Published:Updated:

சிக்கு... புக்கு...குக்கு !

சிக்கு... புக்கு...குக்கு !

பிரீமியம் ஸ்டோரி
சிக்கு... புக்கு...குக்கு !

ஹாய் சுட்டீஸ், இந்த முறை ஓட்ஸில் செய்யும் ரெண்டு ரெசிபிக்களைத் தந்திருக்கிறார். சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன். இந்த ரெண்டு ரெசிபிக்களும் உங்கள் உடல்நலத்துக்கு நன்மை அளிக்கும். இவற்றைச்  சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய பயன் களையும், சிறப்புகளையும் விளக்குகிறார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி. உங்கள் அம்மாவைச் செய்து தரச் சொல்லி ருசி பாருங்களேன்.

டிக் டாக் ஓட்ஸ்!

தேவையான பொருள்கள்: ஓட்ஸ் - 2 கப்(100 கிராம்), வறுத்த வேர்க்கடலை - அரை கப்(50 கிராம்), அரிசிப்பொரி - ஒரு கப்(25 கிராம்), சாட் மசாலா - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ஓமப்பொடி - ஒரு கப், பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் - அரை கப்(ஒவ்வொன்றும் 25 கிராம்), கொத்தமல்லி சட்னி - ஒரு டீஸ்பூன்.

சிக்கு... புக்கு...குக்கு !
##~##

செய்முறை: ஓட்ஸை 2 நிமிடம் வறுக்கவும். (ஆயில் வேண்டாம்) வாயகன்ற ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து பரிமாறவும். அபாரமான சுவையுடன் இருக்கும். இதை எளிதில் செய்து விடலாம்..

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 1660 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 200 கிராம்
ப்ரோட்டீன் - 60 கி
கொழுப்பு - 68 கிராம்
கால்சியம் - 236 மில்லி கி
இரும்பு - 15 மி.கி
பீட்டா கரோட்டின் - 393 மைக்ரோ கி
ஃபோலிக் ஆசிட் - 151 மை.கி
வைட்டமின் சி - 13.5  மை.கி

டயட்டீஷியன் கமென்ட்: இதில் ஆற்றல் அதிகமாகக் கிடைக்கும். உடலுக்கு இறுக்கத்தைத் தரும்  இரும்பும், கண்களுக்கு நன்மை அளிக்கும் 'வைட்டமின்-சி’யும் தேவையான அளவு கிடைக்கிறது. நார்ச்சத்தும், உடல் உறுப்பு களுக்குத் தேவையான தாது உப்புக்களும் தேவையான அளவு கிடைக்கின்றன. மாலை வேளைகளில் செய்து கொடுக்கலாம்.

ஓட்ஸ் டபுள் டக்கர்  வெஜிடபிள் டோக்ளா!

தேவையான பொருள்கள்: ஓட்ஸ் - ஒரு கப்(100 கிராம்), உளுத்தம் மாவு (பவுடர்) - கால் கப் (25 கிராம்) தயிர் தண்ணீர் - 2 கப் கரைக்கத்  தேவையான அளவு, கேரட் துருவல் - ஒரு கப்(100 கிராம்), பச்சைப் பட்டாணி - அரை கப்(50 கிராம்), மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையானது, தாளிக்க கடுகு, நெய்.

சிக்கு... புக்கு...குக்கு !

செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் மாவாக (பவுடர்) அரைக்கவும். இதனுடன் உளுந்து மாவைக் (கடைகளில் கிடைக்கும்) கலந்து தேவையான உப்பு, தயிர் தண்ணீர் சேர்த்து, இட்லி பதத்துக்கு கலந்துகொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் கேரட் துருவல், பச்சைப் பட்டாணி, சிறிதளவு உப்பு, மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும். அடுத்து அகலமும் சற்று உயரமுமான பாத்திரத்தின் உள்ளே சிறிதளவு எண்ணெய் தடவி, கரைத்து வைத்துள்ள ஓட்ஸ் மாவை 2 கரண்டி பரவலாக ஊற்றவும். இதன்மேல் கேரட் துருவலைப் பரப்பவும். மறுபடியும் ஓட்ஸ் மாவை பரவலாக ஊற்றி இட்லியை வேகவைப்பதுபோல் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். சிறிது ஆறினவுடன் துண்டுகள் போடவும். இதன் மேல் கடுகை தாளித்துக் கொட்டவும்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 742 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 102 கிராம்
ப்ரோட்டீன் - 31 கி
கொழுப்பு - 24 கி
கால்சியம் - 408 மில்லி கி
இரும்பு - 7 மி.கி
பீட்டா கரோட்டின் - 2376 மைக்ரோ கி
ஃபோலிக் ஆசிட் - 101 மை.கி
கொலின் - 230 மை.கி

டயட்டீஷியன் கமென்ட்: இதில், புரதம் குறைந்த அளவே கிடைத்தாலும், பீட்டா கரோட்டின் மிக அதிக அளவில் கிடைக்கிறது. இதனால், கண்களுக்கு மிகவும் நல்லது. கூடவே... கொலின், போலிக் ஆசிட்  தேவையான அளவு கிடைக்கிறது. இதைக் குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் சிற்றுண்டியாகக் கொடுக்கலாம்.

படங்கள்: வி.செந்தில்குமார்

சின்னச் சின்ன தோசை!

 

தேவையானவை: தோசை மாவு- 1/2 கிலோ, வெல்லம் - 100 கிராம், தேங்காய்ப் பூ,-தேவையானது, ஏலக்காய் - 3

செய்முறை: வெல்லத்தைத் தூளாக்கி, சிறிது நீரில் கரைத்து, வடிகட்டி அடுப்பில் வைக்கவும். நுரைத்து வரும்போது தேங்காய்ப் பூ, ஏலப்பொடி சேர்த்து பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து, தோசைக்கல்லில் மாவை சின்னதாக ஊற்றி, திருப்பிவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். இன்னொரு தோசையையும் ஊற்றிக் கொள்ளவும். தோசையை திருப்ப வேண்டிய சமயத்தில் இனிப்புக் கலவையை தோசை மீது பரப்பிவிட்டு, ஏற்கெனவே வெந்து எடுத்து வைத்துள்ள தோசையை அதன் மேல் வைத்து, தோசைக் கரண்டியால் நன்கு அழுத்தி, மெதுவாக (அரை நிமிடம்) திருப்பிப் போட்டு எடுத்து சூடாக பரிமாறவும். குழந்தைகள் இதை விருப்பமாக உண்பர். இதையே வெங்காயம், குறுமிளகு, தக்காளி ஆகியவற்றை வைத்து காரச் சட்னி செய்துகொண்டு, காரத் தோசையும் செய்யலாம்.

சிக்கு... புக்கு...குக்கு !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு