளின்ஸ்டோன்

ஃப்ளின்ஸ்டோன்: (தன் பாணியில்) யா...பா...டா...பா...டூ... வில்மா. நான் வீடு வந்துவிட்டேன் ஐ ஆம் ஹோம்!

பெபுள்ஸ்: வழக்கம்போல அம்மா இல்லை. ஷாப்பிங் போயிருக்காங்க. வாங்க... நாம் பாட்டு கேட்கலாம்.

இந்துஜா: எவ்வளவு ஆச்சரியம்! பெட்ரோல் இல்லாமலே ஓடும் கார், பறவை அலகு டேப்ரெக்கார்டர். யானை துதிக்கை உறிஞ்சும் வாக்குவம் கிளீனர்... எண்ணெய் கொழுப்பு பெருவிளக்கு... மின்சாரம் தேவைப்படாத... ஆனால், குளிர்ந்த காற்று வரும் ஐஸ்கட்டி (ஏ.சி.) ரூம்! உங்ககிட்ட கத்துக்கிட நிறைய இருக்கு. வாழ்த்துகள் நான் கிளம்பறேன்!

(அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினாள்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு