Published:Updated:

கிட்ஸ்@கிச்சன்.காம்

மித்ரா, படங்கள்: எம்.உசேன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

லோ ஃப்ரெண்ட்ஸ்... இந்த முறை அம்மாவின் முழு உதவியோடு ஒரு ரெசிப்பியைச் செய்யப்போறீங்க. இந்த ரெசிப்பியை உங்களுக்கு செய்துகாட்டுபவர், சமையல்கலை வல்லுநர் ஷர்மிளா ஆன்ட்டி.

பெப்பர் பொட்டேட்டோ!

தேவையானவை: உருளைக்கிழங்கு - 3, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், டொமேட்டோ கெச்சப் - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்குகளை நல்லாக் கழுவி எடுத்துக்குங்க.  அதை அம்மாகிட்ட கொடுத்து, வேகவைக்கச் சொல்லுங்க. பிறகு, தோலை உரிச்சு, ஆரஞ்சுப் பழச் சுளை வடிவத்தில் நறுக்கி கொடுக்கச் சொல்லுங்க. (கத்தியைக் கையாளும் வேலையை கண்டிப்பாக நீங்க செய்யக் கூடாது).

அடுத்து, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பில் வைத்து சூடாக்கணும். எண்ணெய் சூடானதும், அதில் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போடுங்க. உப்பு, மிளகுத்தூள் தூவிப் புரட்டி எடுங்க.

கிட்ஸ்@கிச்சன்.காம்

அவ்வளவுதான்.. பெப்பர் பொட்டேட்டோ ரெடி! 'டொமேட்டோ கெச்சப்’ சேர்த்துச் சாப்பிட்டால், சூப்பர் சுவையாக இருக்கும்.

'நானே செஞ்சதாக்கும்’னு காலரைத் தூக்கிவிட்டுக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு