Published:Updated:

ஈஸியா செய்யலாம் யோகா! - 5

பிரேமா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

 ண்பர்களே... யோகா பயிற்சிகளை வெறும் தரையில் செய்யக் கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும். அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும்போது, தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.

வஜ்ராசனம்!

'எந்த ஆசனத்தையுமே சாப்பிட்டதும் செய்யக் கூடாது. ஆனால், வஜ்ராசனத்தை மட்டும் சாப்பிட்டதும் செய்யலாம். இந்த முறை நாம் செய்யப்போவது அதுதான்’ என்கிறார், உங்களுக்கு ஆசனங்களைக் கற்றுத் தரும் யோகாசன ஆசிரியை விஜயா ராமச்சந்திரன்.

 செய்முறை:

• விரிப்பின் மீது கால்களை நீட்டி அமர்ந்துகொள்ளவும்.

•  வலது காலை மடக்கி, வலது புட்டத்தின் அடியில் வைக்கவும்.

•  பிறகு, இடது காலை மடக்கி, இடது புட்டத்தின் அடியில் வைக்கவும்.

•  இரு கால்களின் கட்டை விரலும், ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.

•  முதுகுத் தண்டு நேராக இருக்குமாறு, நிமிர்ந்து உட்காரவும்.

•  உள்ளங்கையை மேல் நோக்கி விரித்து, விரல்களைப் பிணைத்து, படத்தில் காட்டியபடி, மடியில் வைத்துக்கொள்ளவும். இதற்குப் பெயர், 'தியான முத்திரை’.

•  மூச்சு சீராக இருக்கட்டும். இந்த நிலையில் மனதுக்குள் 1 முதல் 25 எண்ணும் வரை இருக்கலாம்.

•  பிறகு, படிப்படியாக கால்களை நீட்டி, பழைய நிலைக்கு வரவும்.

ஈஸியா செய்யலாம் யோகா! - 5

பலன்கள்:

•  நாம் சாப்பிட்ட உணவு சீரான முறையில் ஜீரணமாகும்.

•  தேவையில்லாத கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.

•  அஜீரணத்தைப் போக்கும்.

•  இதய படபடப்பைப் போக்கும்.

•  கால் முட்டி வலி, இடுப்பு வலி இருந்தால், தொடர்ந்து வஜ்ராசனம் செய்யும்போது நீங்கிவிடும்.

 குறிப்பு: குழந்தைகளுக்கு கால்களை நன்கு மடக்கி நீட்ட முடியும். எனவே, படிக்கும்போதும் ஒரு விரிப்பின் மீது இந்த நிலையில் அமர்ந்து படிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு