'அநலெயோ’ என்றால் என்ன?

புக் கிளப் !
புக் கிளப் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஜந்தா, நட்டை, லெக்ரோ, யோசிகே ஆகிய நான்கு பெயர்களின் முதல் எழுத்துகள். இந்த நான்கு பேரும் மனிதர்களோ, விலங்குகளோ, பறவைகளோ இல்லை. கைக்கடிகாரங்கள். ஆமாம். கைக்கடிகாரங்களுக்கு என்று அழகான உலகம் ஒன்று இருக்கிது. அங்கே, விநாடியார் என்ற தாத்தா எச்சரித்தும், அந்த உலகத்தின் மர்ம அறைக்குள் லெக்ரோ என்கிற கைக்கடிகாரம் போகிறது. அதைத் தேடி மற்ற மூன்று கைக்கடிகாரங்களும் அந்த அறைக்குள் செல்கின்றன. அவர்கள், லெக்ரோவைக் கண்டுபிடிச்சாங்களா... இல்லையா என்பதுதான் கதை. அநலெயோ என்கிற இந்த கதைப் புத்தகம் படிக்கச் சுவையாகவும், புதியதோர் உலகுக்கே நம்மை அழைத்துச்செல்லும் விதமாகவும் சாய் சுந்தரராஜன் எழுதியிருக்கிறார்.

புக் கிளப் !

'இன்னைக்கு கீரைக்குழம்பா... அய்யய்யோ எனக்கு வேண்டாம்’ என்று அம்மாவிடம் சொல்பவர்கள் பட்டியலில் நீங்களும் இருக்கிறீர்களாரா?

அப்படி என்றால், 'கண்ணனும் இலை ராஜாவும்’ கதையை அவசியம் படியுங்கள். அந்தப் பள்ளியில், வகுப்புத் தலைவனாக, ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்க வேண்டும். அதற்காக ஒரு சுட்டிப் பையன் பயிற்சி செய்யும்போது,  இலை உலகத்தில் விழுந்துவிடுகிறான். அந்த இலை உலகத்துக்கு வரும் பிரச்னையைத் தீர்த்து, எப்படி வகுப்புத் தலைவன் ஆகிறான் என்பதை விறுவிறுப்பாகச் சொல்கிறது கதை. சத்தான கீரைகளின் பெருமைகளையும் கதையோடு சொல்லியிருப்பது வெகு அழகு.

அநலெயோ,
கண்ணனும்
இலை ராஜாவும்
சாய் சுந்தரராஜன்
வாதினி பதிப்பகம்
19/29, ராணி அண்ணா
நகர்,
கே.கே.நகர், சென்னை.
(ஒவ்வொன்றும்

புக் கிளப் !

99)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism