கே.கணேசன்

ஹாய் சுட்டீஸ்! எல்லோரும் அறுபத்தி நான்காவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள்! இந்த வேளையில் நாம் மீண்டும் ஒரு முறை காந்தி அடிகளாரைக் காப்பியடிக்கலாமா? ஏன் அடிக்கடி காந்தியடிகளையே காப்பி அடிக்கறோம், அப்படீன்னு சிலருக்கு கேள்வி எழலாம். அவங்களுக்கு எல்லாம் ஒரே பதில், உலகம் முழுவதும் மக்களுக்காகப் போராடுபவர்கள்... போராடி ஜெயித்தவர்கள் எல்லோருமே தங்களுடைய ரோல் மாடலா காந்திஜி யைத்தான் சொல்றாங்க. அப்படிப்பட்ட உலகம் போற்றும் மனிதரின் வாழ்க்கையில் இருந்து நாம் பல பாடங்களைக் காப்பி அடிப்பது நல்லதுதானே! வாங்க, அவரது எளிமையையும் உறுதியையும் காப்பி அடிக்கலாம்!

பள்ளிகளுக்கு சுட்டிகள் எல்லோரும் சீருடை அணிந்து செல்கிறீர்கள். அவரவர் வசதிக்கேற்ப துணியின் தரம் அமைந்திருக்கும். பணக்கார சுட்டியாக இருந்தால் சீருடையின் தரம் மிக அதிகமாக இருக்கும். சீருடையிலும் தர வேறுபாடு உள்ளது. ஆனால், காந்தியடிகளின் கதையோ வேறு. அவர் வணிகக் குடும் பத்தைச் சேர்ந்தவர். அவர் மேல் படிப்புக்காகவும் பணிக்காகவும் லண்டன் போன்ற பல வெளிநாடு களுக்குச் சென்றிருக்கிறார். அப்போது எல்லாம் அவர் அந்த நாட்டு பருவ நிலைக்கு ஏற்ற மேல் தட்டு வர்க்கத்தின் ஆடைகளான கோட், சூட் ஆகியவற்றை அணிந்து வந்தார். இந்தியா திரும்பிய அவர், இந்திய விடுதலைக்கான போராட்டங்களில் ஈடுபட்டபோது, அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. மக்கள் ஏன் இன்னும் நம்மிடம் நெருங்கவில்லை... ஏதோ ஒன்று, அவர்கள் நம்மை நெருங்க விடாமல் தடுக்கிறது என உணர்ந்தார்.

இந்தச் சமயத்தில் அவர் விடுதலைப் போராட்டத்தை இந்தியா முழுவதும் பரப்ப நினைத்தார். அதற்காக, கோபாலகிருஷ்ண கோகலேயிடம் ஆலோசனை கேட்டார். அப்போது கோகலே, ''முதலில் இந்தியா முழுவதையும் சுற்றிப் பாருங்கள்'' என்றார். காந்தியடிகள் இந்தியாவின் பல பகுதிகளுக்குப் பயணம் செய்தார். அப்போது, மக்கள் மிகவும் வறுமையில் வாடுவதையும், உடுத்துவதற்கு மாற்றுத் துணி இல்லாமல் ஒரே துணியை துவைத்துக் காயவைத்து உடுத்துவதையும் அறிந்தார்.

அந்தப் பயணத்தின் ஒரு கட்டமாக காந்தியடிகள் தென்னிந்தியாவுக்கு வந்தார். 1921 செப்டம்பர் மாதத்தில் அவர் மதுரைக்கும் விஜயம் செய்தார். அப்போது அங்கு அவரைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களின் வறுமை நிலை காந்தியை மிகவும் யோசிக்க வைத்தது. கிழிந்து, நைந்து போயிருந்த ஆடைகளை அணிந்தவர்களையும், மேலாடை அணிய வசதி இல்லாத மக்களையும் கண்டார். தானும் அந்த மக்களில் ஒருவனாக

வேண்டும் என்றால் அவர்களின் பிரதிநிதியாக தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், தனது உடைகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று முடிவுசெய்தார்.

ஆம்! அன்று முதல் அவர் தனது உடையாக ஒரு வேட்டியும் ஒரு மேல் அங்கியும் மட்டுமே அணிய ஆரம்பித்தார். நல்ல ஆடைகளை அணிய அவருக்குப் போதிய வசதி இருந்தும், அவற்றை மன உறுதியுடன் தவிர்த்தார். எளிய ஆடையில்... மக்களோடு மக்களாகக் கலந்து ஆங்கிலேயருக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடர்ந்தார் காந்தியடிகள்.

அவர் நல்ல உயர்தர ஆடைகளை அணிந்திருந்த காலத்தில் தென்னாப் ரிக்காவில்... வெள்ளை அதிகாரியால் ஓடும் ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டார். அதே காந்தி, பிற்காலத்தில் தனது உணர்வுப் பூர்வமான போராட்டத்தின் மூலம் மக்களிடம் கிடைத்த ஆதரவால் வெறும் வேட்டி, மேலங்கியை மட்டுமே அணிந்தபடியே லண்டன் மாநகர் சென்று, ஆங்கிலேய அரசப் பிரதிநிதிகளுடன் வட்டமேசை மாநாடுகளில் கலந்து கொண்டார். அப்போது அவரை அந்நாட்டில் வெளியான பத்திரிகைகள், 'அரை நிர்வாணப் பக்கிரி’ என்ற பொருளில் கிண்டல் செய்தனர். ஆனால், அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆங்கிலேயருக்கு எதிரான தனது போராட்டங்களைத் தொடர்ந்தார். இறுதியில் வெற்றியும் பெற்றார்.

அதனால், சுட்டீஸ்! உடையில் இல்லை உயர்வு, உள்ளத்தின் உறுதியில்தான் இருக் கிறது. அந்த வகையில், காந்தியடிகளின் உறுதியான போராடும் திறனையும் அவரது எளிமையையும் காப்பி அடிக்கலாம் வாங்க!