Published:Updated:

கனவு ஆசிரியர் - விளையாட்டால் வினா தொடுக்கும் ஆசிரியர்

லோ.இந்து படங்கள் : வி.சதீஸ்குமார்

கனவு ஆசிரியர் - விளையாட்டால் வினா தொடுக்கும் ஆசிரியர்

லோ.இந்து படங்கள் : வி.சதீஸ்குமார்

Published:Updated:

நமக்கு நன்கு தெரிந்த விளையாட்டுகளில், பள்ளிப் பாடங்களைப் புகுத்தி, புதுமையான முறையில் பாடங்களை நடத்துகிறார், ஆதலையூர் சூரியக்குமார்.

மேலூர், அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியின் சமூகவியல் ஆசிரியர், சூரியக்குமார். பயணக் கட்டுரைகள், தன்னம்பிக்கைக் கட்டுரைகள், கவிதைத் தொகுப்பு என ஏழு புத்தகங்கள் எழுதியுள்ளார். இவருடைய 'தொடர்பு எல்லைக்கு வெளியே’ என்னும் கவிதை நூல், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் விருதினைப் பெற்றது. 'காற்றில் அலையும் செய்திகள்’ என்ற கவிதை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

'மாணவர்களை உளவியல் ரீதியாகப் புரிந்து நடத்த வேண்டும். படிப்பைத் தாண்டி இன்னும் பெரிதாக அவர்கள் யோசிக்கச் சிறந்த முறை, விளையாட்டு. என் வகுப்பறைகள் பெரும்பாலும் மைதானம்தான்'' என்கிற சூரியக்குமார், 10-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பாடங்களை உருவாக்கி இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கனவு ஆசிரியர் - விளையாட்டால் வினா தொடுக்கும் ஆசிரியர்

''பலவகை விளையாட்டுகளும் இதில் அடங்கிவிடுவதால், முழு உடற்பயிற்சியும் கிடைக்கிறது. மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது. உதாரணமாக, 'படி படி கபடி’ என்ற விளையாட்டு. இது, மாணவர்களை 'நெடுவினா’ படிக்கச் செய்வதற்கான விளையாட்டு. கபடி டீமில் இருப்பது போல டீமுக்கு ஏழு பேர் வீதம், இரண்டு டீம்கள். டாஸ் ஜெயித்த அணி, முதலில் மூச்செடுத்து ஆடும். இதில் ஆசிரியரே நடுவர். அவர் ஒரு நெடு வினாவை, முதலில் ஆடிச்செல்லும் மாணவியிடம் கேட்பார். அதற்கான விடையை, ஆடிச் செல்லும் மாணவி, எதிர் அணியினரிடம் சொல்ல வேண்டும். முழுமையாகச் சொல்லி முடித்துவிட்டால், எதிர் அணியில் ஒருவர் அவுட். இதற்கு ஒரு பாய்ன்ட். இந்த பாய்ன்ட் போதும் என்றால், ஆட்டக்காரர் தமது அணிக்குத் திரும்பிவிடலாம். இரண்டு பேரை அவுட் செய்ய விரும்பினால், எதிர் அணியினர், இரண்டாவது கேள்வியைக் கேட்கலாம். இதற்கும் ஆட்டக்காரர் சரியான விடையைச் சொல்லிவிட்டால், எதிர் அணியில் இரண்டு பேர் அவுட்.

ஆட்டக்காரர், தடுமாற்றமும் இடைவெளியும் இல்லாமல் விடையைச் சொல்ல வேண்டும். 10 நொடிகளுக்கு மேல் இடைவெளி விழுந்தால், கேள்வி கேட்ட அணிக்கே மதிப்பெண். அதற்குப் பெயர் ரைடர் அவுட்'' என்கிறார் சூரியக்குமார்.

கனவு ஆசிரியர் - விளையாட்டால் வினா தொடுக்கும் ஆசிரியர்

இதுபோல, ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு 20/20 கிரிக்கெட், த்ரோ பால் என ஒவ்வொரு விளையாட்டுக்கும் மாணவிகளிடம் நல்ல வரவேற்பு.

''ஒவ்வொரு நாளும் சோஷியல் சயின்ஸ் கிளாஸ் எப்ப வரும்’னு வெயிட் பண்ணிக்கிட்டே இருப்போம். அந்த வகுப்பு வந்துட்டாலே, ஜாலிதான். இன்னிக்கி யார் ஜெயிப்பாங்களோனு ரொம்ப

கனவு ஆசிரியர் - விளையாட்டால் வினா தொடுக்கும் ஆசிரியர்

த்ரில்லிங்கா இருக்கும்'' என்கிறார் ஒரு மாணவி.

''விளையாடும் டீம்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், சோட்டா பீம், டோரிமான் என்றும் பெயரிட்டு விளையாடுவோம். இது, இன்னும் ஜாலியா இருக்கும். 'நம்ம சோட்டா பீமை, டோரிமான் முந்துறான்... விடக் கூடாது. சோட்டா பீம் கமான்... கமான்’ என உற்சாகப்படுத்துவோம். விளையாடுறவங்களுக்கு மட்டும் இல்லாமல், பார்க்கிறவங்க மனசுலயும் பாடங்கள் அழுத்தமாப் பதியும். குறிப்பாக, ஆண்டுகள், இடங்கள் மறக்காது'' என்கிறார் இன்னொரு மாணவி.

''ஒரு விஷயத்தைக் கற்றுக்கொடுக்கும் முறையில்தான் அதன் வெற்றி, தோல்வி அடங்கி இருக்கு. வருங்கால சமூகத்தைத் துடிப்பாகச் செயல்படுத்தப்போகும் என் மாணவிகளின் வெற்றிக்கு  என்னால் முடிந்த சிறிய பங்களிப்பு இது'' என்கிறார்  சூரியக்குமார் புன்னகையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism