Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

பிரீமியம் ஸ்டோரி

 கே.கணேசன்

 மாயா டீச்சர் வீட்டில்  சுட்டிகள் ஆஜராகி  இருந்தார்கள். டீச்சர் டேபிளில் உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அப்போது பிரசன்னா வின் கை பட்டு டேபிளில் இருந்த குண்டூசி பாக்ஸ் கீழே விழுந்தது. அதில் இருந்த குண்டூசிகள் தெறித்துச் சிதறின. பதற்றத்துடன் ''சாரி டீச்சர்'' என்றபடியே பிரசன்னாவும் சுட்டிகளும் ஒவ்வொரு குண்டூசியாக சேகரிக்கத் தொடங்கினார்கள்.

உடனே மாயா டீச்சர், பக்கத்தில் இருந்த ஃப்ரிட்ஜில் ஒட்டி இருந்த மேக்னட் பொம்மைகளை எடுத்து சுட்டிகளிடம் கொடுத்து, குண்டூசிகளை மேக்னட் மூலம் சேகரிக்கச் சொன்னார். சுட்டிகள் ஆச்சர்யத் துடனும் ஆர்வமுடனும் குண்டூசிகளைச் சேர்க்கத் தொடங்கினார்கள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்
##~##

பிரசன்னா, ''அட இந்த கேம் ஜாலியா இருக்கே? குண்டூசியைக் கொட்டிக் கொட்டி விளையாடலாமா?'' எனக் கேட்டான்.

''டீச்சர், இன்னிக்கு இதானே டாபிக்?'' என்றாள் சரண்யா.

''ரொம்ப இன்ட்ரஸ்டிங் டாபிக்தான்'' என்ற டீச்சர், தனது டேபிள் டிராயரில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து, அதில் இருந்த விதவிதமான காந்தங்களை சுட்டிகள் கையில் கொடுத்தார். பார் காந்தங்கள், குதிரைக் குளம்பு காந்தம், பட்டன் வடிவ காந்தம், பாறை வடிவ காந்தம் என ஒவ் வொன்றும் ஒவ்வொரு வடிவத்தில் இருந்தது.

''இதுக்கு ஏன் காந்தம் என்று பெயர் வந்தது டீச்சர்?'' என்று தனது பங்குக்கு கேள்வியை கேட்டான் கணேஷ்.

''மற்ற பொருட்களை (இரும்பு) ஈர்ப்பதால் அதைக் காந்தம் என்கிறார்கள்.'' என்றார் டீச்சர்.

''அதான் நடிகர்கள் எல்லாம் ரசிகர்களைத் தன் பக்கம் இழுக்க,  தங்கள் பேரோட 'காந்த்தை’ சேர்த்துக்கிறாங்களா?'' என அப்பாவி மாதிரி கேட்டான் கணேஷ்.

''டேய்... சினிமா மேட்டர்லாம் இங்க வேண்டாம்.'' என அவனை எச்சரித்  தாள் மது.

''எல்லாப் பொருளையும் காந்தங்கள் ஈர்ப்பதில்லை. இரும்பை மட்டும் காந்தம் இழுக்கும்.'' என்றபடி, தன் கையில் வைத்திருந்த பெரிய காந்தத்தை இன்னொரு கையில் இருந்த இரும்புத் துண்டுக்கு அருகில் கொண்டுபோனார் டீச்சர். கொஞ்ச தூரம் இருக்கும்போதே, வேகமாகக் காந்தத்தில் ஒட்டிக்கொண்டது இரும்புத் துண்டு.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

அடுத்து, ஐந்து ரூபாய் காயினை எடுத்து, காந்தத்தின் அருகில் கொண்டுபோனார் டீச்சர். ''காயினும் உலோகம்தான். ஆனால், அது காந்தத்தால் ஈர்க்கப்படவில்லை. ஏன்னா, காந்தங்களால் ஒரு சில உலோகங்களை மட்டுமே ஈர்க்க முடியும். இரும்பு, எஃகு இவையும் இவற்றைக் கொண்ட பொருட்களை மட்டுமே காந்தத் தால் ஈர்க்க முடியும். தாமிரம், அலுமினியம், பித்தளை, துத்தநாகம் போன்ற உலோகங்கள் காந்த சக்தியால் ஈர்க்கப்படாது'' என்று விளக்கினார் மாயா டீச்சர்.

''காந்த சக்தியைப் பற்றி இன்னும் தெரிஞ்சுக்கணும். இதை யார் முதலில் கண்டுபிடிச்சாங்க? இயற்கையிலேயே காந்தங்கள் இருக்கிறதா? இல்லை... அவற்றைச் செயற்கையா உருவாக்கினாங்களா?'' என்று கேள்வி மேல் கேள்வி அடுக்கினாள் மது.

''இரு சொல்றேன்'' என்றபடி, ஒரு பெரிய கல்லை மேஜை மேல் எடுத்து வைத்தார் மாயா டீச்சர். அதன் அருகே ஒரு சின்ன இரும்புத் துண்டைக் கொண்டு செல்ல, அது கல்லின் மேல் ஒட்டிக் கொண்டது.

''இது காந்தம் மாதிரி இல்லையே... ஆனால், காந்தம் மாதிரி செயல்படும். ஏன்னா, இவை இயற்கைக் காந்தங்கள். இதற்கு அயக்காந்தக் கல் (Magnetite) என்று பெயர். இதை, முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். இதற்கு அவர்கள், 'அன்புக் கல்’ (Loving Stone) எனப் பெயர் வெச்சாங்க. சீனர்கள் முதல்ல இதை ஜோசியம் சொல்ற  துக்கும் மாயாஜால வித்தைகளுக்கும் பயன் படுத்தினாங்க. இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே சீன, இந்திய, எகிப்தியர்கள் காந்தத்தைப் பற்றி அறிந்திருந்தார்கள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

எப்போ மனிதர்கள் காந்த சக்தியுள்ள கற்களைக் கண்டுபிடிச்சாங்களோ, அதற்கப் புறம்தான் காந்த சக்தியைப் பற்றி தெரிஞ்சுக்கவே ஆரம்பிச்சாங்க. அதன் பிறகு, செயற்கை முறையில் இரும்புத் துண்டு களுக்குக் காந்த சக்தி கொடுத்து, காந்தங்களா மாற்ற ஆரம்பிச்சாங்க.''

''டீச்சர், இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்க.'' என்றான் ஆர்வத்துடன் பிரசன்னா.

எதுவும் பேசாத மாயா டீச்சர், மேஜை மேல் சில இரும்புத் துகள்களையும், ஒரு காந்தத்தையும், ஊசி ஒன்றையும் எடுத்து வைத்தார். அந்த ஊசியைக் காந்தத்தில் தேய்த்தார். பிறகு இரும்புத் துகள்கள் மேல் அதை வைத்தவுடன், அவை காந்தத்தில் ஒட்டிக்கொண்டன.

''இந்த ஊசி, முதலில் காந்தமாக இல்லை. இப்போது காந்தமாக மாறிடுச்சு. காந்தத் துடன் உரசுவதன் மூலம் ஊசியைக் காந்தமாக மாற்ற முடியும். இதைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ காந்தமாக மாற்றலாம். காந்தத்தில் உரசப் படும் பொருளை, ஒரே திசையில் உரசினால் மட்டுமே அவை காந்தமாக மாறும்'' என்றார் மாயா டீச்சர்.

''ஏன் அந்த ஊசி காந்தமா மாறுச்சு? அதுக்குள்ளே என்ன நடந்தது? எப்படி அதனால இரும்புத் துகளை ஈர்க்க முடிஞ்சுது?'' என்று கேட்டான் கணேஷ்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''இந்தக் கேள்விக்கு விடை தெரிஞ்சுக்க உங்களை எல்லாம் இரும்புத் துகளா மாத்தறேன்.'' என்றார் மாயா டீச்சர்.

எல்லோரும் மிக மிகச் சிறிய இரும்புத் துகள்களாக ஆகியிருந்தனர். சுட்டிகளுக்குத் தலை, கை, கால்கள் இருந்தன. ஆனால், அவர்கள் உடலே உலோகமாக மாறியிருந்தது!

''இப்போது, காந்தத்தால் ஈர்க்கப் படுதல்னா என்னன்னு புரியும்'' என மாயா டீச்சர் சொல்லிக் கொண்டே...  அவர்களை ஒரு அட்டையில் நிற்க வைத் தார். அட்டையின் அடியில் காந்தத்தை வைத்து, தான் விரும்பிய திசையில் எல்லாம் இழுத்தார்.

''காந்தத்துக்கு இரண்டு துருவங்கள் உண்டு. வடக்கு ஒன்று, தெற்கு ஒன்று. அதன் இந்த இரு துருவங்களில்தான் அதிக ஈர்ப்பு விசை இருக்கும். மற்ற இடங்களில் அதாவது, நடுவில் ஈர்ப்பு குறைவாகவே இருக்கும். அதனால்தான், நடுவில் இருப்பவர்கள் மீது ஈர்ப்பு சக்தி குறைவாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள்!'' என்றார் டீச்சர்.

''என் கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கலையே...'' என்றாள், காந்தத்தைச் சுற்றி என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்ட மது.

''ஓர் இரும்பு அல்லது எஃகுத் துண்டில் அணுக் கள் இருக்கும். அதன் நடுப் பகுதியை மின்னணுக்கள் சுற்றிக் கொண்டு இருக்கும் விதத்தை அணுவின் நிலப்பரப்பு (கிtஷீனீ ஞிஷீனீணீவீஸீ) என சொல்வோம். இந்தப் படத்தில் பாருங்கள்... காந்தப் புலன் குறித்துப் புரியும். காந்தத்தில் இந்தப் பரப்புகள் எல்லாம் ஒரே திசையை நோக்கிய வண்ணம் இருக்கும். அவை அப்படி இல்லாமல் வெவ்வேறு திசைகளில் இருந்தால், அந்தப் பொருள் காந்தமாக இருக்காது!'' என்றார் மாயா டீச்சர்.

''இப்ப நாங்க காந்தத்தின் ஈர்ப்பில் இருக்கறதால, எங்க எல்லாரோட மின்னணுக்கள் நேரா இருக்கும்தானே டீச்சர்?'' என்று கேட்டாள் ஒரு சுட்டி.

''நிச்சயமா! இதைப் பாருங்க...'' என்ற மாயா டீச்சர், கம்ப்யூட்டருடன் இணைக் கப்பட்டிருந்த வெப் கேமராவை இயக்கினார். எதிரில் மானிட்டரில் சுட்டி களின் உடலில் கண்சிமிட்டுவது போல நீல விளக்குகள் அணைந்து எரிவது தெரிந்தது. அவை எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இருந்தன.

''காந்தங்கள் எதிர்த் துருவங்களை ஈர்க்கும். ஒரே துருவம்னா எதிர்க்கும். நீங்க கீழே விழுந்துடாம இருக்க, பக்கத்தில் இருப்பவரின் எதிர் துருவத்தைப் பிடிச் சுக்குங்க.'' என்றார் மாயா டீச்சர்.

''ஏன் டீச்சர், தற்காலிகக் காந்தங்கள் தற்காலிகமாகவே இருக்கு?'' என்ற சுட்டிக்கு, ''காந்தத்தில் காந்த விசைக் கோடுகள் நேராக இருக்கும். ஆனால், தற்காலிகக் காந்தமாக மாற்றப்படும் பொருளில், அவற்றைக் கீழே விட்டால், அதன் காந்த விசைக் கோடுகள் மாறிவிடும். அதனால், அவற்றின் காந்தத் திறன் நீங்கிவிடும். அவற்றைச் சூடாக்கினாலும் அதன் காந்தத் தன்மை போய்விடும்!'' என்றார் மாயா டீச்சர்.

''காந்தங்கள் எவற்றில் எல்லாம் பயன் படுத்தப்படுது?'' என்றாள் சரண்யா.

''நான் சொல்றேன்'' என்ற பிரசன்னா, ''ரேடியோ, டி.வி-க்களில் இருக்கும் ஸ்பீக்கரில், ஆடியோ மற்றும் வீடியோ டேப்களில்... பாடலும் காட்சிகளும் காந்தமாகவே பதிவு செய்யப்படுகின்றன. மோட்டார்களுக்கும் 'காந்தங்கள்’தான் அடிப்படை! பொம்மைகளிலும் காந்தம் பயன்படுகிறது. பூமிகூட ஒரு காந்தம் மாதிரிதான். பூமிக்கு நடுவிலுள்ள இரும்புக் குழம்பு, பூமிக்குக் காந்த விசையைத் தருகிறது. இதனால்தான் திசைகாட்டியின் ஊசி, வடக்குத் திசையைக் காட்ட முடிகிறது. இவ்ளோ ஏன்... செல்போன் பவுச்ல கூட காந்தங்களை உபயோகப்படுத்துறாங்க!'' என்றான்.

தொடர்ந்த டீச்சர், ''கடல் விலங்குகளும் பறவைகளும் குளிர் காலத்தில் எப்படி இடம்பெயர்கிறது தெரியுமா? பூமியின் காந்த மண்டலம் (விணீரீஸீமீtவீநீ திவீமீறீபீ) தெரிஞ்சு தான் இவற்றால் ஆயிரக்கணக்கான மைல்களை, சரியாகப் பறக்க முடியுதுனு விஞ்ஞானிகள் ஆய்வு செஞ்சிருக்காங்க!

காந்தங்களை லிஃப்டாகக் கூட உபயோகப்படுத்தலாம். தொழிற்சாலை  களில் மூலப் பொருட்களாகப் பயன்படுத்தப் படும்  அதிக எடை உள்ள இரும்புப் பாளங் களை, எளிதில் தூக்கி வேறு இடத்தில் வைக்க வேண்டியிருக்கும். அந்தச் சமயங்களில் கிரேன்போல இருக்கும் பெரிய உலோகத்துக்கு, மின்சாரத்தின் மூலம் காந்தப் புலனைச் செலுத்துவார்கள். அதன் மூலம் கிடைக்கும் காந்த சக்தியால், அதிக எடையுள்ள இரும்புப் பாளத்தை அலேக்காகத் தூக்கி, தேவையான இடத்துக்கு எடுத்துச் செல்வார்கள். அந்த இடத்தில் வைத்தவுடன் கிரேனில் செலுத்தப்படும் காந்தப் புலத்தைத் துண்டிப் பார்கள். இப்போது, காந்தப் புலனால் கிரேனில் ஒட்டி இருக்கும் இரும்புப் பாளம் விடுவிக்கப்பட்டுவிடும். வேலையும் எளிதாகும்.'' என்றபடியே பிரசன்னா, கணேஷ், மதுவை இரும்புத் துண்டங் களாக்கினார். லிஃப்ட் காந்தம் அவர்களை உயரே தூக்கிச் சென்றது.

''டீச்சர்... அவங்க கொஞ்ச நேரம் அங்கேயே இருக்கட்டும்.'' என்று சொல்லியபடி பிரசன்னாவைக் கிண்டல் செய்தாள் சரண்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு