Published:Updated:

நியூஸ்போர்ட்ஸ்

அசத்திய பந்து வீச்சாளர்கள் !

பிரீமியம் ஸ்டோரி

கே.கணேசன்

நியூஸ்போர்ட்ஸ்

 இந்திய அணி சமீபத்தில் மேற்கிந்தியத்தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இப்பயணத்தின்போது நடை பெற்ற டி20, ஒருநாள் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றது. ஒரு காலத்தில் மேற்கிந்தியத்தீவுகளுடன் மோதல் என்றாலே... 'அவர் களின் வேகப் பந்து வீச்சுக்கு நம்மவர்கள் ஈடு கொடுப் பார்களா?’ என்ற சந்தேகம் வந்துவிடும். ஆனால், இந்தத் தொடரில் மூன்று விதமான போட்டிகளிலும் இந்தியர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. டெஸ்ட் போட்டி களின் வெற்றியின் மூலம், இந்திய டெஸ்ட் போட்டிகளில் உலகத் தரவரிசையில் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண் டது.

இப்போட்டியில், சிறப்பாகப் பந்து வீசி, விக்கெட்களைச் சாய்த்ததில் இஷாந்த் சர்மாவுக்கும் ஹர்பஜனுக்கும்  சிறப்பிடம் உண்டு. அதிலும் ஹர்பஜன் சிங், இத் தொடரில் தனது 400-ஆவது விக்கெட்டை எடுத்து, அதிக விக்கெட் எடுத்த இந்தியர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.  96 டெஸ்ட் போட்டிகளில் இவர் இந்தச் சாதனையை

நியூஸ்போர்ட்ஸ்

நிகழ்த்தி இருக்கிறார். 400 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம், அதிக விக்கெட் எடுத்த வீரர்களில்

##~##

பதினோராவது இடம் ஹர்பஜனுக்கு. முப்பத்தியோரு வயதாகும் ஹர்பஜன், இந்தச் சாதனையை தனது அம்மாவுக்கு சமர்ப்பணம் செய்து இருக்கிறார். இவரது சாதனையைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளரான பிரசன்னா கூறும்போது, ''இந்தச் சாதனையைப் புரிந்தவர்களில் ஹர்பஜனும், முத்தையா முரளி தரனும்தான் ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளர்கள். ஹர்பஜன் இந்தச் சாதனையை அடைய, பல தடைகளைத் தாண்ட வேண்டி இருந்தது.'' என்றார்.

இப்போட்டித் தொடரில்... இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, தனது நூறாவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை புரிந்திருக்கிறார். முப்பத்தி மூன்று போட்டிகளில் இவர் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். இந்தத் தொடரில் மட்டும் இஷாந்த் சர்மா மேற்கிந்திய வீரர்களின் 22 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி தொடர் நாயகன் விருதையும் பெற்றுள்ளார். வெல்டன் இஷாந்த் சர்மா!

இந்தத் தொடரினைக் கைப் பற்றியதன் மூலம் 25 டெஸ்ட் போட்டி களில் கேப்டனாக ஆடியதில் வெற்றி தோல்வி விகிதாச்சாரத்தில் 5 புள்ளிகள் எடுத்து,  முன்னணியில் இருக்கிறார் நம் அணியின் தலைவர் டோனி. அடுத்து, 4.5 புள்ளிகள் எடுத்துஇருப்பவர்  ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாஹ். டோனி இதுவரை ஒரு போட்டித் தொடரைக் கூட இழக்கவில்லை என்பது கூடுதல் சிறப்பு!    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு