ஹாய் சுட்டீஸ், இந்த முறை முள்ளங்கியைச் சேர்த்து செய் திருக்கும் பராத்தா, பாசிப் பருப்பை வைத்து சத்துமா ஸ்வீட் என இரண்டு சூப்பர் ரெசிபிக்களைச் செய்து இருக்கிறார் சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன். இது உங்கள் உடல் நலத்துக்கு நன்மை அளிக்கும். அம்மாகிட்ட செஞ்சு தரச் சொல்லி ருசியுங்கள்!

இவற்றைச் சுட்டிகள் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய பயன்களையும், சிறப்புகளையும் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி விளக்குகிறார்.

முள்ளங்கி பராத்தா!

தேவையானவை: முள்ளங்கித் துறுவல் - ஒரு கப்(100 கிராம்), பன்னீர்- கால் கப் (25 கிராம்), இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத் தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்(5 கிராம்), உப்பு, எண்ணெய் - தேவையானது.

மேல் மாவுக்கு: மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப்(200 கிராம்), உப்பு, எண்ணெய் - தேவையானது.

செய்முறை: மாவில் உப்பு சேர்த்து, நீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, முள்ளங்கித் துறுவல், பன்னீர்த் துறுவல், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு, சிறிதளவு மாவை உருட்டி, கிண்ணம் போல் செய்யவும். நடுவில் சிறிதளவு முள்ளங்கிக் கலவையை வைத்து மூடி, மெல்லியதாகத் தட்டி, தோசைக் கல்லில் போட்டு, 2 பக்கமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். காய் சாப்பிட பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள், இந்த பராத்தாவை சமர்த்தாகச் சாப்பிடுவார்கள்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 2494 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 330 கிராம்
புரோட்டீன் - 51 கி
கொழுப்பு - 107
கால்சியம் - 93 மில்லி கி
இரும்பு - 9.3 மி.கி
பீட்டா கரோட்டின்-2504 மைக்ரோ கி
ஃபோலிக் ஆசிட் - 280 மை.கி
கொலின் - 47 மை.கி

டயட்டீஷியன் கமென்ட்:  இதில் உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கிறது. கொழுப்பும் போதுமான அளவுக்குக் கிடைக்கும். வாழைத்தண்டைப் போலவே முள்ளங்கியும் வயிற்றில் சேரும் கல்லைக் கரைக்க வல்லது. இதில் நீர்ச் சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரகத்துக்கு நல்லது. சுட்டிகள் இதைச் சாப்பிட்டால் சிறுநீர் எளிதாகக் கழிக்கலாம். இது வயிற்றில் தேவையில்லாத பொருளைத் தங்க விடாது. காய்கறிகளை விரும்பாத சுட்டிகள்கூட முள்ளங்கி பராத்தாவின் வித்யாசமான சுவைக்காக சாப்பிடுவார்கள். இதில் நார்ச்சத்தும், தாது உப்புக்களும் போதுமான அளவுக்குக் கிடைக்கும். காலை, மாலை டிபனாகக் கொடுக்க லாம்.

பயத்தம் மாவு 'திடீர்’ ஸ்வீட்!

தேவையானவை: வறுத்த பயத்தம் பருப்பு - ஒரு கப்(200 கிராம்), பொடித்த சர்க்கரை - ஒன்றேகால் கப்(200 கிராம்), ஏலத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 100 கிராம், முந்திரி, திராட்சை - ஒரு டேபிள் ஸ்பூன்(தலா 10 கிராம்).

செய்முறை: வறுத்த பயத்தம் பருப்பை மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் சர்க்கரைத் தூளையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். ஏலத்தூள் சேர்க்கவும். வாணலியில் நெய்யை சூடு பண்ணி, முந்திரி, திராட்சையைப் பொரித்து மாவில் கொட்டவும். நன்றாகக் கலந்து, விளிம்பு உயரமாக உள்ள தட்டில் கொட்டி, நன்றாகக் கரண்டியினால் அழுத்தி சமப்படுத்தி, கத்தியால் துண்டுகளாக கோடு போடவும். உடனே தட்டில் இருந்து எடுக்க வேண்டாம். பிறகு, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்துப் பரிமாறவும். உடனடி ரெசிபியாகச் செய்து, பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்குக் கொடுத்து அசத்தலாம்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 1143 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 145 கிராம்
புரோட்டீன் - 30 கி
கொழுப்பு - 49 கி
கால்சியம் - 167 மில்லி கி
இரும்பு - 10.9 மி.கி
பீட்டா கரோட்டின் - 168 மைக்ரோ கி
போலிக் ஆசிட் - 72 மை கி

டயட்டீஷியன் கமென்ட் : பயத்தமாவு ஸ்வீட்டை, சத்துக் குறைவாக இருக்கும் சுட்டிகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம். இந்தப் பழக்கம் பழங்காலத்தில் இருந்தே வருகிறது. குழந்தைகள் காப்பு மையங்களில் இதை உருண்டை செய்து கொடுப்பார்கள். இதில் உடனடியாக அதிக ஆற்றல் கிடைக்கிறது. பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் கண்களுக்கு அதிக நன்மை அளிக்கும். சோம்பல் தன்மையைக் குறைத்து சுட்டிகளை துறுதுறுவென இருக்கச் செய்யும். நெய் சேர்ப்பதால் கால்சியம் சத்தும் கூடுதலாகக் கிடைக்கும். இதில் உள்ள புரதம், கார்போ ஹைட்ரேட் மற்றும் தாது உப்புக்கள் உடலுக்கு நன்மை அளிப்பவை. இது சுட்டிகளின் அன்றாட உடல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. இதை லஞ்ச் பாக்ஸில் ஒன்று அல்லது ரெண்டு பீஸ் வைத்து விட்டால் சுட்டிகள் காலையும் மாலையும் ஸ்நாக்ஸாகச் சாப்பிடலாம்.

படங்கள்: வி.செந்தில்குமார்